search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SRH"

    • எங்கள் அணி மீதான எதிர்பார்ப்புகள் அனைத்தும் தொடக்க வீரர்களாக அமைக்கப்பட்டது.
    • ஆர்.சி.பி.க்கு எதிரான ஆட்டத்தில் அன்றைய தினம் அவர்களுடையதாக அமையவில்லை.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் மற்றும் கிளாசன் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த 15-ந்தேதி ஆர்சிபி அணிக்கெதிராக 287 ரன்கள் குவித்து, ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை பதிவு செய்தது.

    நேற்று மீண்டும் ஆர்சிபி அணியை எதிர்கொண்டது. இதில் எப்படியும் 300 ரன்கள் குவிக்கப் போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். மேலும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களை ஆர்சிபி பந்து வீச்சாளர்கள் எப்படி சமாளிக்க போகிறார்கள் என்றும் பரிதாபப்பட்டனர்.

    ஆனால் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 206 ரன்கள் குவித்தது. பின்னர் 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களம் இறங்கியது. 207 இலக்கை எளிதாக எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா பவர்பிளேயில் விளாசி விடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் ஆர்சிபி பந்து வீச்சாளர்கள் அசத்த சன்ரைசர்ஸ் அணியால் 171 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. டிராவிஸ் ஹெட் 1 ரன்னிலும், மார்கிராம், 7 ரன்னிலும், நிதிஷ் ரெட்டி 13 ரன்னிலும், கிளாசன் 7 ரன்னிலும் சுழற்பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர். அபிஷேக் சர்மா 13 பந்தில் 31 ரன்கள் எடுத்து யாஷ் யதாள் பந்தில் ஆட்டமிழந்தார்.

    300 ரன்கள் அடிப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில், 207 இலக்கை எட்ட முடியவில்லையே என ரசிகர்கள் டிரோல் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தொடக்க வீரர்களிடம் 14 போட்டிகளிலும் சிறந்த ஆட்டத்தை எதிர்பார்க்க முடியாது என சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளர் வெட்டோரி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக வெட்டோரி கூறியதாவது:

    எங்கள் அணி மீதான எதிர்பார்ப்புகள் அனைத்தும் தொடக்க வீரர்களாக அமைக்கப்பட்டது என்பது எங்களுக்கு தெரியும். இன்றைய நாள் (நேற்று) அவர்களுடையதாக அமையவில்லை. கிரிக்கெட்டில் இதுபோன்ற நாட்கள் அமையும். 14 போட்டிகளிலும் அவர்கள் சிறப்பாக விளையாட வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. துரதிருஷ்டவசமாக நாங்கள் மிடில் ஆர்டர் வரிசையில் ஆதரவு பெற முடியவில்லை.

    இது கடினமான தோல்விதான். என்றால், எந்த அணியும் எந்த அணியை ஐபிஎல் கிரிக்கெட்டில் தோற்கடிக்க முடியும் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியும். ஐபிஎல் எந்த போட்டியில் எளிதாக போட்டி என்பது கிடையாது.

    இவ்வாறு வெட்டோரி தெரிவித்துள்ளார்.

    • சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த சீசனில் மூன்று முறை 220 ரன்களை தாண்டியுள்ளது.
    • இந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மூன்று முறை 220 ரன்களை தாண்டியுள்ளது.

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பேட்டிங் செய்து 222 ரன்கள் குவித்தது. இதன்மூலம் ஒரே சீசனில் அதிக முறை 220 ரன்களை தாண்டிய அணிகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தன. தற்போது கொல்கத்தா அணி அதில் இணைந்துள்ளது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இதற்கு முன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக 223 ரன்கள் குவித்திருந்தது. இந்த போட்டியில் தோல்வியை சந்தித்தது.

    டெல்லிக்கு எதிராக 272 ரன்கள் குவித்திருந்தது. இதில் டெல்லி அணி 166 ரன்னில் சுருண்டு தோல்வியை தழுவியது.

    இதே சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் டெல்லிக்கு எதிராக 266 ரன்களும், ஆர்சிபிக்கு எதிராக 287 ரன்களும், மும்பைக்கு எதிராக 277 ரன்களும் குவித்துள்ளது. இந்த மூன்று போட்டிகளிலும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றிருந்தது.

    கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் 3 முறை 220 ரன்களுக்கு அதிகமாக ரன்கள் குவித்துள்ளது.

    • ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.
    • பெங்களூரு ராயல் சேலஞ்ரஸ் அணி ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.

    புதுடெல்லி:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 35 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளது.

    இந்நிலையில், ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 10 புள்ளிகள் பெற்று 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

    கொல்கத்தா, சென்னை மற்றும் குஜராத் அணிகள் தலா 8 புள்ளிகள் பெற்று 3,4,5-வது இடங்களில் உள்ளன.

    பெங்களூரு ராயல் சேலஞ்ரஸ் அணி ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.

    • 2017-ல் ஆர்சிபிக்கு எதிராக கேகேஆர் 105 ரன்கள் எடுத்திருந்தது அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
    • பஞ்சாப் அணிக்கெதிராக 2014-ல் சிஎஸ்கே 100 ரன்களும், 2015-ல் மும்பைக்கு எதிராக சிஎஸ்கு 90 ரன்களும் எடுத்துள்ளது.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லியில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற டெல்லி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை கலீல் அகமது வீசினா். முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்காத டிராவிஸ் ஹெட் 2-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார். அதனைத் தொடர்ந்து இருவரும் வாணவேடிக்கை நடத்தினர். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ், மூன்று பவுண்டரிகளுடன் 19 ரன்கள் அடித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.

    2-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளரான லலித் யாதவ் வீசினார். இந்த ஓவரில் இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரிகளுடன் 21 ரன்கள் விளாசியது.

    3-வது ஓவரை நோர்ஜே வீசினார். இந்த ஓவரில் முதல் நான்கு பந்துகளில் மூன்று பந்துகளை டிராவிஸ் ஹெட் பவுண்டரிக்கு விரட்ட ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் ஸ்கோர் 50 ரன்னைக் கடந்தது. 5-வது பந்தை பவுண்டரிக்கும், 6-வது பந்தை சிக்சருக்கும் தூக்கி 16 பந்தில் அரைசதம் அடித்தார் டிராவிஸ் ஹெட். 3-வது ஓவரில் 22 ரன்கள் கிடைக்க அந்த அணியின் ஸ்கோர் 62 ஆனது.

    4-வது ஓவரை லலித் யாதவ் வீசினார். இந்த ஓவரில் 3 சிக்ஸ் விளாச 21 ரன்கள் கிடைத்தது. 5-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரில் 3 சிக்ஸ் விளாச அணியின் ஸ்கோர் 100 ரன்னைக் கடந்தது. இந்த ஓவரில் 20 ரன்கள் கிடைத்தன.

    முகேஷ் குமார் வீசிய இந்த ஓவரில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உடன் 22 ரன்கள் கிடைக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் விக்கெட் இழப்பின்றி 125 ரன்கள் குவித்தது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிகவேகமாக (ஐந்து ஓவர்களில்) சதம் அடித்த அணி என்ற சாதனையையும், ஐபிஎல் வரலாற்றில் பவர்பிளேயில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற சாதனையையும் படைத்துள்ளது.

    இதற்கு முன்னதாக 2017-ல் ஆர்சிபிக்கு எதிராக கேகேஆர் 105 ரன்கள் எடுத்திருந்தது அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. பஞ்சாப் அணிக்கெதிராக 2014-ல் சிஎஸ்கே 100 ரன்களும், 2015-ல் மும்பைக்கு எதிராக சிஎஸ்கு 90 ரன்களும் எடுத்துள்ளது.

    • ஆர்சிபி ஆறு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடம்.
    • பஞ்சாப், மும்பை, டெல்லி அணிகள் தலா இரண்டு வெற்றிகள் மூலம் முறையே 7 முதல் 9 இடங்களை பிடித்துள்ளன.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணைகளைத் தவிர மற்ற எட்டு அணியிகள் தலா 6 போட்டிகளில் விளையாடி முடித்து விட்டன.

    நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே 20 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியே வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

    இதுவரை நடந்துள்ள போட்டிகள் முடிவில் ஒவ்வொரு அணிகளும் புள்ளிகள் பட்டியலில் எந்த இடத்தில் உள்ளன என்பதை பார்ப்போம்...

    ராஜஸ்தான் ராயல்ஸ் 6 போட்டியில் ஐந்தில் வெற்றி பெற்று பத்து புள்ளிகளுடன் முதல் இடம் வகிக்கிறது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐந்து போட்டியில் நான்கில் வெற்றி பெற்று எட்டு புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் ஆறு போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று 8 புள்ளிகள் உடன் 3-வது இடம் வகிக்கிறது.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தலா மூன்று வெற்றிகள் பெற்றுள்ளன. ரன் ரேட் அடிப்படையில் சன் ரைசர்ஸ் 4-வது இடத்தையும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஐந்தாவது இடத்தையும், குஜராத் ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளன.

    பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய மூன்று அணிகள் தலா இரண்டு வெற்றிகள் பெற்று ரன்ரேட் அடிப்படையில் முறையே 7 முதல் 9 இடங்களை பிடித்துள்ளன.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆறு போட்டியில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் தொடரில் ஒரு அணி பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற வேண்டும் என்றால், 10 இடங்களில் வெற்றி பெற வேண்டும். ஒன்பது அல்லது எட்டு இடங்களில் வெற்றி பெற்றால் மற்ற அணிகளின் ரன்ரேட், வெற்றித் தோல்வி ஆகியவற்றை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்.

    தற்போதைய நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆறில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இன்று சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டியில் இருந்து அந்த அணி மீதமுள்ள 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றே தீர வேண்டும்.

    இன்றைய போட்டியில் தோல்வியடைந்தால் ஏறக்குறைய போட்டியிலிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்படும். ஆகவே ஆர்.சி.பி. அணிக்கு இன்றைய போட்டியிலிருந்து அனைத்து போட்டிகளும் சால்வா? சாவா? போட்டிகள் போன்றே கருதப்படும்.

    பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்னும் ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் கூட பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியும்.

    • ஹசரங்கா இலங்கை அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
    • டெஸ்ட்டில் 4 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளார்.

    சட்டோகிராம்:

    இலங்கை கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது.

    இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் முதல் இரு ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் 1-1 என தொடர் சமனில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் வங்காளதேசம் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் வருகிற 22-ந் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    வங்காளதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    அவர் இலங்கை அணிக்காக 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி 4 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனால் ஐபிஎல் தொடரின் முதல் பாதியை ஹரங்கா தவறவிடுவார் என தெரிகிறது. இவர் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளார்.

    • 2023 சீசனில் தென்ஆப்பிரிக்காவின் எய்டன் மார்கிராம் கேப்டனாக செயல்பட்டார்.
    • கம்மின்ஸை சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாடும் அணிகளில் ஒன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத். கடந்த 2023 சீசனில் அந்த அணியின் கேப்டனாக தென்ஆப்பிரிக்காவின் எய்டன் மார்கிராம் செயல்பட்டார். இவரது தலைமையில் அந்த அணி சிறப்பாக செயல்படவில்லை.

    இந்த நிலையில் 2024 சீசனுக்கான அணியின் கேப்டன் பெயரை அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளரும், அந்த அணியின் கேப்டனுமான பேட் கம்மின்ஸ் கேப்டனாக செயல்படுவார் என சன்ரைசர்ஸ் ஐதராபாத் தெரிவித்துள்ளது.

    பேட் கம்மின்ஸை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20.5 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்தது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன 2-வது வீரர் இவராவார்.

    பேட் கம்மின்ஸ் இதற்கு முன்னதாக கொல்கத்தா நைட் ரைடரஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்குகாக விளையாடியுள்ளார்.

    இவரது தலைமையில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகியவற்றை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஐபிஎல் 2024 சீசன் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் தனது முதல் போட்டியில் மார்ச் 23-ந்தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. மார்ச் 17-ந்தேதி மும்பை இந்தியன்ஸ் அணியையும், மார்ச் 31-ந்தேதி குஜராத் டைட்டன்ஸ் அணியையும் எதிர்கொள்ள இருக்கிறது.

    • மாடல் அழகி தன்யா சிங் கடந்த திங்கட்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • தற்கொலை தொடர்பாக கடிதம் எழுதி வைக்காத நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்தவர் மாடல் அழகி தன்யா சிங். தன்யா சிங், சூரத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட அவர், அதற்கான காணரம் குறித்து கடிதம் ஏதும் எழுதி வைக்கவில்லை.

    அவரது தற்கொலைக்கான காரணம் தெரியாத நிலையில், போலீசார் தீவிரமாக துப்புதுலக்கி வருகின்றனர். இந்த நிலையில்தான் ஐபிஎல் கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மாவிடம், தன்யா கிங் தற்கொலை குறித்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

    அபிஷேக் சர்மா ஐபிஎல் கிரிக்கெட்டில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். இவரும் தன்யா சிங்கும் நணபர்களாக இருந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதன் அடிப்படையில் விசாரணை நடத்த இருப்பதாகவும், அதற்காக அவருக்கு சம்மன் அனுப்ப இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    மாடல் அழகி தன்யா சிங் அபிஷேக் சர்மாவுக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பியதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. விசாரணைக்கு பிறகுதான் இது தொடர்பாக தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். மேற்கொண்டு ஏதும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

    அதேவேளையில் அபிஷேக் சர்மா, தன்யா சிங்கின் வாட்ஸ்அப் நம்பரை பிளாக் செய்தி வைத்திருந்ததாகவும், அவருடைய மெசேஜ்-க்கு பதில் அளிக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    தன்யா சிங் கடந்த திங்கட்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது அறை நீண்டு நேரம் திறக்கப்படாத நிலையில், அவரது தந்தை சென்று பார்த்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பேஷன் டிசைனரான அவருக்கு, குறிப்பிடத்தகுந்த ரசிகர்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹர்திக் பாண்ட்யாவை குஜராத் அணி தக்கவைத்துக் கொண்டது.
    • ஒருவேளை அவர் மும்பை அணிக்கு சென்றால் சுப்மன கில் கேப்டனாக செயல்படுவார்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ந்தேதி நடக்கிறது. இந்த ஏலத்துக்கு முன்பு ஐ.பி.எல். அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். வீரர்களை தங்களது அணியில் தக்க வைத்துக் கொள்ளவும், விடுவிக்கவும் இயலும்.

    ஒவ்வொரு அணியும் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் மற்றும் விடுவிக்கப்பட்டவர்கள் விவரத்தை நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.

    10 அணிகளிலும் 174 வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர். 81 வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில்தான் அதிகமான வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய 3 அணிகள்தான் அதிகமான வீரர்களை தக்க வைத்துள்ளன.

    சென்னை அணியில் பென் ஸ்டோக்ஸ், பிரிட்டோரியஸ், அம்பதி நாயுடு, மகாலா, ஜேமிசன், பகத் வர்மா, சேனாபதி, ஆகாஷ் சிங் ஆகிய 8 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் டோனி விளையாடுவது உறுதியாகி உள்ளது.

    குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டயா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்புவார் என்று கடந்த சில தினங்களாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் இந்த அறிவிப்பின்போது குஜராத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டது.

    அதே நேரத்தில் வீரர்களின் பரிமாற்றம் வருகிற 12-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஹர்திக் பாண்ட்யாவை தங்களது அணிக்கு கொண்டுவர மும்பை அணி தொடர்ந்து முயற்சிக்கும் என்று தெரிகிறது. அந்த முயற்சி வெற்றி பெற்றால், குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில் செயல்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    வீரர்கள் விடுவிப்புக்கு பிறகு 10 அணிகளிடமும் ரூ.262.95 கோடி கையிருப்பு இருக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிடம்தான் அதிகபட்சமாக ரூ. 40.75 கோடி கையிருப்பு உள்ளது. அந்த அணி 11 வீரர்களை விடுவித்தது.


    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 வீரர்களை வெளியேற்றி உள்ளதால் ரூ. 31.4 கோடி கைவசம் இருக்கிறது.

    ஐதராபாத் அணி ரூ.34 கோடியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.32.7 கோடியும், பஞ்சாப் கிங்ஸ் ரூ.29.1 கோடியும், டெல்லி கேப்பிடல்ஸ் ரூ.28.95 கோடியும், குஜராத் ரூ.23.15 கோடியும், மும்பை இந்தியன்ன்ஸ ரூ.15.25 கோடியும், ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.14.5 கோடியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ரூ.13.15 கோடியும் கையிருப்பாக வைத்துள்ளன.

    • சன்ரைசர்ஸ் அணியின் துவக்க வீரர் அபிஷேக் ஷர்மா 67 ரன்களை குவித்தார்.
    • அப்துல் சமத் தன் பங்கிற்கு 21 பந்துகளில் 28 ரன்களை குவித்தார்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய இரண்டாவது போட்டி டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    ஆரம்பத்திலேயே விக்கெட்களை இழந்த போதிலும், சன்ரைசர்ஸ் அணியின் துவக்க வீரர் அபிஷேக் ஷர்மா 67 ரன்களை குவித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு தங்களது விக்கெட்டை இழந்தனர். இறுதியில் ஹென்ரிச் கிளாசென் தீவிர ரன் குவிப்பில் ஈடுபட்டார். இவருடன் ஆடிய அப்துல் சமத் தன் பங்கிற்கு 21 பந்துகளில் 28 ரன்களை குவித்தார்.

    இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹென்ரிச் கிளாசென் 27 பந்துகளில் 53 ரன்களை குவித்து அசத்தினார். இவருடன் ஆடிய அகேல் ஹூசைன் 16 ரன்களை குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 197 ரன்களை குவித்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சார்பில் அபாரமாக பந்து வீசிய மிட்செல் மார்ஷ் நான்கு விக்கெட்களை வீழ்த்தினார்.

    • சென்னை சேப்பாக்கத்தில் நேற்று சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் மோதின.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 29-வது போட்டி நேற்று சென்னை எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியும் அடைந்து புள்ளிப் பட்டியலில் 3-வது இடம் பிடித்துள்ளது.

    இந்தப் போட்டி முடிந்த பிறகு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனின் மகள் ஹன்விகா உடன் கொஞ்சி பேசி மகிழ்ந்தார்.

    அப்போது எனக்கு மகள் இருக்கிறாள் என்று டோனி சொல்லவே, தம்பி இல்லையா என்று நடராஜனின் மகள் கேட்க, இல்லை இவ்வளவு உயரத்தில் ஒரு மகள் இருக்கிறாள் என்று டோனி சைகையால் கூறினார். இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம் கரணை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.18.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
    • ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீனை ரூ.17.50 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

    கொச்சி:

    16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் இன்று நடைபெறுகிறது. இதில், இங்கிலாந்தின் இளம் வீரர் சாம் கர்ரனை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நடைபெற்றது. இடையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளும் போட்டி போட்டு ஏலம் கேட்டன. இறுதியாக, சாம் கர்ரனை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.18.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

    இதேபோல் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீனை வாங்கவும் கடும் போட்டி இருந்தது. இறுதியில் அவரை ரூ.17.50 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

    சாம் கர்ரன் மற்றும் கேமரூன் கிரீன் இருவரும் இதுவரை நடந்த ஐபிஎல் ஏலத்திலேயே அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் என்ற சாதனையை படைத்துள்ளனர். 

    சாம் கர்ரன் - ரூ.18.50 கோடி (பஞ்சாப் கிங்ஸ்) கோடி

    கேமரூன் கிரீன் - ரூ.17.50 கோடி (மும்பை இந்தியன்ஸ்)

    பென் ஸ்டோக்ஸ் - ரூ.16.25 கோடி (சென்னை சூப்பர் கிங்ஸ்)

    ஹாரி புரூக்- ரூ.13.25 கோடி (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)

    ஜேசன் ஹோல்டர் - ரூ.5.75 கோடி (ராஜஸ்தான் ராயல்ஸ்)

    ×