search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SRHvDC"

    • 2017-ல் ஆர்சிபிக்கு எதிராக கேகேஆர் 105 ரன்கள் எடுத்திருந்தது அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
    • பஞ்சாப் அணிக்கெதிராக 2014-ல் சிஎஸ்கே 100 ரன்களும், 2015-ல் மும்பைக்கு எதிராக சிஎஸ்கு 90 ரன்களும் எடுத்துள்ளது.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லியில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற டெல்லி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை கலீல் அகமது வீசினா். முதல் பந்தில் ரன் ஏதும் எடுக்காத டிராவிஸ் ஹெட் 2-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார். அதனைத் தொடர்ந்து இருவரும் வாணவேடிக்கை நடத்தினர். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ், மூன்று பவுண்டரிகளுடன் 19 ரன்கள் அடித்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.

    2-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளரான லலித் யாதவ் வீசினார். இந்த ஓவரில் இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரிகளுடன் 21 ரன்கள் விளாசியது.

    3-வது ஓவரை நோர்ஜே வீசினார். இந்த ஓவரில் முதல் நான்கு பந்துகளில் மூன்று பந்துகளை டிராவிஸ் ஹெட் பவுண்டரிக்கு விரட்ட ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் ஸ்கோர் 50 ரன்னைக் கடந்தது. 5-வது பந்தை பவுண்டரிக்கும், 6-வது பந்தை சிக்சருக்கும் தூக்கி 16 பந்தில் அரைசதம் அடித்தார் டிராவிஸ் ஹெட். 3-வது ஓவரில் 22 ரன்கள் கிடைக்க அந்த அணியின் ஸ்கோர் 62 ஆனது.

    4-வது ஓவரை லலித் யாதவ் வீசினார். இந்த ஓவரில் 3 சிக்ஸ் விளாச 21 ரன்கள் கிடைத்தது. 5-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரில் 3 சிக்ஸ் விளாச அணியின் ஸ்கோர் 100 ரன்னைக் கடந்தது. இந்த ஓவரில் 20 ரன்கள் கிடைத்தன.

    முகேஷ் குமார் வீசிய இந்த ஓவரில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உடன் 22 ரன்கள் கிடைக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் விக்கெட் இழப்பின்றி 125 ரன்கள் குவித்தது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிகவேகமாக (ஐந்து ஓவர்களில்) சதம் அடித்த அணி என்ற சாதனையையும், ஐபிஎல் வரலாற்றில் பவர்பிளேயில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற சாதனையையும் படைத்துள்ளது.

    இதற்கு முன்னதாக 2017-ல் ஆர்சிபிக்கு எதிராக கேகேஆர் 105 ரன்கள் எடுத்திருந்தது அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. பஞ்சாப் அணிக்கெதிராக 2014-ல் சிஎஸ்கே 100 ரன்களும், 2015-ல் மும்பைக்கு எதிராக சிஎஸ்கு 90 ரன்களும் எடுத்துள்ளது.

    • முதலில் ஆடிய ஐதராபாத் 197 ரன்களை எடுத்தது.
    • அபிஷேக் ஷர்மா, ஹென்ரிச் கிளாசன் அரை சதமடித்தனர்.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றைய இரண்டாவது போட்டி டெல்லி கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஐதராபாத் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 197 ரன்களை குவித்தது. தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா 67 ரன்களை குவித்தார். ஹென்ரிச் கிளாசென் 27 பந்துகளில் 53 ரன்களை குவித்து அசத்தினார். அப்துல் சமத் 21 பந்தில் 28 ரன்களை சேர்த்தார்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் சார்பில் அபாரமாக பந்து வீசிய மிட்செல் மார்ஷ் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

    இதையடுத்து, 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. கேப்டன் டேவிட் வார்னர் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

    அடுத்து இறங்கிய மிட்செல் மார்ஷ், பிலிப் சால்ட்டுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினார். 2வது விக்கெட்டுக்கு 112 ரன்கள் சேர்த்த நிலையில் சால்ட் 59 ரன்னில் அவுட்டானார். மனீஷ் பாண்டே ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். மிட்செல் மார்ஷ் 63 ரன்னிலும், பிரியம் கார்க் 12 ரன்னிலும், சர்ப்ராஸ் கான் 9 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இறுதியில், டெல்லி அணி 188 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. இதன்மூலம் ஐதராபாத் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 3வது வெற்றியைப் பதிவு செய்தது.

    • மணீஷ் பாண்டே, அக்சர் பட்டேல் ஜோடி நிலைத்து நின்று ஸ்கோரை உயர்த்தியது.
    • சன்ரைசர்ஸ் ஐதராபாத் தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட் கைப்பற்றினார்.

    ஐதராபாத்:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் உள்ளூர் அணியான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மோதுகிறது. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.

    துவக்க வீரர் பில் சால்ட் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அதன்பின்னர் மற்றொரு துவக்க வீரர் வார்னர் 21 ரன்னிலும், அதிரடியாக ஆடிய மார்ஷ் 25 ரன்னும் சேர்த்தனர். சர்பராஸ் கான் 10, அமன் ஹகிம் கான் 4 என விரைவில் விக்கெட்டை இழந்தனர். 62 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகள் சரிந்தன.

    அதன்பின் மணீஷ் பாண்டே, அக்சர் பட்டேல் ஜோடி நிலைத்து நின்று ஸ்கோரை உயர்த்தியது. இருவரும் தலா 34 ரன்கள் சேர்த்தனர். ரிபால் பட்டேல் 5 ரன், அன்ரிச் நோர்ட்ஜே 2 ரன்களில் ரன் அவுட் ஆக, டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் சேர்த்தது.

    ஐதராபாத் தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட் கைப்பற்றினார். புவனேஸ்வர் குமார் 2 விக்கெட், நடராஜன் ஒரு விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்குகிறது. 

    ×