என் மலர்

  நீங்கள் தேடியது "MI"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேப்பாக்கத்தில் நடைபெறும் குவாலிபையர்-1ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது. #IPL2019 #CSKvMI #Qualifier1
  ஐபிஎல் தொடரின் குவாலிவையர்-1 சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் டோனி பேட்டிங் தேர்வு செய்தார்.

  இதையடுத்து, சென்னை அணியின் தொடக்க  ஆட்டக்காரர்களாக வாட்சன், டு பிளிசிஸ் களமிறங்கினர்.

  ஆட்டத்தின் தொடக்கத்தில் மும்பை அணியினரின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. இதனால் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழுந்தன.  டு பிளசிஸ் 6 ரன்னிலும், ரெய்னா 5 ரன்னிலும், வாட்சன் 10 ரன்னிலும் அவுட்டாகினர். தொடர்ந்து இறங்கிய முரளி விஜய்க்கு, அம்பதி ராயுடு ஒத்துழைப்பு கொடுத்தார். ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய முரளி விஜய் 26 ரன்னில் வெளியேறினார். அப்போது அணியின் எண்ணிக்கை 4 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்திருந்தது.

  அடுத்து கேப்டன் டோனி இறங்கினார். இருவரும் பவுண்டரி, சிக்சராக விளாசினர். இறுதியில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 131 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, மும்பை அணிக்கு 132 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி. டோனி 37 ரன்னுடனும், ராயுடு 42 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

  மும்பை அணி சார்பில் ராகுல் சாஹர் 2 விக்கெட்டும், குருணால் பாண்டியா, ஜெயந்த் யாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

  இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்கியது. ரோகித் சர்மா 4, டி காக் 8  ஆகியோர் வந்த வேகத்தில் வெளியேறினர்.  சூர்யா குமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் பொறுப்புடன் ஆடினர். மும்பை அணி 101 ரன்கள் இருந்தபோது இஷான் கிஷன் 28 வெளியேறினார். அடுத்து வந்த குர்ணால் பாண்டியா டக் முறையில் வெளியேறினார்.

  இந்நிலையில் ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யா குமார் யாதவ் அணியை வெற்றி பெற செய்தனர்.

  மும்பை இந்தியன்ஸ் அணி 9 பந்துகள் மீதம் உள்ள நிலையில்  சென்னை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சூர்யா குமார் யாதவ் 71 கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்,

  சென்னை அணி தரப்பில் இம்ரான் தாகீர் 2 விக்கெட்டும் ஹர்பஜன், சாஹர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். #IPL2019 #CSKvMI #Qualifier
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது. #IPL2019 #KKRvMI

  ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன்கார்டனில் நேற்றிரவு அரங்கேறிய 47-லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் கொல்கத்தா நைட் ரைடர்சும், மும்பை இந்தியன்சும் மல்லுகட்டின. இதில் ‘டாஸ்’ ஜெயித்த மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

  இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின்னும், சுப்மான் கில்லும் களம் புகுந்தனர். பரிந்தர் ஸ்ரன் வீசிய முதல் ஓவரிலேயே 2 பவுண்டரி, ஒரு சிக்சர் ஓட விட்ட சுப்மான் கில், அதே உத்வேகத்துடன் விடாமல் மட்டையை சுழட்டினார். கிறிஸ் லின்னும் சரவெடியாய் வெடிக்க, ஸ்கோர் மளமளவென எகிறியது. இவர்கள் ஜோடியாக 96 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். கிறிஸ் லின் 54 ரன்களில் (29 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர் ) கேட்ச் ஆனார். இதன் பின்னர், முந்தைய நாள் கேப்டனின் முடிவுகளை சரமாரியாக விமர்சித்த ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செல், திடீரென 2-வது விக்கெட்டுக்கு இறக்கப்பட்டார். ஒரு சில ஓவர்கள் நிதானத்துக்கு பிறகு ரஸ்செல் தனது கைவரிசையை காட்டினார். மறுமுனையில் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மான் கில் 76 ரன்களில் (45 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர் ) வெளியேறினார்.
  அடுத்து கேப்டன் தினேஷ் கார்த்திக் வந்தார். மறுமுனையில் ரஸ்செல் ரன்வேட்டை நடத்தினார். அவரை கட்டுப்படுத்த வழிதெரியாமல் மும்பை கேப்டன் ரோகித் சர்மா விழிபிதுங்கிப் போனார். அவருக்கு எப்படி பந்து வீசுவது என்று தெரியாமல் பவுலர்கள் திண்டாடினர். ஆப்-சைடுக்கு வெளியே பந்து வீசினாலும் அதையும் நொறுக்கித் தள்ளினார். ஹர்திக் பாண்ட்யாவின் ஒரே ஓவரில் 3 சிக்சர்களை விளாசிய அவர், பும்ரா, மலிங்காவின் பந்து வீச்சையும் விட்டுவைக்கவில்லை. அவரது அசுரத்தனமான பேட்டிங்கால் கொல்கத்தா அணி மலைப்பான ஸ்கோரை எட்டிப்பிடித்தது.

  20 ஓவர்களில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் குவித்தது. இந்த சீசனில் ஒரு அணியின் அதிகபட்சமான ஸ்கோர் இதுதான். அது மட்டுமின்றி மும்பைக்கு எதிராக கொல்கத்தாவின் அதிகபட்சமாகவும் இது பதிவானது. இந்த தொடரில் தனது 4-வது அரைசதத்தை கடந்த ஆந்த்ரே ரஸ்செல் 80 ரன்களுடனும் (40 பந்து, 6 பவுண்டரி, 8 சிக்சர்), தினேஷ் கார்த்திக் 15 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

  அடுத்து 233 ரன்கள் இலக்கை நோக்கி மும்பை அணி ஆடியது. குயின்டான் டி காக் (0), கேப்டன் ரோகித் சர்மா (12 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. விக்கெட் சரிவுக்கு மத்தியில் ஹர்திக் பாண்ட்யா மட்டும் நிலைத்து நின்று வாணவேடிக்கை காட்டினார். அவர் 17 பந்துகளில் 7 சிக்சருடன் அரைசதத்தை கடந்து மிரள வைத்தார். இந்த சீசனில் ஒரு வீரரின் அதிவேக அரைசதம் இது தான்.

  ஹர்திக் பாண்ட்யா மிரட்டினாலும் ரன்தேவை அதிகமாக இருந்ததால் கொல்கத்தா அணியின் கையே ஓங்கி இருந்தது. பாண்ட்யா 91 ரன்களில் (34 பந்து, 6 பவுண்டரி, 9 சிக்சர்) கேட்ச் ஆனார். 20 ஓவர்களில் மும்பை அணி 7 விக்கெட்டுக்கு 198 ரன்களே எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் அடுத்த சுற்று வாய்ப்பிலும் நீடிக்கிறது.
  தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் தோற்று இருந்த கொல்கத்தா அணி ஒரு வழியாக தோல்விப்பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது. மேலும் கொல்கத்தா அணி 4 ஆண்டுகளுக்கு பிறகு (அதாவது தொடர்ந்து 8 தோல்விக்கு பிறகு) மும்பையை சாய்த்து இருக்கிறது.

  கொல்கத்தா தரப்பில் ரஸ்செல், நரின், குர்னே தலா 2 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர் பியூஸ் சாவ்லா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பியூஸ் சாவ்லாவுக்கு ஐ.பி.எல்.-ல் இது 150-வது விக்கெட்டாக அமைந்தது. இந்த மைல்கல்லை எட்டிய 3-வது பவுலர் ஆவார்.  #IPL2019 #KKRvsMI

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #IPL2019 #CSKvMI
  ஐபிஎல் தொடரின் 44-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

  டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் சுரெஷ் ரெய்னா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

  இதையடுத்து, மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், குயிண்டன் டி காக்கும் களமிறங்கினர்

  அணியின் எண்ணிக்கை 24 ஆக இருக்கும்போது டி காக் 15 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய எவின் லெவிஸ் 32 ரன்னில் வெளியேறினார். குருணால் பாண்டியா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.  ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ரோகித் சர்மா ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினார். அவர் 48 பந்தில் 3 சிக்சர், 6 பவுண்டரியுடன் 67 ரன்கள் குவித்து அவுட்டானார்.

  இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களை எடுத்துள்ளது. ஹர்திக் பாண்டியா 23 ரன்னுடனும், பொல்லார்டு 13 ரன்னுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர்.

  இதனையடுத்து 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் களம் இறங்கியது. முரளி விஜய், வாட்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார். முதல் ஓவரிலேயே சிஎஸ்கே ரசிர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மலிங்கா வீசிய அந்த ஓவரில் இரண்டு பவுண்டரிகள் அடித்த வாட்சன் 8 ரன்னில் ஐந்தாவது பந்தில் ஆட்டமிழந்தார்.

  அந்த அதிர்ச்சியில் இருந்து ரசிகர்கள் மீள்வதற்குள் அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா பந்தில் ரெய்னா 2 ரன்களிலும், அம்பதி ராயுடு ரன்ஏதும் எடுக்காமலும் குருணால் பாண்டியா பந்திலும் ஆட்டமிழந்தனர். ஒரு பக்கம் முரளி விஜய் நிலைத்து நிற்க மறுபக்கம் விக்கெட் வீழந்த வண்ணமே இருந்தது.

  கேதர் ஜாதவ் 6 ரன்னிலும், ஷொரே 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நிலைத்து விளையாடிய முரளி விஜய் 38 ரன்னில் வெளியேறினார். இதனால் சிஎஸ்கே 11.4 ஓவரில் 66 ரன்கள் எடுப்பதற்குள் முக்கியமான 6 விக்கெட்டுக்களை இழந்தது.

  7-வது விக்கெட்டுக்கு பிராவோ உடன் சான்ட்னெர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. அணியின் எண்ணிக்கை 99 ரன்கள் இருந்த போது மலிங்கா பந்து வீச்சில் பிராவோ வெளியேற அடுத்த வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இதனால் சென்னை அணி 109 ரன்களில் ஆல் அவுட் ஆகி 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. #IPL2019 #CSKvMI
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மும்பை இந்தியன்ஸ் அணி கம்மின்ஸ், டுமினி, முஷ்டாபிஜூர் ரஹ்மான் ஆகியோரை 2019 சீசனுக்கான அணியில் இருந்து விடுவித்துள்ளது. #IPL2019 #MI
  ஐபிஎல் 2019 சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 18-ந்தேதி நடக்கியது. இதற்கு முன் வீரர்களை தக்கவைத்தல், விடுவித்தல் ஆகியவற்றிற்கான காலக்கெடு 2018 ஐபிஎல் சீசன் தொடங்கியதில் இருந்து நேற்றுடன் முடிவடைந்தது.  மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ், தென்ஆப்பிரிக்கா அணியின் ஆல்ரவுண்டர் டுமினி, வங்காள தேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஷ்டாபிஜூர் ரஹ்மான ஆகியோரை விடுவித்துள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா மோசமான பேட்டிங்கால் விரும்பத்தகாத சாதனைப் படைத்துள்ளார். #IPL2018 #MI #Rohitsharma
  ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸ் 14 போட்டிகளில் 8-ல் தோல்வியடைந்து பிளேஆஃப்ஸ் சுற்று வாய்ப்பை இழந்தது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணியை மும்பை இந்தியன்ஸ் சந்தித்தது. அதிக ரன்ரேட் வைத்திருந்த மும்பை இந்தியன்ஸ், டெல்லியை வீழ்த்தினாலே இறுதிப் போட்டிக்கு முன்னேறி விடலாம் என்ற நிலை இருந்தது.

  ஆனால் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து லீக் சுற்றோடு வெளியேறியது. மும்பை அணியின் தோல்விக்கு ரோகித் சர்மாவின் மோசமான ஃபார்ம் முக்கிய காரணம்.  இந்த தொடரில் 14 ஆட்டங்களில் 286 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதன்மூலம் ஒரு தொடரில் 300 ரன்களுக்கு கீழ் முதன்முறையாக அடித்து மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார். சராசரி 23.83 புள்ளியே. 2013-ல் 538 ரன்கள் குவித்தார். 19 போட்டியில் சராசரி 38.42 ஆகும்.

  2008-ல் 404 ரன்கள் அடித்திருந்தார். 2009-ல் 362 ரன்களும், 2010-ல் 404 ரன்களும், 2011-ல் 372 ரன்களும், 2012-ல் 433 ரன்களும், 2013-ல் 538 ரன்களும், 2014-ல் 390 ரன்களும், 2015-ல் 482 ரன்களும், 2016-ல் 489 ரன்களும், 2017-ல் 333 ரன்களும் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், நான்காவதாக பிளேஆப் சுற்றில் நுழைவதில் ராஜஸ்தான், மும்பை, பஞ்சாப் அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. #VIVOIPL #CSKvKXIP #DDvMI
  புதுடெல்லி:

  11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 7-ந்தேதி தொடங்கியது. இதில் 8 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும் மற்ற 2 அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

  சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதல் அணியாக பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணி 9 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. 5 போட்டியில் தோற்றது. 18 புள்ளிகளை பெற்றுள்ளது. சென்னை சூப்பர்கிங்ஸ் 2-வது அணியாக முன்னேறியது. அந்த அணி 8 வெற்றி, 5 தோல்வியுடன் 16 புள்ளிகளை பெற்றுள்ளது இன்னும் ஒரு ஆட்டம் அந்த அணிக்கு எஞ்சியுள்ளது.

  நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3-வது அணியாக பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணி 8 வெற்றி, 6 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்றது.

  பிளேஆப் சுற்றுக்கு இன்னும் ஒரு அணி தகுதி பெற வேண்டும். இதற்கான போட்டியில் 3 அணிகள் உள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ்
  (14 புள்ளி), மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் (தலா 12 புள்ளி) ஆகிய அணிகள் போட்டியில் உள்ளன. இதில் ராஜஸ்தானுக்கு போட்டிகள் முடிந்து விட்டது. மும்பை, பஞ்சாப் அணிகளுக்கு தலா 1 ஆட்டங்கள் உள்ளன.

  டெல்லி டேர்டெவில்ஸ் (8 புள்ளி) ஏற்கனவே வாய்ப்பை இழந்து விட்டது. நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தானிடம் தோற்றதால் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெளியேற்றப்பட்டது. அந்த அணி 6 வெற்றி, 8 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது.  இன்றைய கடைசி நாள் லீக்கில் 2 ஆட்டங்கள் நடக்கிறது. டெல்லி பெரோ சா கோட்லா மைதானத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஷிரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் - ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

  இரவு 8 மணிக்கு புனேயில் நடைபெறும் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் - அஸ்வின் தலைமையிலான கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. 

  நடப்பு சாம்பியனான மும்பை அணி டெல்லியை கண்டிப்பாக வீழ்த்த வேண்டிய நெருக்கடியில் உள்ளது. தோல்வி அடைந்தால் மும்பை அணி வெளியேற்றப்படும்.

  மும்பை வென்று, கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றால் ராஜஸ்தான், மும்பை, பஞ்சாப் ஆகிய 3 அணிகளும் 14 புள்ளியின் சம நிலையில் இருக்கும். அப்படி நிகழும் பட்சத்தில் ரன்ரேட் அடிப்படையில் ஒரு அணி தகுதி பெறும். ராஜஸ்தான், பஞ்சாப்பை ஒப்பிடுகையில் மும்பை ரன் ரேட்டில் நல்ல நிலையில் உள்ளது. இதனால் டெல்லியை வீழ்த்தினால் அந்த அணி வாய்ப்பை பெறும் சூழ்நிலை உருவாகும்.

  இன்றைய ஆட்டங்களில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் தோற்றால் ராஜஸ்தான் அணி பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும்.

  மும்பை வென்று, பஞ்சாப் தோற்றால் ராஜஸ்தான், மும்பை அணிகள் சம புள்ளியை பெறும். ரன்ரேடில் ஒரு அணி தகுதி பெறும். மும்பை தோற்று சென்னை அணியை பஞ்சாப் வீழ்த்தினால் ராஜஸ் தான், பஞ்சாப் அணிகள் சம புள்ளியை பெறும். ரன்ரேட்டில் ஒரு அணி நுழையும்.

  பஞ்சாப்பின் ரன்ரேட் -0.49 ஆக உள்ளது. இதனால் அந்த அணி சென்னைக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். சென்னை அணி வலுவானது என்பதால் பஞ்சாப் வீரர்கள் கடுமையாக போராட வேண்டியது இருக்கும். முந்தைய ஆட்டத்தில் சூப்பர் கிங்சை ஏற்கனவே வீழ்த்தி இருப்பதால் பஞ்சாப் அணி நம்பிக்கையுடன் உள்ளது.  மேலும், மும்பை - டெல்லி ஆட்டத்துக்கு பிறகு தான் இந்த ஆட்டம் நடக்கிறது. இதனால் அதன் முடிவுக்கு ஏற்றது போல விளையாடலாம். இந்த போட்டித் தொடரில் தொடக்கத்தில் அபாரமாக ஆடிய பஞ்சாப் பின்னர் தொடர் தோல்வியால் நெருக்கடிக்கு ஆளானது. தொடர்ந்து 4 ஆட்டங்களில் தோற்று இருக்கிறது. இதனால், சென்னைக்கு எதிராக அதிரடியாக ஆடி வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.

  ஏற்கனவே வாய்ப்பை இழந்த டெல்லி தனது கடைசி லீக் ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தி அந்த அணியை வெளியேற்றும் ஆர்வத்தில் உள்ளது. சென்னை அணி கடைசி ஆட்டத்தில் பஞ்சாப்பை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும் வேட்கையில் உள்ளது. இதனால், இன்றைய இரண்டு போட்டிகளிலும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. #VIVOIPL #CSKvKXIP #DDvMI
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐபிஎல் போட்டிகள் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற மும்பை - ராஜஸ்தான் - கொல்கத்தா அணிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. #IPL2018 #MIvRR #CSKvSRH
  மும்பை:

  ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதி கட்டத்தை எட்டிவிட்டன. ஐதராபாத் அணி பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், பஞ்சாப் மற்றும் சென்னை அணி பிளேஆப் சுற்றை உறுதி செய்துள்ளன. டெல்லி, பெங்களூர் அணிகள் லீக் சுற்றுடன் வெளியேற உள்ளன.

  மும்பை, கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையே பிளேஆப் சுற்றுக்கு செல்வது யார் என்பது? முடிவு செய்ய முடியாத ஒன்றாகவே உள்ளது. அடியில் கிடந்த மும்பை அணி எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து வெற்றி பெற்று ஆச்சரியப்படுத்தியுள்ளது.  கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளும் பிளேஆப் சுற்றுக்குள் நுழைவதில் தீவிரமாக உள்ளது. இந்நிலையில், மும்பை - ராஜஸ்தான் அணிகள் இன்று 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளது. இரு அணிகளும் 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளன. ரன்ரேட்டில் சிறப்பாக இருப்பதால் மும்பை 5-வது இடத்திலும், ராஜஸ்தான் 6-வது இடத்திலும் உள்ளன.

  பிளேஆப் வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இருக்கிறது. வெற்றி பெறும் அணி தொடர்ந்து வாய்ப்பில் நீடிக்கும். தோற்கும் அணிக்கு வாய்ப்பு குறையும். இதனால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும். ஏற்கனவே மோதிய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்று இருந்தது.

  4 மணிக்கு புனேவில் நடக்கும் மற்றொரு போட்டியில் சென்னை - ஐதராபாத் அணிகள் மோத உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் 7 வெற்றி, 4 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

  ‘பிளே ஆப்’ சுற்று வாய்ப்பை பெற எஞ்சிய 3 ஆட்டத்தில் ஒன்றில் வெல்ல வேண்டும். ஐதராபாத் அணி பலம் பொருந்தியதாக இருப்பதால் அந்த அணியை வீழ்த்துவது சவாலானது. தொடர்ச்சியாக 6 வெற்றிகளை பெற்று வலுவானதாக திகழும் அந்த அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் தடுத்து நிறுத்துமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ஐதராபாத்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இருந்ததால் 8-வது வெற்றியை பெற்று பிளேஆப் சுற்றுக்குள் நுழையும் நம்பிக்கையுடன் இருக்கிறது. சென்னை அணியின் பேட்டிங் பலமாக உள்ளது. ஆனால் பந்து வீச்சுத்தான் கவலை அளிக்கும் வகையில் இருக்கிறது.

  பேட்டிங்கில் கேப்டன் டோனி, அம்பதி ராயுடு, வாட்சன், ரெய்னா ஆகியோர் மிகவும் சிறப்பான நிலையில் உள்ளனர். பந்துவீச்சு அபாரமாக அமைந்தால் தான் ஐதராபாத்தை வீழ்த்த இயலும். கடந்த ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வியால் பவுலர்கள் மீது டோனி அதிருப்தி அடைந்தனர். இதனால் இன்றைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்கும்.

  சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 9 வெற்றி, 2 தோல்வி யுடன் 18 புள்ளிகள் பெற்று ஏற்கனவே ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறி விட்டது. தொடர் வெற்றியை தக்க வைத்துக் கொள்ளும் ஆர்வத்துடனும் பதிலடி கொடுக்கும் வேட்கையுடனும் அந்த அணி உள்ளது.

  பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் ஐதராபாத் அணி திகழ்கிறது கேப்டன் வில்லியம்சன், தவான், யூசுப்பதான், மனிஷ் பாண்டே ஆகியோர் பேட்டிங்கிலும், ரஷித்கான், புவனேஸ்வர் குமார், சித்தார்த், கவுல் ஆகியோர் பந்துவீச்சிலும் நல்ல
  நிலையில் உள்ளனர். சகீப் அல்-ஹசன் ஆல் ரவுண்டரில் முத்திரை பதித்து வருகிறார்கள்.

  இரு அணிகளும் 7 ஆட்டத்தில் மோதியுள்ளன. இதில் சென்னை -5ல், ஐதராபாத்-2ல் வெற்றி பெற்றுள்ளன.
  ×