search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Free marriage"

    • முக்கிய நிகழ்வான இலவச திருமணம் மற்றும் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
    • மணமக்களின் உறவினர்கள் திரளாக கலந்து கொண்டு குடும்பம், குடும்பமாக சிவராத்திரிஸ்வரர் சாமியை தரிசனம் செய்தனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் நஞ்சின்கூடு அருகே உள்ள கபிலாநதி கரையில் அமைந்துள்ளது ஸ்ரீசுத்தூர் மடம் ஆதி ஜெகத்குரு சிவராத்திரிஸ்வரர் கோவில். ஒவ்வொரு ஆண்டும் இக்கோவில் திருவிழா பல்வேறு நிகழ்ச்சிகளுடன் ஒரு வார காலம் நடைபெறும். குறிப்பாக விழாவின் முக்கிய நிகழ்வான இலவச திருமணம் மற்றும் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி நடப்பாண்டு கோவிலில் திருவிழா பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான இலவச திருமணம் மற்றும் தேர் திருவிழா நேற்று நடைபெற்றது.

    இலவச திருமண நிகழ்ச்சி ஜெகத்குரு ஸ்ரீ ஸ்ரீ சிவராத்திரி தேசிகேந்திர மகா சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது. மணமக்களுக்கு மாங்கல்யம் வழங்கி நடத்தி வைத்தார். இந்த நிகழ்வில் சேலை உள்ளிட்ட பொருட்கள் மணமகள்களுக்கு வழங்கப்பட்டது. மணமகனுக்கு வேட்டி, சட்டை வழங்கப்பட்டது. இதில் தமிழகத்தை சேர்ந்த சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி பகுதிகளை சேர்ந்த 24 மணமக்கள் கலந்து கொண்டது குறுப்பிடத்தக்கதாகும். இத்திருமணத்தில் 118 ஜோடிகளுக்கு இலவச திருமணம் ஒரே அரங்கில் நடைபெற்றது.

    இந்த திருமண நிகழ்வில் மணமக்களின் உறவினர்கள் திரளாக கலந்து கொண்டு குடும்பம், குடும்பமாக சிவராத்திரிஸ்வரர் சாமியை தரிசனம் செய்தனர்.

    ஸ்ரீசுத்தூர் மடம் ஏழை மக்களுக்கு இலவச திருமணம் செய்து வைத்ததன் மூலம் அவர்களின் வாழ்க்கையில் ஒளி விளக்கை கொடுத்துள்ளது. இந்த திருமணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது என அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர். 

    • இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் ஒரு இணை ஆணையர் மண்டலத்துக்கு ஆண்டுதோறும் 500 ஜோடிகளுக்கு கோவில்களில் திருமணம் நடத்தப்படுகிறது
    • மணமக்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டது.

    புதியம்புத்தூர்:

    இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் ஒரு இணை ஆணையர் மண்டலத்துக்கு ஆண்டுதோறும் 500 ஜோடிகளுக்கு கோவில்களில் திருமணம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் குலசேகரநாதர் கோவில் உள்ளிட்ட இடங்களில் 7 ஜோடி களுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. இதில் புதியம்புத்தூர் குலசேகரநாதர் கோவிலில் ஒரு ஜோடிக்கு திருமணம் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி தலைமையிலும், ஓட்டப்பிடாரம் சரக ஆய்வாளர் முப்பிடாதி என்ற திவ்யா முன்னிலையிலும் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை திருமாங்கல்யம் 4 கிராம், பீரோ, கட்டில், மெத்தை, தலையணைகள், பூஜை பொருட்கள் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டது.

    • இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் வீரபாண்டி கண்ணீஸ்வரமுடையார் கோவிலில் 7 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்க ப்பட்டது.
    • ரூ.60,000 மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை கலெக்டர் ஷஜீவனா திருமண ஜோடிகளுக்கு வழங்கினார்.

    தேனி:

    தமிழக அரசு மாநிலம் முழுவதும் பொருளா தாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய ஜோடிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 4 கிராம் தாலி உட்பட ரூ.60,000 மதிப்பில் சீர் வரிசைகள் வழங்கி திருமண விழா நடத்திட உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் வீரபாண்டி கண்ணீஸ்வரமுடையார் கோவிலில் 7 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்க ப்பட்டது. திருமணத்திற்கு தேவையான 4 கிராம் தாலி ரூ.30,000, மணமகன் ஆடை ரூ.1,000, மணமகள் ஆடை ரூ.2,000, திருமணத்திற்கு மணமகன், மணமகள் வீட்டார் 20 நபர்களுக்கு உணவு ரூ.2,000, மாலை-புஷ்பம் ரூ.1,000, பீரோ ரூ.7,800, கட்டில் ரூ.7,500, மெத்தை ரூ.2,200, இரண்டு தலையணை ரூ.190, ஒரு பாய் ரூ.180, இரண்டு கைக்கடிகாரம் ரூ.1,000, ஒரு மிக்சி ரூ.1,490, பூஜை பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் ரூ.3,640 என மொத்தம் ரூ.60,000 மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை கலெக்டர் ஷஜீவனா திருமண ஜோடிகளுக்கு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதா, துணை தலைவர் சாந்தகு மார், இந்து சமய அறநிலை யத்துறை உதவி ஆணையர் கலைவாணன், கவுமாரி யம்மன்கோவில் செயல் அலுவலர் மாரிமுத்து, குச்சனூர் கோவில் செயல் அலுவலர் நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.
    • இலவச திருமணத்தை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நடத்தி வைத்தார்.

    வெள்ளகோவில்:

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏழை எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டு வருகின்றன.அதன் அடிப்படையில் இன்று காலை திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவில் வளாகத்தில் தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், 9 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்தார்.

    பின்னர் மணமக்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் திருமாங்கல்யம், பீரோ, கட்டில், மணமக்கள் ஆடை, மெத்தை, தலையணை, மிக்சி ஆகிய சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. மணமக்களின் உறவினர்களுக்கு விருந்து வழங்கப்பட்டன.

    இந்நிகழ்ச்சிக்கு தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன் தலைமை தாங்கினார். திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இல.பத்மநாபன், துணைச்செயலாளர் ராசி கே.ஆர்.முத்துகுமார், நாட்ராயன் நாச்சிமுத்து அய்யன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் மோளகவுண்டன்வலசு கே.சந்திரசேகரன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, துணை ஆணையர் செந்தில்குமார், செயல் அலுவலர்கள் ராமநாதன், திலகவதி, உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில், மேட்டுப்பாளையம் நாட்ராயன் நாச்சிமுத்து அய்யன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் அறங்காவலர்கள், கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 8 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை நடத்தி வைத்த அமைச்சர் இ.பெரியசாமி.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அபிராமி அம்மன் உடனுறை பத்மகிரீஸ்வரர் கோவிலில் இன்று இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 8 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. திருமணத்தை நடத்தி வைத்த அமைச்சர் இ.பெரியசாமி பேசியதாவது:-

    தமிழக முதல்-அமை ச்சரின் உத்தரவின்படி பொருளா தாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய மக்களின் ஜோடிகளுக்கு திருக்கோயில்கள் சார்பாக 4 கிராம் தங்கத்தாலி உட்பட ரூ.50,000 மதிப்பில் சீர் வரிசைகள் வழங்கி திருமண விழா நடத்தப்பட்டு வரு கிறது.

    கடந்த ஆண்டு 500 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தப்பட்டது. தற்போது கூடுதலாக மேலும் 100 ஜோடிகளை சேர்த்து ஒரு மண்டலத்திற்கு 30 ஜோடிகள் வீதம் 600 ஜோடிகளுக்கு திருக்கோயி ல்கள் சார்பாக திருமண விழா நடத்தப்படு கிறது.

    அதன்படி திருமணத்திற்கு தேவையான 4 கிராமில் திருமாங்கல்யம், மணமகன் ஆடை ரூ.1000, மணகள் ஆடை ரூ.2000, திருமண த்திற்கு மணமகன், மணமகள் வீட்டார் 20 நபர்களுக்கு உணவு ரூ.2000, மாலை, புஷ்பம் ரூ.1000, பீரோ ரூ.7800, கட்டில் ரூ.7500, மெத்தை ரூ.2200, இரண்டு தலையணை ரூ.190, ஒரு பாய் ரூ.180, இரண்டு கைக்கடிகாரம் ரூ.1000, ஒரு மிக்சி ரூ.1490, பூஜை பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் ரூ.3640 என மொத்தம் ரூ.30,000 மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் மற்றும் 4 கிராம் தங்கம் ஆகியவை வழங்க ப்பட்டு வருகிறது.

    நடப்பு ஆண்டில் முதற்கட்டமாக திண்டுக்கல் இணை ஆணையர் மண்டலத்திற்குட்பட்ட திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஜோடிகளுக்கும், தேனி மாவட்டத்தில் 5 ஜோடிகளுக்கும் என மொத்தம் 7 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

    தற்போது 2-ம் கட்டமாக திண்டுக்கல்அபிராமி அம்மன் கோவிலில் 8 ஜோடிகளுக்கு இன்று இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி நடப்பு ஆண்டில் இதுவரை திண்டுக்கல் இணை ஆணையர் மண்ட லத்தில் மொத்தம் 22 ஜோடி களுக்கு திருக்கோயில்களின் சார்பில் இலவச திருமணம் நடத்தப்ப ட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சிகளில், மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியம், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, உதவி ஆணையாளர் சுரேஷ், செயல் அலுவலர்கள் வேலுச்சாமி, முருகன், பாலசரவணன், ராமநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த சுடலைமணி, ஒண்டிவீரன் நகரை சேர்ந்த முத்துமாரி தம்பதிக்கு இலவச திருமணம் நடந்தது.
    • தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருமாங்கல்யம், பீரோ, கட்டில் ஆகியவை வழங்கப்பட்டது.

    உடன்குடி:

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த சுடலைமணி, ஒண்டிவீரன் நகரை சேர்ந்த முத்துமாரி தம்பதிக்கு இலவச திருமணம் நடந்தது. தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருமாங்கல்யம், பீரோ, கட்டில் ஆகியவை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோவில் செயல்அலுவலர் ராமசுப்பிர மணியன், உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் இளங்கோ, குலசேகரன்பட்டினம் ஊராட்சி தலைவர் சொர்ணபிரியா துரை, சாத்தான்குளம் ஆய்வர் பகவதி மற்றும் கோவில் கணக்கர் டிமிட்ரோ மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • வாழப்பாடி அருகே பிரசித்திப் பெற்ற பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் நேற்று 7 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது.
    • புது மணத் தம்பதியருக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான சீர் வரிசை வழங்கி திரு மணத்தை நடத்தி வைத்தனர். நிறைவாக, புதுமணத் தம்பதிகள், சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் உறவினர்களுக்கு திருமண விருந்து வழங்கப்பட்டது.

    வாழப்பாடி:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த திருக்கோவில்களில் எளி யோருக்கு இலவச திருமணம் நடத்தும் திட்டத்தின் கீழ், சேலம் மண்டல இந்து சமய அறநிலையத்துறை சார்பில், வாழப்பாடி அருகே பிரசித்திப் பெற்ற பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் நேற்று 7 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது.

    சேலம் மண்டல இணை ஆணையர் சபர்மதி, உதவி ஆணையர் ராஜா, வாழப் பாடி வட்டார வேளாண்மை அட்மா குழு தலைவர் எஸ்.சி.சக்கர வர்த்தி, பேளூர் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயசெல்வி பாலாஜி, துணைத்தலைவர் பேபி, தி.மு.க. நகர செயலா ளர் சுப்பிரமணியன், செயல் அலுவலர் கஸ்தூரி, ஆய்வா ளர் சங்கர் ஆகியோர் புது மணத் தம்பதியருக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான சீர் வரிசை வழங்கி திரு மணத்தை நடத்தி வைத்தனர். நிறைவாக, புதுமணத் தம்பதி கள், சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் உறவினர்களுக்கு திருமண விருந்து வழங்கப் பட்டது.

    அரசு சார்பில் தங்கத்தா லியுடன் திருமணம் நடத்தி வைத்ததோடு, புதிய குடித் தனத்திற்கு தேவையான அனைத்து சீர்வரிசைகளும் வழங்கப்பட்டன. இதற்கு தமிழக அரசுக்கு புதுமணத் தம்பதிகளும், பெற்றோர்க ளும் நன்றி தெரிவித்தனர்.

    • 4 கோவில்களில் 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடந்தது.
    • ரூ.1 லட்சத்து 50ஆயிரம் மதிப்பில் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில் விட்டனேரி கொல்லங்குடி வெட்டுடையார் காளி யம்மன் கோவிலில் 3 ஜோடிகளுக்கு இந்து சமய சிவகங்கை மண்டல இணை ஆணையர் பழனிகுமார் தலைமையில் திருமணம் நடைபெற்றது.

    மணமக்களுக்கு ரூ.1 லட்சத்து 50ஆயிரம் மதிப்பில் குத்துவிளக்கு பீரோ, தலையணை, சமையல்பாத்திரங்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினரும், பொதுக்குழு உறுப்பினருமான ஏஆர்.ஜெயமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் ஆர்.எம். கென்னடி, யோக கிருஷ்ண குமார், ஆரோக்கியசாமி, கொல்லங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் மெய்ஞான மூர்த்தி, மாணவர் அணி கார்த்தி, பால்பாண்டி, குட்டி, தமிழ்ச்செல்வன், சுசீந்திரன், வழக்கறிஞர் சதீஷ், செல்லப்பாண்டி, பாலமுருகன், அசோக், முருகன், அல்லூர் ரவி, காளை மணி, அம்பலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் கோவில் செயல் அலுவலர் நாராயணி நன்றி கூறினார். தாயமங்கலம் முத்துமாரி அம்மன்கோவிலில்ஒரு ஜோடிக்கும், அரியக்குடி திருவேங்கடம் உடையார் கோவிலில் 3 ஜோடி களுக்கும், பரமக்குடியில் திரவுபதி அம்மன் கோவிலில் 3 ஜோடிகளுக்கும் மொத்தம் 10 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

    அரியக்குடி திருவேங்கடமுடையார் கோவிலில் நடைபெற்ற திருமணத்தில் மாங்குடி எம்.எல்.ஏ., காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துதுரை, துணைத் தலைவர் குணசேகரன், கண்ணன், காரை சுரேஷ் அறங்காவலர் குழு உறுப்பினர் வெள்ளையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

      பரமத்திவேலூர்:

      நாமக்கல் மாவட்டத்தில் இந்து சமய அறநிலை யத்துறை சார்பில், ஏழை, எளியோருக்கு வருகிற

      28-ந் தேதி இலவச திரு மணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

      மேலும் இந்த திருமண விழாவில் கலந்து கொள்ளும் ஜோடிகளுக்கு திருமாங்கல்யத்திற்கு 4 கிராம் தங்கம், புதிய ஆடை, திருமணத்துக்கு வரும் மணமக்களின் வீட்டார் 20 பேருக்கு திருமண விருந்து, பீரோ, கட்டில், மெத்தை, தலையணை, பாய், மணமக்க ளுக்கு வாட்ச், மிக்ஸி, சமை யல் பாத்திரங்கள் மற்றும் திருமணத்துக்கு தேவையான மாலை, பூஜை சாமான்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

      இதையடுத்து நாமக்கல் மாவட்டம் முழுவதும், அற நிலையத்துறை கட்டுப்பாட் டில் உள்ள கோவில்களில் 100-க்கும் மேற்பட்ட ஜோடி கள் திருமணம் செய்ய உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து இருந்தனர். இவர்க ளுக்கு மோகனூரில் உள்ள அசலதீபேஸ்வரர் ஆல யத்தில் வருகிற 28-ந் தேதி திருமணம் நடக்க இருந்தது.

      இதையடுத்து, மணமக்களின் பெற்றோரும் பத்திரிக்கை அடித்து, உறவினர்களுக்கு கொடுத்த நிலையில், திருமண தேதியை ஜூலை 7-ந் தேதிக்கு மாற்றம் செய்துள்ளதாக, இந்து அறநிலையத்துறை சார்பில் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் மணமக்களின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

      மேலும் வருகிற ஜூலை 7-ந் தேதி தேய்பிறை முகூர்த்தம் என்பதால், திருமணம் செய்ய மணமக்களின் பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் திருமணம் செய்ய பதிவு செய்தவர்கள் தேதி மாற்றத்தை விரும்பாமல் 28-ந் தேதியே திருமணம் செய்ய முடிவு செய்துள்ள னர்.

      பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலில் இலவச திருமணம் செய்ய 8 மண மக்கள் ஜோடி பதிவு செய்தி ருந்தனர். தேதி மாற்றத்தால் 6 மணமக்கள் ஜோடிகள் பதிவை ரத்து செய்துவிட்டு வரும் 28-ந் தேதியில் முகூர்த்தம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

      திருமண தேதி மாற்றத் தால் மணமக்களின் பெற் றோர்கள், உறவினர்கள் கடும் அதிருப்தி அடைந்துள் ளனர். இது குறித்து அற நிலையத்துறை அதிகாரி களிடம் கேட்டபோது,

      இந்து அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் உத்தர வின் பேரில் தேதி மாற்றப் பட்டுஉள்ளது. இதற்குரிய காரணம் எங்களுக்கு தெரியவில்லை. வருகிற 7-ந் தேதி இலவச திருமணம் நடக்க இருப்பதால், தகுதி உடைய மணமக்கள் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து கொள்ளலாம் என கூறினர்.

      • 5 பவுன் தங்க நகை, துணி மற்றும் தேவையான பொருள்கள் வழங்கப்பட்டன.
      • 400 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது.

      ஊட்டி,

      நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை பகுதியில் 400 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. மா்க்கஸ் அமைப்பு சாா்பில் நடைபெற்ற விழாவில் 37 இந்து ஜோடிகளுக்கு அப்பகுதியிலுள்ள மாரியம்மன் கோவிலிலும், 3 கிறிஸ்தவ ஜோடிகளுக்கு தேவாலயத்திலும், 360 இஸ்லாமிய ஜோடிகளுக்கு அவா்களது முறைப்படியும் திருமணங்கள் நடைபெற்றன.திருமணத்துக்கு சீா்வரிசையாக ஜோடிகளுக்கு தலா 5 பவுன் தங்க நகை, துணி மற்றும் தேவையான பொருள்கள் வழங்கப்பட்டன. விழாவை பொன்மலை அப்துல் காதா் முஸ்லியாா் தொடங்கி வைத்தாா். சமஸ்தா தலைவா் சுலைமான் முஸ்லியாா், மா்க்கஸ் நிா்வாக அப்துல் சலாம் முஸ்லியாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினா்.

      • இந்துசமய அறநிலையத்துறை சார்பில் ஆண்டு தோறும் 500 ஜோடிகளுக்கு இலவச திருமணங்கள் நடத்தி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
      • பாளை வி.எம்.சத்திரம், ராஜவள்ளிபுரம், அருகன்குளம் கிராமத்தை சேர்ந்த 3 ஏழை ஜோடிகளுக்கு நெல்லையப்பர் கோவிலில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

      நெல்லை:

      இந்துசமய அறநிலை யத்துறை சார்பில் ஆண்டு தோறும் 500 ேஜாடி களுக்கு இலவச திருமணங்கள் நடத்தி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

      இலவச திருமணங்கள்

      அதன்படி இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் திருமணங்கள் நடத்தப்படு கிறது. அதன்படி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் கோவிலில் ஏழை-எளியோர்களுக்கு இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டது.

      இந்நிலையில் இன்று பாளை வி.எம்.சத்திரம், ராஜவள்ளிபுரம், அருகன்குளம் கிராமத்தை சேர்ந்த 3 ஏழை ஜோடிகளுக்கு நெல்லையப்பர் கோவிலில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

      33 வகையான சீர்வரிசை

      அப்போது மணமக்களுக்கு பித்தளை குத்துவிளக்கு, 4 கிராம் தங்கத் திருமாங்கல்யம், பட்டுப்புடவை, பட்டு வேட்டி, மிக்சி, கட்டில், பீரோ உள்ளிட்ட 33 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா, கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

      • தமிழக அறநிலைய துறைக்குட்பட்ட கோவில்கள் மூலம் இலவச திருமணங்கள் நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார்.
      • இதற்கான திருமண ஜோடிகள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் அலுவலகத்தில் வருகிற பிப்ரவரி 3-ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

      திருச்செந்தூர்:

      திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சார்பில் அடுத்த மாதம் 23-ந்தேதி நடக்கும் இலவச திருமணத்திற்கு வருகிற பிப்ரவரி 3-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

      இலவச திருமணம்

      இது குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் அறிவித்துள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

      தமிழக அறநிலைய துறைக்குட்பட்ட கோவில்கள் மூலம் இலவச திருமணங்கள் நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார்.

      இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக இலவச திருமணத்திற்கு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.

      இதையடுத்து ஒரு திருமண ஜோடிக்கு ரூ. 20 ஆயிரம் செலவிடப்படுகிறது. அதாவது திருமாங்கல்ய வகைக்கு 2 கிராம் தங்கம் ரூ. 10 ஆயிரம், மணமகன் ஆடை ரூ. 1000, மணமகள் ஆடை ரூ. 2 ஆயிரம், மணமக்கள் வீட்டார்களுக்கு 20 நபர்களுக்கு உணவு வகைக்கு ரூ. 2 ஆயிரம், திருமண மாலை மற்றும் புஷ்பம் ரூ. 1000, பாத்திரங்கள் வகைக்கு ரூ. 3 ஆயிரம், எதிர்பாராத செலவு ரூ. 1000 என மொத்தம் ரூ. 20 ஆயிரம் செலவிடப்பட உள்ளது.

      3-ந்தேதிக்குள்....

      இத்திருமணம் வருகிற பிப்ரவரி 23-ந் தேதி நடக்கிறது. இதற்கான திருமண ஜோடிகள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர் அலுவலகத்தில் வருகிற பிப்ரவரி 3-ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதாகுமரன், செந்தில் முருகன், ராமதாஸ், கணேசன் மற்றும் இணை ஆணையர் கார்த்திக் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

      ×