search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    உலகக்கோப்பை போட்டி- 199 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா
    X

    உலகக்கோப்பை போட்டி- 199 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா

    • இந்திய அணியில் சுப்மன் கில்லுக்கு பதிலாக இஷான் கிஷன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குகிறார்.
    • 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) இந்தியாவின் 10 நகரங்களில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று 5-வது லீக் ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி, 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு வருகிறது.

    இந்தப் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கியது.

    இதில், அலெக்ஸ் கேரி ரன் எடுக்காமல் அவுட்டானார். இந்திய அணி வீரர்களான ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளும், முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா மற்றும் அஷ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஆரம்பத்தில் நிதானமாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி பின்னர் இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சால் தடுமாறியது.

    இதில், 49.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் மட்டுமே ஆஸ்திரேலிய அணியால் எடுக்க முடிந்தது.

    இதைதொடர்ந்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

    Next Story
    ×