search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவிலில் 9 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
    X

    9 ஜோடிகளுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இலவசமாக திருமணத்தை நடத்தி வைத்த காட்சி. 

    வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவிலில் 9 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

    • மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.
    • இலவச திருமணத்தை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நடத்தி வைத்தார்.

    வெள்ளகோவில்:

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏழை எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டு வருகின்றன.அதன் அடிப்படையில் இன்று காலை திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவில் வளாகத்தில் தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், 9 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்தார்.

    பின்னர் மணமக்களுக்கு இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் திருமாங்கல்யம், பீரோ, கட்டில், மணமக்கள் ஆடை, மெத்தை, தலையணை, மிக்சி ஆகிய சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. மணமக்களின் உறவினர்களுக்கு விருந்து வழங்கப்பட்டன.

    இந்நிகழ்ச்சிக்கு தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன் தலைமை தாங்கினார். திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இல.பத்மநாபன், துணைச்செயலாளர் ராசி கே.ஆர்.முத்துகுமார், நாட்ராயன் நாச்சிமுத்து அய்யன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் மோளகவுண்டன்வலசு கே.சந்திரசேகரன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை, துணை ஆணையர் செந்தில்குமார், செயல் அலுவலர்கள் ராமநாதன், திலகவதி, உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

    இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில், மேட்டுப்பாளையம் நாட்ராயன் நாச்சிமுத்து அய்யன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் அறங்காவலர்கள், கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×