search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    கடிகாரம் கட்டாயம் - மிஸ் ஆனா 5 ரன்கள் காலி.. ஐ.சி.சி. புது விதிமுறை
    X

    கடிகாரம் கட்டாயம் - மிஸ் ஆனா 5 ரன்கள் காலி.. ஐ.சி.சி. புது விதிமுறை

    • விதிமுறையை சோதனை செய்ய ஐ.சி.சி. முடிவு செய்தது.
    • கடிகாரத்தை பயன்படுத்தும் முறை கொண்டுவரப்படுகிறது.

    சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கடிகாரத்தை (Stop Clock) பயன்படுத்தும் முறையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. சோதனை அடிப்படையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கியது. 2024 ஏப்ரல் மாதம் வரை இந்த முறையை சோதனை செய்ய ஐ.சி.சி. முடிவு செய்திருந்தது.

    எனினும், இது தொடர்பாக போட்டிகள் முன்கூட்டியே முடிவடைந்துள்ளதாக போட்டிகளை நடத்தும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பந்து வீசும் அணியினர் இரு ஓவர்களுக்கு இடையில் 60 நொடிகளுக்கு மேல் நேரம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை சரிபார்க்கவே கடிகாரத்தை பயன்படுத்தும் முறை கொண்டுவரப்படுகிறது.

    இந்த சோதனையின் கீழ் போட்டிகளின் இடையில் ஓவர்களுக்கு இடையில் வீரர்கள் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார்களா என்று கண்காணிக்கப்படும். அதாவது ஒரு ஓவர் பந்து வீசியதும், அடுத்த ஓவரில் பந்து வீசுவதற்கு அந்த அணி 60 நொடிகளுக்குள் தயாராக வேண்டும்.

    இதற்கு உடன்பட மறுக்கும் வகையில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் பந்துவீசும் அணிக்கு இரண்டு முறை எச்சரிக்கை வழங்கப்படும். தொடர்ந்து பந்து வீச தாமதமாக்கும் பட்சத்தில் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்பட்டு விடும். சோதனை முறையில், இது போட்டிகளை விரைந்து முடிக்க உதவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதன் காரணமாக இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் ஐ.சி.சி. டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில் இருந்தே கடிகாரத்தை பயன்படுத்தும் புதிய வழிமுறை அமலுக்கு வரும் என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து நடைபெறும் ஐ.சி.சி.யின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் அனைத்திலும் இந்த விதிமுறை பின்பற்றப்பட இருக்கிறது.

    புதிய விதிமுறை அமலுக்கு வரும் போது, மைதானத்தில் பெரிய திரையில் டிஜிட்டல் கடிகாரம் ஒளிபரப்பப்படும். அதில் ஓவர்களின் இடையில் 60 நொடிகள் தலைகீழாக செல்லும் காட்சிகள் இடம்பெறும். இவ்வாறு செய்யும் போது இரு அணி வீரர்களும் ஓவர்களின் இடையில் எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறோம் என்று பார்க்க முடியும்.

    Next Story
    ×