குலசேகரன்பட்டினம் கோவிலில் அரசு சார்பில் இலவச திருமணம்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த சுடலைமணி, ஒண்டிவீரன் நகரை சேர்ந்த முத்துமாரி தம்பதிக்கு இலவச திருமணம் நடந்தது.தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருமாங்கல்யம், பீரோ, கட்டில் ஆகியவை வழங்கப்பட்டது.
இலவச திருமணம் நடந்தபோது எடுத்த படம்.
இலவச திருமணம் நடந்தபோது எடுத்த படம்.
Published on

உடன்குடி:

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த சுடலைமணி, ஒண்டிவீரன் நகரை சேர்ந்த முத்துமாரி தம்பதிக்கு இலவச திருமணம் நடந்தது. தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருமாங்கல்யம், பீரோ, கட்டில் ஆகியவை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோவில் செயல்அலுவலர் ராமசுப்பிர மணியன், உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் இளங்கோ, குலசேகரன்பட்டினம் ஊராட்சி தலைவர் சொர்ணபிரியா துரை, சாத்தான்குளம் ஆய்வர் பகவதி மற்றும் கோவில் கணக்கர் டிமிட்ரோ மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com