search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "announced"

    • சி.ஐ.டி.யூ. வலியுறுத்தல்
    • பண்டிகை கால உதவி தொகையாக அரசு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில சி.ஐ.டி.யூ. செயலாளர் சீனுவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    புதுவை சி.ஐ.டி.யூ. மாநில குழு சார்பில் கடந்த 17-ந் தேதி ஆயிரக்க ணக்கான தொழிலா ளர்களை திரட்டி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை பேரணி நடத்தியது.

    இதில் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் பண்டிகை கால உதவி தொகையாக அரசு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

    புதுவை அரசு இந்த கோரிக்கையின் மீது எந்த விதமான முடிவும் எடுக்கா மல் காலதாமதம் செய்வது கட்டுமானம், ஆட்டோ உள்ளிட்ட அனைத்து உழைப்பாளி மக்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    தீபாவளி பண்டிகை நெருங்கி உள்ள நிலையில் அதை கொண்டாட உதவித்தொகை காலத்தோடு கிடைத்தால்தான் தொழி லாளர்கள் குடும்பங்களுக்கு பேருதவியாக இருக்கும். இது குறித்து முதல்-அமைச்சர் விரைவில் நட வடிக்கை எடுத்து அறிவிக்க வேண்டும்.

    கூப்பன் வழங்குவதை தவிர்த்து அனைவருக்கும் அவர்கள் கணக்கில் தொகையை செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மஸ்தூா் ஐஐ என்ற பதவிக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 582 ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • நாள் ஒன்றுக்கு ரூ. 380 பெற்று வருவதுடன் பணி நிரந்தரம் செய்யவும் மறுத்து வருகின்றனா்.

    திருப்பூர்: 

    மின்வாரியத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட மஸ்தூா் ஐஐ., என்ற பதவியை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளா் முன்னேற்ற கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து தமிழக மின்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, எரிசக்தி துறை செயலாளா் பீலா ராஜேஷ் ஆகியோருக்கு கூட்டமைப்பின் மாநில இணைப்பொதுச் செயலாளா் அ.சரவணன் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    தமிழக மின்வாரியத்தில் இல்லாத மஸ்தூா் ஐஐ., என்ற பணியிடங்களை மின்வாரியம் உருவாக்கி தகுதியற்றவா்களைப் பணியில் அமா்த்தி தாங்கள் விரும்பும் நபரை பணியில் சோ்க்கத் திட்டம் தீட்டி உள்ளதாகத் தெரிகிறது. மஸ்தூா் ஐஐ என்ற பதவிக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 582 ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளா்கள் குறைந்த ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ. 380 பெற்று வருவதுடன் பணி நிரந்தரம் செய்யவும் மறுத்து வருகின்றனா். இந்த நிலையில் தற்போது புதிதாக சென்னை மத்திய மின் பகிா்மான வட்டத்தில் 14 க்கும் மேற்பட்ட பிரிவுகளுக்கு தலா 4 மஸ்தூா் ஐஐ பணியிடங்களுக்கான வெளியிட்டுள்ள அறிவிப்பை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். அனைத்து ஒப்பந்த தொழிலாளா்களையும் தோ்தல் வாக்குறுதியின்படி பணிநிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழக அறநிலைய துறைக்குட்பட்ட கோவில்கள் மூலம் இலவச திருமணங்கள் நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார்.
    • இதற்கான திருமண ஜோடிகள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் அலுவலகத்தில் வருகிற பிப்ரவரி 3-ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சார்பில் அடுத்த மாதம் 23-ந்தேதி நடக்கும் இலவச திருமணத்திற்கு வருகிற பிப்ரவரி 3-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இலவச திருமணம்

    இது குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் அறிவித்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அறநிலைய துறைக்குட்பட்ட கோவில்கள் மூலம் இலவச திருமணங்கள் நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார்.

    இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக இலவச திருமணத்திற்கு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.

    இதையடுத்து ஒரு திருமண ஜோடிக்கு ரூ. 20 ஆயிரம் செலவிடப்படுகிறது. அதாவது திருமாங்கல்ய வகைக்கு 2 கிராம் தங்கம் ரூ. 10 ஆயிரம், மணமகன் ஆடை ரூ. 1000, மணமகள் ஆடை ரூ. 2 ஆயிரம், மணமக்கள் வீட்டார்களுக்கு 20 நபர்களுக்கு உணவு வகைக்கு ரூ. 2 ஆயிரம், திருமண மாலை மற்றும் புஷ்பம் ரூ. 1000, பாத்திரங்கள் வகைக்கு ரூ. 3 ஆயிரம், எதிர்பாராத செலவு ரூ. 1000 என மொத்தம் ரூ. 20 ஆயிரம் செலவிடப்பட உள்ளது.

    3-ந்தேதிக்குள்....

    இத்திருமணம் வருகிற பிப்ரவரி 23-ந் தேதி நடக்கிறது. இதற்கான திருமண ஜோடிகள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் அலுவலகத்தில் வருகிற பிப்ரவரி 3-ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதாகுமரன், செந்தில் முருகன், ராமதாஸ், கணேசன் மற்றும் இணை ஆணையர் கார்த்திக் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • வருகிற 30-ந் தேதி மற்றும் 31 -ந் தேதி ஆகிய 2 நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சங்கரன்கோவில் பழைய தாலுகா போலீஸ் நிலைய வளாகத்தில் வைத்து ஏலம் விடப்படுகிறது.
    • வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலம் எடுத்த நாளான 30-ந்தேதி அல்லது 31-ந்தேதி ஏலத்தெகையுடன் ஜி.எஸ்.டி. தொகையினையும் உடனடியாக செலுத்தி வாகனத்தை எடுத்துச்செல்ல வேண்டும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் புளியங்குடி காவல் உட்கோட்ட எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 293 இரு சக்கர மோட்டார் வாகனங்கள், 1 மூன்று சக்கர வாகனம், 4 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 298 வாகனங்களுக்கு பொது ஏலம் விடப்பட உள்ளது.

    வருகிற 30-ந் தேதி மற்றும் 31 -ந் தேதி ஆகிய 2 நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சங்கரன்கோவில் பழைய தாலுகா போலீஸ் நிலைய வளாகத்தில் வைத்து ஏலம் விடப்படுகிறது.

    இதில் கலந்து கொண்டு வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புபவர்கள் அந்த வாகனங்களை சங்கரன்கோவில் பழைய தாலுகா போலீஸ் நிலைய வளாகத்தில் 23 -ந் தேதி முதல் 27 -ந் தேதி வரையிலான நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை நேரில் பார்வையிடலாம்.

    மேலும் தங்களின் பெயர், முகவரி அடங்கிய ஆதார் அட்டையுடன் ரூ. 1000 முன்பணம் செலுத்தி பதிவு செய்து டோக்கன் பெற்றுக் கொள்ள வேண்டும்.

    டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும். வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலம் எடுத்த நாளான 30-ந்தேதி அல்லது 31-ந்தேதி ஏலத்தெகையுடன் ஜி.எஸ்.டி. தொகையினையும் உடனடியாக செலுத்தி வாகனத்தை எடுத்துச்செல்ல வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    2018-19-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை முதல்-மந்திரி குமாரசாமி தாக்கல் செய்தார். அதில் ரூ.34 ஆயிரம் கோடிக்கு விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. #KarnatakaBudget
    பெங்களூரு:

    2018-19-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை முதல்-மந்திரி குமாரசாமி தாக்கல் செய்தார். அதில் ரூ.34 ஆயிரம் கோடிக்கு விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. பெட்ரோல், டீசல், மதுபானம், மின்சாரம் மீதான வரி உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடக முதல்-மந்திரியாக பொறுப்பேற்றுள்ள குமாரசாமி அரசின் முதல் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் 4-வது நாள் கூட்டம் நேற்று காலை விதான சவுதாவில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், நிதித்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்-மந்திரி குமாரசாமி, 2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    ரூ.2 லட்சத்து 18 ஆயிரத்து 488 கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது ரூ.106 கோடி உபரி பட்ஜெட் ஆகும்.



    பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி இந்த சபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் அமல்படுத்தப்படும். அதுபோல் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட அனைத்து நலத்திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

    * 1,000 அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்பு தொடங்கப்படும்

    * அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படும்.

    * 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள 28 ஆயிரத்து 847 பள்ளிகள் அருகாமையில் உள்ள 8 ஆயிரத்து 530 பள்ளிகளுடன் இணைக்கப்படும்.

    * கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி வரையில் நிலுவையில் உள்ள அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். அதாவது ரூ.34 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்.

    * கடனை சரியாக செலுத்தி வரும் விவசாயிகளுக்கு மொத்த கடனில் ரூ.25 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படும்.

    * சம்பந்தப்பட்ட அமைப்பின் அனுமதியை பெற்று மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்டத்தை விரைவாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    * பெங்களூரு 3-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தின் கீழ் புதிதாக 95 கிலோ மீட்டர் நீளத்திற்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கப்படும்.

    * பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விற்பனை வரி தலா 2 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

    * மதுபானங்கள் மீதான கூடுதல் கலால் வரி 4 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

    * மின்சார பயன்பாடு மீதான வரி 9 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.

    இவ்வாறு பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது.  #KarnatakaBudget #Tamilnews
    நீலகிரி சாலை விபத்தில் பலியான 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். #NilgiriBusAccident #EdappadiPalanisamy
    சென்னை:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்டம் குன்னூர் வட்டம் கேத்தி கிராமம் அருகே இன்று (நேற்று) காலை உதகையில் இருந்து குன்னூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ், மந்தாடா என்ற இடத்திற்கு அருகில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சாலை விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்த தகவல் கிடைத்தவுடன் பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்சில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டு, சிறப்பான சிகிச்சை அளிக்க நீலகிரி மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டேன். எனது உத்தரவின் பேரில் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, வருவாய் துறையினர், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைவாக சென்று, மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொண்டனர். காயமடைந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

    இந்த சாலை விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.  #NilgiriBusAccident #EdappadiPalanisamy #tamilnews
    தமிழகத்தில் விவசாயிகளுக்கு 90 சதவீத மானியத்தில் சூரிய சக்தி மோட்டார் பம்ப் செட்டுகள் நிறுவப்படும் என சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #TNAssembly #EPS #SolarPumpSets
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று 110-வது விதியின்கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமாகவும், விவசாயப் பெருமக்களின் வளமான வாழ்வுக்கு முக்கியமாக விளங்கும் வேளாண்மை தொழிலை மேம்படுத்துவதற்கும், விவசாயப் பெருமக்களின் வாழ்வு வளம் பெறச் செய்வதற்கும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அவ்வகையில், தமிழ்நாட்டில் அபரிமிதமாகக் கிடைக்கும் சூரிய சக்தியை, பல்வேறு வழிகளில் பயன்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு “சூரிய சக்திக் கொள்கை” ஒன்றை 2012-ஆம் ஆண்டில் உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. இதுவரை, தமிழ்நாட்டில் 3,112 சூரிய சக்தி பம்ப் செட்டுகளும், 181 சூரிய உலர்ப்பான்களும், 117 கோடியே 24 லட்சம் ரூபாய் மானியத்தில்
    நிறுவப்பட்டுள்ளன. இலவச மின் இணைப்பை ஏற்கனவே பெற்றுள்ளவர்களும், இலவச மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தவர்களும், மின் இணைப்பை துறப்பதற்கு முன்வந்தால், இத்திட்டத்தின் கீழ், 90 சதவீத மானியத்தில் சூரிய சக்தி மோட்டார் பம்ப் செட்டுகள் அமைத்து தரப்படும்.



    தற்போது விவசாயிகளிடையே, சூரிய சக்தி மோட்டார் பம்ப் செட்டுகளுக்கு அதிக தேவை இருப்பதை கருத்தில் கொண்டு, ஏற்கனவே டெல்டா மாவட்டங்களுக்கு குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்துடன் அறிவிக்கப்பட்ட 500 சூரிய சக்தி மோட்டார் பம்ப் செட்டுகள் போக, டெல்டா மாவட்டங்கள் அல்லாத பிற பகுதிகளுக்கும் 500 சூரிய சக்தி மோட்டார் பம்பு செட்டுகள் என மொத்தம் 1,000 சூரிய சக்தி மோட்டார் பம்பு செட்டுகள் 50 கோடி ரூபாய் செலவில் 90 சதவீத மானியத்தில் நிறுவப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNAssembly #EPS #SolarPumpSets 
    ஹெப்பால் வாக்குச்சாவடியில் நாளை(திங்கட்கிழமை) மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. #KarnatakaElection2018 #HebbalAssembly
    பெங்களூரு:

    ஹெப்பால் வாக்குச்சாவடியில் நாளை(திங்கட்கிழமை) மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    கர்நாடக சட்டசபைக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. இதில் சுமார் 70 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில் பெங்களூரு ஹெப்பால் தொகுதிக்கு உட்பட்ட லொட்டேகொல்லஹள்ளியில் காந்தி வித்யாலயா ஆங்கில மற்றும் தமிழ் வழி பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது.

    அந்த வாக்குச்சாவடியில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அவை செயல்படவில்லை. இதனால் அங்கு ஓட்டுப்பதிவே நடக்கவில்லை. ஓட்டுப்போட வந்த வாக்காளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதையடுத்து அந்த வாக்குச்சாவடியில் மட்டும் நாளை(திங்கட் கிழமை) மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    அந்த வாக்குச்சாவடிக்கு உட்பட்ட வாக்காளர்களிடம் பல்வேறு விளம்பரங்கள் மூலம் இந்த மறுவாக்குப்பதிவு குறித்த தகவலை தெரியப்படுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. திங்கட்கிழமை அன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் எனறும் கூறப்பட்டுள்ளது.  #KarnatakaElection2018 #HebbalAssembly

    சாத்தனூர் அணையிலிருந்து பாசனத்திற்காக 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #Sathanurdam #TNCM
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையிலிருந்து 2018ஆம் ஆண்டு பாசனத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விட வேளாண் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. அதை ஏற்று, 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை சாத்தனூர் அணையின் இடது மற்றும் வலதுபுற கால்வாயில் முறையே வினாடிக்கு 350 கன அடி மற்றும் 220 கனஅடி வீதம் 5 நாட்களுக்கு கூடுதலாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.



    இதனால், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள 45000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #Sathanurdam #TNCM

    ×