search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DCvsMI"

    • நாளை (ஏப்.7) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 20வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை, டெல்லி கேபிட்டல்ஸ் எதிர்கொள்கிறது
    • நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய 3 ஆட்டங்களிலும் தோல்வி கண்டு புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் மும்பை அணி உள்ளது

    17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் நாளை (ஏப்.7) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 20வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை, டெல்லி கேபிட்டல்ஸ் எதிர்கொள்கிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடிய 3 ஆட்டங்களிலும் தோல்வி கண்டு புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் மும்பை அணி உள்ளது.

    இழந்தை இடத்தை மீண்டும் பிடிக்க மும்பை அணிக்கு கட்டாயம் ஒரு வெற்றி பெற்றாக வேண்டும். ஹர்திக் பாண்ட்யாவின் கேப்டன்சி மீது உள்ள அதிருப்தி காரணமாகவே இந்த நிலை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், காயம் காரணமாக கடந்த மூன்று ஆட்டங்களிலும் விளையாடாத சூர்யகுமார் யாதவ் நாளை நடைபெற உள்ள டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மறுபுறம், டெல்லி அணியை பொறுத்தவரையில் இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி 1 வெற்றியும், 3 ஆட்டங்களில் தோல்வியும் கண்டு புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. கடைசியாக கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 106 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி படுதோல்வி அடைந்தது.

    அந்த தோல்வியில் இருந்து மீள வேண்டுமெனில் புதிதாக வெற்றி ஒன்றை பெற வேண்டிய நிர்பந்தத்தில் டெல்லி அணி உள்ளது. இதன் காரணமாக இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. அதேநேரம் சொந்த மண்ணில் விளையாடுவது மும்பை அணிக்கு கூடுதல் வாய்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் நாளை மும்பை உடனான போட்டி குறித்து டெல்லி அணி வீரர் டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மலையாளத்தின் வெற்றிபெற்ற அய்யப்பனும் கோஷியும்' படத்தின் போஸ்டரை எடிட் செய்து பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • வார்னருடன் இணைந்த அக்சர் பட்டேல், மும்பை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.
    • மும்பை தரப்பில் பியுஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டார்ப் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது லீக் ஆட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.

    துவக்க வீரர் டேவிட் வார்னர் நிதானமாக ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் அதிரடியாக ஆட முற்பட்ட பிருத்வி ஷா 15 ரன்கள், மணீஷ் பாண்டே 26 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் யாஷ் துல் (2), ரோவன் பாவெல் (4), லலித் யாதவ் (2) என சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்ததால் அணியின் ரன்ரேட் சரிந்தது. மறுமுனையில் வார்னர் அரை சதம் கடந்து ஆறுதல் அளித்தார்.

    வார்னருடன் இணைந்த அக்சர் பட்டேல், மும்பை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து ரன் குவித்தார். 22 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்சருடன் அரை சதம் கடந்த அக்சர் பட்டேல் 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 19வது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வார்னர் 51 ரன்னிலும், குல்தீப் யாதவ் ரன் எதுவும் எடுக்காமலும், அபிஷேக் பாரெல் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அந்த ஓவரில் மட்டும் 4 விக்கெட்டுகள் சரிந்தன. கடைசி ஓவரில் அன்ரிட்ஜ் நோர்ட்ஜே 5 ரன் எடுத்த நிலையில் வெளியேறினார். இதனால் டெல்லி அணி 19.4 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    மும்பை தரப்பில் பியுஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டார்ப் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ரிலே மியர்டித் 2 விக்கெட் எடுத்தார்.

    இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்குகிறது. 

    • அதிரடியாக ஆடிய யஸ்திகா பாட்டியா 43 ரன்களும், ஹெய்லி மேத்யூஸ் 32 ரன்களும் சேர்த்தனர்.
    • 15வது ஓவரில் நாட் ஷிவர் பிரண்ட் அடுத்தடுத்து பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 105 ரன்களில் ஆல் அவுட் ஆனது. கேப்டன் மெக் லேனிங் 43 ரன்களும், ஜெமிமா 25 ரன்களும் அடித்தனர்.

    இதையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி. அதிரடியாக ஆடிய யஸ்திகா பாட்டியா 43 ரன்களும், ஹெய்லி மேத்யூஸ் 32 ரன்களும் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். அதன்பின்னர் நாட் ஷிவர் பிரன்ட், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 15வது ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் நாட் ஷிவர் பிரண்ட் அடுத்தடுத்து பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார். நாட் ஷிவர் பிரண்ட் 23 ரன்களுடனும், கேப்டன் கவுர் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    30 பந்துகள் மீதமிருந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 109 ரன்கள் எடுத்தது. இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி ஹாட்ரிக் வெற்றியுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.

    • டெல்லி அணி துவக்கம் முதலே மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது.
    • அதிகபட்சமாக கேப்டன் மெக் லேனிங் 43 ரன்கள் அடித்து ஆறுதல் அளித்தார்.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்று முதலில் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, துவக்கம் முதலே மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது.

    துவக்க வீராங்கனையான கேப்டன் மெக் லேனிங் 43 ரன்கள் அடித்து ஆறுதல் அளித்தார். ஜெமிமா 25 ரன்கள் அடித்தார். மற்ற வீராங்கனைகள் நிலைக்கவில்லை. இதனால் 18 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த அந்த அணி 105 ரன்களில் ஆல் அவுட் ஆனது. மும்பை தரப்பில் சாய்கா இஷாக், இசி வாங், ஹெய்லி மேத்யுஸ் ஆகியோர் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

    இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி 106 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியது.

    ×