search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலகக்கோப்பை"

    • காவி நிறத்தில் பயிற்சி ஜெர்சிகளை அறிமுகப்படுத்தி அணியை காவி நிறமாக்க முயன்றனர்.
    • ராகுல் காந்தியின் இந்த கருத்துக்காக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

    உலகக்கோப்பை இறுதிப் போட்டி கொல்கத்தா அல்லது மும்பையில் நடந்திருந்தால் இந்தியா கோப்பையை வென்றிருக்கும் என்று மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

    மேற்கு வங்காளம், கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கில் கட்சி தொண்டர்களிடம் மம்தா பானர்ஜி உரையாற்றினார். அப்போது, இந்திய கிரிக்கெட் அணியை "காவி நிறமாக்கும்" முயற்சிகள் நடப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

    இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-

    மத்தியில் ஆளும் ஆட்சி முழு நாட்டையும் காவி வண்ணம் பூச முயற்சிக்கிறார்கள். நம் இந்திய வீரர்களைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம். மேலும் இறுதிப்போட்டி கொல்கத்தா அல்லது வான்கடேவில் (மும்பையில்) நடந்திருந்தால் நாம் உலகக் கோப்பையை வென்றிருப்போம் என்று நம்புகிறேன்.

    அவர்கள் காவி நிறத்தில் பயிற்சி ஜெர்சிகளை அறிமுகப்படுத்தி அணியை காவி நிறமாக்க முயன்றனர். வீரர்கள் எதிர்த்தனர். இதன் விளைவாக, அவர்கள் போட்டிகளின்போது அந்த ஜெர்சிகளை அணிய வேண்டியதில்லை. பாவிகள் எங்கு சென்றாலும், அவர்கள் தங்கள் பாவங்களை எடுத்துச் செல்கிறார்கள்.

    இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடியது. பாவிகள் கலந்துகொண்ட போட்டியைத் தவிர உலகக் கோப்பையில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றனர்.

    முன்னதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ராஜஸ்தானில் நடந்த பொதுக்கூட்டத்தின்போதான உரையில், "உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அவர் "துர்ரதிர்ஷ்டசாலி'' என்ற வார்த்தையைப் பிரயோகம் செய்தார்.

    ராகுல் காந்தியின் இந்த கருத்துக்காக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஆஸ்திரேலியா 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
    • இந்திய அணிக்கு ரசிகர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

    குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    3வது முறையாக உலகக்கோப்பையை வெல்வோம் என்கிற இந்திய அணியின் கனவு இந்த முறையும் கனவாகவே போனது. இருப்பினும், இந்திய அணிக்கு ரசிகர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், உலகக்கோப்பையில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துக்களும் இந்திய அணிக்கு பாராட்டுகளும் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில்," உலகக் கோப்பையில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துகள். போட்டியின் மூலம் அவர்களின் ஒரு பாராட்டுக்குரிய செயல்திறன் மற்றும் ஒரு அற்புதமான வெற்றியில் உச்சக்கட்டத்தை அடைந்தது. இன்று அவரது சிறப்பான ஆட்டத்திற்காக டிராவிஸ் ஹெட்க்கு பாராட்டுக்கள்.

    அன்புள்ள இந்திய அணி, உலகக் கோப்பையின் மூலம் உங்கள் திறமையும் உறுதியும் குறிப்பிடத்தக்கது. நீங்கள் மிகுந்த உற்சாகத்துடன் விளையாடி தேசத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறீர்கள்.

    நாங்கள் இன்றும் எப்போதும் உங்களுடன் துணை நிற்கிறோம்" என குறிப்பிட்டிருந்தார்.

    தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பதிவில்," உலகக் கோப்பையில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துகள்.

    அரையிறுதி வரை தோற்கடிக்க முடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தி, இறுதிப் போட்டிக்கு உற்சாகமாக நுழைந்த இந்திய அணிக்கு பாராட்டுக்கள். உங்கள் நெகிழ்ச்சியும் ஆர்வமும் உண்மையிலேயே பாராட்டுக்குரியது" என்றார்.

    • உலகக்கோப்பை இறுதிப்போட்டி நாளை நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
    • போட்டியை நேரலையில் திரையிட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு.

    உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டி குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டியை காண உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

    பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இறுதிப்போட்டியை நேரில் காணவும் ரசிகர்கள் அகமதாபாத்திற்கு படையெடுத்துள்ளனர்.

    இந்நிலையில், சென்னை மக்கள் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியை காண பொது வெளியில் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னை, மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் நேரலையில் திரையிட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

    • உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
    • ஆணையர் (கலால்) கிருஷ்ண மோகன் உப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. குஜராத் மாநிலத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்த போட்டி நாளை மதியம் நடைபெற இருக்கிறது.

    இந்த போட்டியை காண உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், பிரதமர் நரேந்திர மோடி உள்பட முக்கிய பிரபலங்கள் பலரும் இறுதிப்போட்டியை நேரில் பார்வையிட இருக்கின்றனர்.

    கிரிக்கெட் ரசிகர்களுக்கு முக்கிய நாளான நாளைய தினத்தில், சத் பூஜை முன்னிட்டு டெல்லியில் நாளை ஒரு நாள் மட்டும் மதுபானக் கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சாத் என்பது உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்தவர்களால் சூரியனை வழிபடும் ஒரு முக்கிய பண்டிகையாகும்.

    இதுகுறித்து, ஆணையர் (கலால்) கிருஷ்ண மோகன் உப்பு வெளியிட்ட அதிகாரப்பூர்வ உத்தரவின்படி, பிரதிஹர் சஷ்டி அல்லது சூர்ய சஷ்டி (சத் பூஜை) ஞாயிற்றுக்கிழமை உலர் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஒரு இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகளுக்கு இடையில் போட்டி நிலவி வந்தது.
    • இங்கிலாந்து நிர்ணயித்த 338 ரன்கள் என்ற இலக்கை, 6.4 ஓவர்களில் 30 ரன்கள் மட்டுமே பாகிஸ்தான் எடுத்தது.

    இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

    நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா 3-வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. இன்னும் ஒரு அணிதான் அரையிறுதிக்கு முன்னேற வேண்டி இருந்தது.

    இந்த ஒரு இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகளுக்கு இடையில் போட்டி நிலவி வந்தது.

    இந்நிலையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக பாகிஸ்தான் அணி வெளியேறியது.

    இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து நிர்ணயித்த 338 ரன்கள் என்ற இலக்கை, 6.4 ஓவர்களில் 30 ரன்கள் மட்டுமே பாகிஸ்தான் எடுத்தது.

    இன்றைய போட்டியில் இங்கிலாந்தை பாகிஸ்தான் வென்றாலும் அரையிறுதிக்கு தகுதி பெற முடியாத சூழல். இருப்பினும் பாகிஸ்தான் தோல்வியையே சந்தித்து.

    இதனால், அரையிறுதிக்கு 4வது அணியாக நியூசிலாந்து முன்னேறியுள்ளது. இதையடுத்து வரும் 15-ந்தேதி மும்பையில் நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.

    • டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆட முடிவு செய்தது.
    • இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்களை குவித்தது.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் தங்களது கடைசி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆட முடிவு செய்தது.

    அதன்படி களமிறங்கிய டேவிட் மலான் மற்றும் ஜானி பேர்ஸ்டோ முறையே 31 மற்றும் 59 ரன்களை குவித்தனர். அடுத்து களமிறங்கிய ஜோ ரூட் 60 ரன்களிலும், பென் ஸ்டோக்ஸ் 84 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். அடுத்தடுத்த வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். போட்டி முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்களை குவித்தது.

    பாகிஸ்தான் தரப்பில் ஹாரிஸ் ரவுஃப் 3 விக்கெட்டுகளையும், ஷாகீன் ஷா அஃப்ரிடி மற்றும் முகமது வாசிம் தலா 2 விக்கெட்டுகளையும், இஃப்திகார் அகமது ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர், 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய தொடங்கியது. இதில், அதிகபட்சமாக அகா சல்மான் 51 ரன்கள் எடுத்தார்.

    தொடர்ந்து, பாபர் அசாம் 38 ரன்கள், முகமது ரிஸ்வான் 36 ரன்கள், சவுட் ஷகீல் 29 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தனர்.

    பகார் சமான், இஃப்திகர் அகமது, ஷதாப் கான் ஆகியோர் ஒற்றை இலக்குடன் வெளியேறினர்.

    35.3 ஓவரில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்திருந்தது பாகிஸ்தான் அணி.

    களத்தில், அகா சல்மான் மற்றும் ஷஹீன் அஃப்ரிதி ஜோடி விளையாடினர். சல்மான் 51 ரன்களுடன் ஆட்டமிழந்தார். பிறகு, அஃப்ரிதியுடன் முகமது வாசிம் ஜோடி சேர்ந்தார்.

    79 பந்துகளில் 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் விளையாடி வந்தது.

    இதில், அஃப்ரிடி 25 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர், முகமது வாசிமுடன் ராஃப் ஜோடி சேர்ந்தார். இதில், ஹரிஸ் ராஃப் 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இதன்மூலம், பாகிஸ்தான் அணி 43.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. இதனால், 93 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழத்தி இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றது.

    இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தாலும் அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பை இழந்தது. இதனால், அரையிறுதியில் 4வது அணியாக நியூசிலாந்து அணி முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

    • டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
    • ஆப்கானிஸ்தான் அணி 244 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 42வது லீக் ஆட்டம் குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதில் தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தென் ஆப்பிரிக்கா அணி சிறப்பாக பந்து வீசியதால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.

    ரஹ்மத் ஷா மற்றும் நூர் தலா 26 ரன்னும், குர்பாஸ் 25 ரன்னும் எடுத்தனர்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஓமர்சாய் பொறுப்புடன் ஆடி 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 244 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதையடுத்து, 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்குகியது.

    இதில், அதிகபட்சமாக ராசி வேன் டெர் துச்சன் 76 ரன்களை குவித்தார். தொடர்ந்து, டி காக் 41 ரன்கள், எய்டென் மார்க்ரம் 25 ரன்கள், டேவிட் மில்லர் 24 ரன்கள், டெம்பா பவுமா 23 ரன்கள், ஹெயின்ரிச் கிளென்சன் 10 ரன்களும் எடுத்தனர். இறுதியாக அன்டில் 39 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்நிலையில், இந்த ஆட்டத்தின் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 47.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

    • வங்காளதேசம், இங்கிலாந்து அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டன.
    • வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

    50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் விரைவில் முடிவடைய இருக்கின்றன.

    இந்தியா 8 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றிபெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. தென்ஆப்பிரிககா 8-ல் ஆறு போட்டிகளில் வெற்றிபெற்று 2-வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    வங்காளதேசம், இங்கிலாந்து அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டன.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று 38வது போட்டி நடைபெறுகிறது. இதில், இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

    இதன்மூலம், இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.  

    • டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
    • விராட் கோலி 120 பந்தில் சதம் எடுத்து 101 ரன்கள் விளாசினார்.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 37வது லீக் ஆட்டத்தில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

    மதியம் 2 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

    இதில் முதலில் களமிறங்கிய, ரோகித் சர்மா 40 ரன்கள் எடுத்து எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சுப்மன் கில் 23 ரன்கள் எடுத்தார்.

    பின்னர், களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களும், கே.எல் ராகுல் 8 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.

    சூர்யா யாதவ் 22 ரன்கள் எடுத்தார். விராட் கோலி 120 பந்தில் சதம் எடுத்து 101 ரன்கள் விளாசினார். விராட்டுன் ஜடேஜா 28 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.

    இந்நிலையில், 50 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்தது.

    தொடர்ந்து 327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது.

    ஆனால், ஆரம்பம் முதலே சொற்ப ரன்களில் தென் ஆப்பிரிக்கா அணி வீரர்கள் ஆட்டமிழந்தனர்.

    இதில், குயின்டன் டி காக் 5 ரன்களில் ஆட்டமிழந்தார், தொரடர்ந்து, தெம்பா பவுமா-11, அய்டன் மார்க்ரம்-9, ஹெயின்ரிச் கிளாசன்-1, ராசி வேன் டெர் துசன்-13, டேவிட் மில்லர்-11, கேஷவ் மகாராஜ்-7, மாக்ரோ ஜான்சன்-14, காகிசோ ரபாடா-6, லுங்கி ங்கிடி டக் அவுட் என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இதனால், தென் ஆப்பிரக்கா அணி 27.1 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 83 ரன்களில் சுருண்டது.

    இதன்மூலம், இந்திய அணி 243 ரன்களில் இமாலய வெற்றியை அடைந்தது.

    • விராட் கோலி சதம் அடித்து அசத்தினார்.
    • பாலிவுட் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 37வது லீக் ஆட்டத்தில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

    இதில் இந்திய அணி ஆட்டத்தின் முடிவில், 50 ஓவருக்கு இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்தது.

    கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்று தனது 35-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிறந்த நாளான இன்று விராட் கோலி சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது.

    இந்நிலையில், இந்த போட்டியில் ஆடிய விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் விராட் கோலியின் 49வது சதம் இதுவாகும்.

    இந்த சதத்தின் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்ரின் சாதனையை விராட் கோலி சமன் செய்தார்.

    விராட் கோலி அடித்த சதத்தை பாராட்டி கற்பனை நயத்துடன் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பாராட்டி உள்ளார்.

    கடந்த ஏப்ரலில்தான் சச்சின் தனது 50வது வயதை எட்டினார். இதை மறைமுகமாக குறிப்பிட்டு, இந்த 50ஐ எட்டுவதற்கு அவருக்கு ஒரு வருடம் (365 நாட்கள்)ஆனதையும், விராட் கோலிக்கு தற்போது இலக்காக இருக்கும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் எடுக்க வேண்டிய 50வது சதத்தையும் குறிப்பிட்டு "எனக்கு 365 நாட்கள் ஆனது. உங்களால் விரைவிலேயே எட்ட முடியும்" என அழகாக பாராட்டியுள்ளார். 


    • டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
    • விராட் கோலி 120 பந்தில் சதம் எடுத்து 101 ரன்கள் விளாசினார்.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 37வது லீக் ஆட்டத்தில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

    மதியம் 2 மணிக்கு தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

    இதில் முதலில் களமிறங்கிய, ரோகித் சர்மா 40 ரன்கள் எடுத்து எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சுப்மன் கில் 23 ரன்களில் ஆட்டமிழந்தார்

    பின்னர், களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களில் வீழ்ந்தார், விரோட் கோலியுடன் ஜோடி சேர்ந்த கே.எல் ராகுல் 8 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.

    சூர்யா யாதவ் 22 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியாக, விராட் கோலி 120 பந்தில் சதம் எடுத்து 101 ரன்கள் விளாசினார். விராட்டுன் ஜடேஜா 28 ரன்கள் எடுத்து களத்தில் இருவரும் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில், 50 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்தது.  327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்க உள்ளது. 

    • டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 357 ரன்கள் எடுத்தது.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக டிகாக்- பவுமா ஜோடி களமிறங்கினர்.

    சிறப்பான தொடக்கத்தை கொடுத்த பவுமா 24 ரன்னில் அவுட் ஆனார். அதனையடுத்து டி காக்- வான் டெர் டுசென் ஜோடி நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை எளிதாக விளையாடி ரன்களை கணிசமாக உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதம் அடித்து அசத்தினார்.

    இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 357 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வான் டெர் டுசென் 133 ரன்களும் டி காக் 114 ரன்களும் எடுத்திருந்தனர். நியூசிலாந்து தரப்பில் சவுத்தி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க வீரரான டெவான் கான்வே 2 ரன்னில் அவுட் ஆனார். இவருடன் களமிறங்கிய வில் யங் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா 9 ரன்களையும், டேரில் மிட்செல் 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    தொடர்ந்து, மிட்செல் சந்த்னர் மற்றும் திம் சவுதீ தலா 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜேம்ஸ் நீஷன் ஒரு ரன் கூட எடுக்கவில்லை, டிரென்ட் பவுல்ட் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இறுதியாக களத்தில், கிளெம் பிலிப்ஸ் மற்றும் மேட் ஹென்றி இருந்தனர்.

    இதில், கிளென் பிலிப்ஸ் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மேட் ஹென்றி ரன்கள் எடுக்காமல் களத்தில் இருந்தார்.

    இந்நிலையில், இந்த ஆட்டத்தின் முடிவில் நியூசிலாந்து அணி 35.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

    இதன்மூலம், தென் ஆப்பிரிக்கா அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபாரமாக வென்றது.

    ×