search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    உலகக்கோப்பை போட்டி- 156 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து
    X

    உலகக்கோப்பை போட்டி- 156 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து

    • டாஸ் வென்ற இலங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
    • இங்கிலாந்து அணி முதல் 17 ஓவர்களிலே 5 விக்கெட்டுகளை இழந்தது.

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதியுள்ளன. இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கிறது.

    தலா ஒரு வெற்றி, 3 தோல்வி என்று 2 புள்ளியுடன் உள்ள இவ்விரு அணிகள் எஞ்சிய ஆட்டங்கள் அனைத்திலும் வென்றால் மட்டுமே அரை இறுதி குறித்து நினைத்து பார்க்க முடியும். ஒன்றில் தோற்றாலும் வெளியேற வேண்டியது தான். அதனால் இவ்விரு அணிகளுக்கும் இது வாழ்வா-சாவா? என்றே இருக்கப்போகிறது.

    இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற இலங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    இதன்மூலம், இங்கிலாந்து முதலில் களமிறங்கியது. இதில், டேவிட் மலான் 28 ரன்கள், ஜோ ரூட் 3 ரன்கள், ஜானி பேர்ஸ்டோ 30 ரன்கள், ஜோஸ் பட்லர் 8 ரன்கள், லிவிங்ஸ்டன் ஒரு ரன், மொயீன் அலி 15 ரன்கள், பென் ஸ்டோக்ஸ் 43 ரன்கள், அதில் ரஷித் 2 ரன்கள், மார்க் வுட் 5 ரன்கள் எடுத்து அவுட் ஆகினர்.

    இதில், கிரிஸ் வோக்ஸ் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

    நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி முதல் 17 ஓவர்களிலே 5 விக்கெட்டுகளை இழந்தது.

    இந்நிலையில், இந்த ஆட்டத்தின் முடிவில் 33.2 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதனால், 157 ரன்கள் என்கிற வெற்றி இலக்குடன் இலங்கை களமிறங்க உள்ளது.

    Next Story
    ×