என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபிஎல்"

    • ஏலம் முடிந்த பிறகும் நான் அழுதுகொண்டே இருந்தேன்.
    • என்னைச் சுற்றியிருந்தவர்கள் எல்லாம் மகிழ்ச்சியில் நடனமாடினார்கள்.

    ஐபிஎல் தொடரின் 19-வது சீசனுக்கான மினி ஏலம் நேற்று நடைபெற்றது. இதில் ராஜஸ்தானை சேர்ந்த 19 வயதான கார்த்திக் சர்மா (அன்கேப்ட் வீரர்) அடிப்படை விலை ரூ.30 லட்சத்தில் இருந்து ரூ.14.20 கோடிக்கு ஏலம் போனார். இவரை சிஎஸ்கே அணி ஏலம் எடுத்தது.

    கார்த்திக் சர்மாவை வாங்க ஆரம்பத்தில் லக்னோ மற்றும் மும்பை அணிகள் ஆர்வம் காட்டின. பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தீவிரமாகப் களமிறங்கியது. கொல்கத்தா அவரை வாங்கிவிடும் என்று நினைத்த நேரத்தில், சிஎஸ்கே உள்ளே புகுந்து விலையை எகிற வைத்தது. 10 கோடியைத் தாண்டியதும் ஐதராபாத் (SRH) அணி போட்டிக்கு வந்தது. ஆனால், விடாப்பிடியாக நின்ற சிஎஸ்கே, இறுதியில் ரூ.14.2 கோடிக்கு கார்த்திக் சர்மாவைத் தட்டித் தூக்கியது.

    ஏலத்தை கார்த்திக் சர்மா, நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தார். தனக்கான ஏலம் தொடங்கிய விதம் குறித்தும், அது முடிந்த பிறகு தனது மனநிலை குறித்தும் அவர் உருக்கமாகப் பேசியுள்ளார். அதில், நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். ஆனால் அந்தத் தருணத்தில் என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. ஏலம் தொடங்கியபோது, 'என்னை யாரும் எடுக்க மாட்டார்களோ?' என்று பயந்தேன். ஆனால் ஏலம் சூடுபிடித்துத் தொகை எகிறத் தொடங்கியதும், என் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டத் தொடங்கியது.

    ஏலம் முடிந்த பிறகும் நான் அழுதுகொண்டே இருந்தேன். என்னைச் சுற்றியிருந்தவர்கள் எல்லாம் மகிழ்ச்சியில் நடனமாடினார்கள். ஆனால் நானோ அழுதுகொண்டிருந்தேன். அந்த அளவுக்கு நான் மகிழ்ச்சியாக இருந்தேன். என் உணர்வுகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

    முதல்முறையாக நான் மஹி பாய் (தோனி) உடன் விளையாடப் போகிறேன். அவரிடம் இருந்து நிறையக் கற்றுக்கொள்ளலாம் என்பதால் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். முதன்முறையாக ஏலத்தில் எடுக்கப்பட்டதே இவ்வளவு பெரிய தொகைக்கு என்பது நம்பமுடியாத ஒன்று என கார்த்திக் கூறினார்.

    • சர்பராஸ் கானை ரூ. 75 லட்சம் என்ற அடிப்படை விலைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது.
    • கடந்த 2 சீசன்களாக அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 19-வது சீசனுக்கான வீரர்கள் மினி ஏலம் நேற்று அபுதாபியில் நடைபெற்றது. இதில், 77 வீரர்களை அணிகள் வாங்கின. அதில் சர்பராஸ் கானை ரூ. 75 லட்சம் என்ற அடிப்படை விலைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது.

    இந்நிலையில், மினி ஏலத்தில் தன்னை வாங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சர்பராஸ் கான் சமூக வலைதள பக்கத்தில் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில் எனக்கு புதிய வாழ்க்கை கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நன்றி' என தெரிவித்துள்ளார்.

    மேலும் அவரது ஸ்டோரியில் நடிகர் நானி நடித்த ஜெர்சி படத்தில் உள்ள வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் அணிக்குத் தேர்வான மகிழ்ச்சியை வெளிப்படுத்த, தனது குடும்பத்தினருக்குத் தெரியாமல் ரயில் நிலையத்திற்குச் சென்று, வரும் ரயிலின் சத்தத்திற்கு இணையாக தனது சந்தோஷத்தை கத்தி நானி வெளிப்படுத்துவார்.

    ஐபிஎல் தொடரில் 2015 முதல் 2023 வரை பல்வேறு அணிகளுக்காக சர்ப்ராஸ் கான் விளையாடியுள்ளார். கடந்த 2 சீசன்களாக அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ. 5.20 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
    • அகீல் ஹொசைன் சிஎஸ்கேவால் ரூ. 2 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

    2026 உலகக்கோப்பைக்கான ஐபிஎல் மினி ஏலம் இன்று மதியம் அபுதாபியில் நடைபெற்றது. ஏலத்தில் 10 அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை போட்டி போட்டு ஏலம் எடுத்தன.

    இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான பிரபல சுழற்பந்துவீச்சாளர் ராகுல் சஹார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ. 5.20 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

    அதேபோல் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஆல்ரவுண்டர் அகீல் ஹொசைன் சிஎஸ்கேவால் ரூ. 2 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

    மேலும் சர்ஃபராஸ் கான் ரூ. 75 லட்சம், மேத்யூ ஷார்ட் ரூ. 1.50 கோடி மற்றும் மாட் ஹென்றி ரூ. 2 கோடிக்கும் சிஎஸ்கே அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

    • இவ்வளவு பெரிய, பணம் சம்பாதிக்கும் நிகழ்வை நமது நாட்டில் இருந்து வெளிநாட்டுக்கு மாற்றுவதை ஏன் தொடர்ந்து செய்கிறீர்கள்
    • இந்த செயலை வேறு யாராவது செய்திருந்தால், அவர்கள் உடனடியாக துரோகி என்று முத்திரை குத்தப்பட்டிருப்பார்கள்

    உலகிலேயே மிகவும் பிரபலமான மற்றும் பணக்கார கிரிக்கெட் லீக் என்றால் அது இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல்தான். அடுத்தாண்டு இதன் 19வது சீசன் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் இன்று அபுதாபியில் தொடங்கியது. 

    இந்த நிலையில், காங்கிரஸ் தலைவரும், கர்நாடக அமைச்சருமான பிரியங்க் கார்கே, ஐபிஎல் ஏலம் தொடர்ந்து ஏன் வெளிநாட்டில் நடத்தப்படுகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக பேசிய பிரியங்கா கார்க்,

    ''ஐபிஎல் ஏலம் இந்தியாவுக்கு பதிலாக அபுதாபியில் ஏன் நடத்தப்படுகிறது? என்ன கட்டாயம்?  இடங்கள் பற்றாக்குறையா? அல்லது இது வேண்டுமென்றே எடுக்கப்பட்ட முடிவா? ஐபிஎல் தேசிய பெருமையின் அடையாளமாக இருந்தால், இவ்வளவு பெரிய, பணம் சம்பாதிக்கும் நிகழ்வை நமது நாட்டில் இருந்து வெளிநாட்டுக்கு மாற்றுவதை ஏன் தொடர்ந்து செய்கிறீர்கள்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

    மேலும் இந்த செயலை வேறு யாராவது செய்திருந்தால், அவர்கள் உடனடியாக துரோகி என்று முத்திரை குத்தப்பட்டிருப்பார்கள். ஆனால் பிசிசிஐ என்ன செய்தாலும் அது வளர்ந்த இந்தியாவுக்காகத்தான்'' என்று குறிப்பிட்டுள்ளார்.


    • கொல்கத்தா அணி ரூ.64 கோடி பர்ஸ் பணம் வைத்துள்ளது
    • சென்னை அணி ரூ.43 கோடி பர்ஸ் பணம் வைத்துள்ளது

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் அபுதாபியில் தொடங்கியது. 10 அணிகளும் மொத்தமாக 173 வீரர்களை தக்க வைத்துள்ளனர்.

    இந்த ஐ.பி.எல். ஏலத்தில் 350 வீரர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர். இவர்களிலிருந்துதான் அணிகள் தங்களுக்குத் தேவையான வீரர்களைத் தேர்வு செய்ய உள்ளன.

    ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக பணம் வைத்துள்ள கொல்கத்தா அணி ரூ.64 கோடியில் 13 வீரர்களை எடுக்க வேண்டிய நிலையில், குறைந்த பணம் வைத்துள்ள மும்மை ரூ.2.75 கோடியில் 5 வீரர்களை எடுக்க வேண்டும்

    சென்னை அணி ரூ.43 கோடியில் 9 வீரர்களையும் ஐதராபாத் அணி ரூ.25 கோடியில் 10 வீரர்களையும் லக்னோ அணி ரூ.22 கோடியில் 6 வீரர்களையும் டெல்லி அணி ரூ.21 கோடியில் 8 வீரர்களையும் பெங்களூரு அணி ரூ.16 கோடியில் 8 வீரர்களையும் ராஜஸ்தான் அணி ரூ.16 கோடியில் 9 வீரர்களையும் குஜராத் அணி ரூ.12 கோடியில் 5 வீரர்களையும் பஞ்சாப் அணி ரூ.11 கோடியில் 4 வீரர்களையும் எடுக்கவேண்டும்.

    • அதிக பணம் வைத்துள்ள கொல்கத்தா அணி ரூ.64 கோடியில் 13 வீரர்களை எடுக்க வேண்டும்
    • குறைந்த பணம் வைத்துள்ள மும்மை ரூ.2.75 கோடியில் 5 வீரர்களை எடுக்க வேண்டும்

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் இன்று (16-ந் தேதி) அபுதாபியில் நடக்கிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த நவம்பர் 15-ந் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பித்தன. மொத்தம் 173 வீரர்கள் தக்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த ஐ.பி.எல். ஏலத்தில் பங்கேற்க ஆரம்பத்தில் 1,390 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். ஆனால், 10 ஐ.பி.எல் அணி நிர்வாகங்களுடன் கலந்தாலோசித்த பிறகு, பி.சி.சி.ஐ. இந்தப் பட்டியலை வெகுவாகக் குறைத்துள்ளது. அதன்படி 1040 வீரர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு இறுதியாக 350 வீரர்கள் மட்டுமே ஏலப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இவர்களிலிருந்துதான் அணிகள் தங்களுக்குத் தேவையான வீரர்களைத் தேர்வு செய்ய உள்ளன.

    ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக பணம் வைத்துள்ள கொல்கத்தா அணி ரூ.64 கோடியில் 13 வீரர்களை எடுக்க வேண்டிய நிலையில், குறைந்த பணம் வைத்துள்ள மும்மை ரூ.2.75 கோடியில் 5 வீரர்களை எடுக்க வேண்டும்

    சென்னை அணி ரூ.43 கோடியில் 9 வீரர்களையும் ஐதராபாத் அணி ரூ.25 கோடியில் 10 வீரர்களையும் லக்னோ அணி ரூ.22 கோடியில் 6 வீரர்களையும் டெல்லி அணி ரூ.21 கோடியில் 8 வீரர்களையும் பெங்களூரு அணி ரூ.16 கோடியில் 8 வீரர்களையும் ராஜஸ்தான் அணி ரூ.16 கோடியில் 9 வீரர்களையும் குஜராத் அணி ரூ.12 கோடியில் 5 வீரர்களையும் பஞ்சாப் அணி ரூ.11 கோடியில் 4 வீரர்களையும் எடுக்கவேண்டும்.

    இந்த மினி ஏலத்தில் கேமரூன் கிரீன், லியாம் லிவிங்ஸ்டன் போன்ற வெளிநாட்டு வீரர்கள் அதிக விலைக்கு ஏலம் போவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • ஐ.பி.எல். ஏலத்தில் பங்கேற்க ஆரம்பத்தில் 1,390 வீரர்கள் பதிவு செய்திருந்தனர்.
    • இறுதியாக 350 வீரர்கள் மட்டுமே ஏலப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

    மும்பை:

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் நாளை (16-ந் தேதி) அபுதாபியில் நடக்கிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த நவம்பர் 15-ந் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பித்தன. மொத்தம் 173 வீரர்கள் தக்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த ஐ.பி.எல். ஏலத்தில் பங்கேற்க ஆரம்பத்தில் 1,390 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். ஆனால், 10 ஐ.பி.எல் அணி நிர்வாகங்களுடன் கலந்தாலோசித்த பிறகு, பி.சி.சி.ஐ. இந்தப் பட்டியலை வெகுவாகக் குறைத்துள்ளது. அதன்படி 1040 வீரர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு இறுதியாக 350 வீரர்கள் மட்டுமே ஏலப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இவர்களிலிருந்துதான் அணிகள் தங்களுக்குத் தேவையான வீரர்களைத் தேர்வு செய்ய உள்ளன.

    இந்நிலையில் நாளை ஏலம் நடைபெற உள்ள சூழலில் ஏலப்பட்டியலில் இந்திய வீரர் அபிமன்யூ ஈஸ்வரன் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏதோ ஒரு ஐ.பி.எல். அணி நிர்வாகம் கேட்டுக்கொண்டதால் அவரது பெயர் ஏலப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது அடிப்படை விலை ரூ.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ரஞ்சியில் பெங்கால் அணியின் கேப்டனாக செயல்படும் அவர், இதுவரை ஐபிஎல் போட்டிகளில் விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர்.
    • இதனால் பெங்களூரு மைதானத்தில் போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டது.

    ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரில் இந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து கடந்த ஜூன் 4-ந்தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடந்தது. அப்போது மைதானத்துக்கு வெளியே திரண்டிருந்த ரசிகர்கள் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர்.

    இதையடுத்து பெங்களூரு மைதானத்தில் போட்டிகள் நடத்த தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையே கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் வெங்கடேஷ் பிரசாத் மற்றும் பிற அலுவலர்கள் துணை முதல்வர் டி.கே. சிவகுமாரை சந்தித்து பேசினர். அதன்பிறகு டி.கே.சிவகுமார் கூறும்போது, , சின்னசாமி ஸ்டேடியத்தில் போட்டிகளை நிறுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சர்வதேச மற்றும் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த கர்நாடக அமைச்சரவை நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    கூட்ட நெரிசல் சம்பவத்தை விசாரித்த நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா ஆணையத்தின் பரிந்துரைகளை கர்நாடக கிரிக்கெட் சங்கம் செயல்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மைதானத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பு பெரும் கூட்டங்களுக்கு பொருத்தமற்றது, பாதுகாப்பற்றது என்று ஆணையம் தெரிவித்தது. இதில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐ.பி.எல். மினி ஏலம் அபுதாபியில் வருகிற 16-ந் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு நடக்கிறது.
    • ஏலப்பட்டியலில் மொத்தம் 350 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அடுத்த ஆண்டு (2026) மார்ச் முதல் மே மாதம் வரை நடக்கிறது. இதையொட்டி மொத்தம் 177 வீரர்கள் அணிகளில் தக்கவைக்கப்பட்டு, 71 பேர் விடுவிக்கப்பட்டனர். தற்போது 10 அணிகளுக்கும் சேர்த்து 31 வெளிநாட்டவர் உள்பட மொத்தம் 77 வீரர்கள் தேவைப்படுகிறார்கள். இதற்கான ஐ.பி.எல். மினி ஏலம் அபுதாபியில் வருகிற 16-ந் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு நடக்கிறது.

    ஏலத்துக்கு முதலில் 1,355 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்திருந்தனர். பிறகு அணி நிர்வாகங்களின் வேண்டுகோளுக்கு இணங்க தென் ஆப்பிரிக்காவின் குயின்டான் டி காக், ஜார்ஜ் லின்டே, இலங்கையின் துனித் வெல்லாலகே உள்பட 35 வீரர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டனர். 1,390 பேர் அடங்கிய வீரர்களின் பட்டியல் 10 அணிகளுக்கும் அனுப்பப்பட்டு தங்களுக்கு விருப்பமான வீரர்கள் குறித்து கடந்த 5-ந் தேதிக்குள் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது.

    10 அணிகளிடம் இருந்து கிடைத்த பட்டியலை ஆய்வு செய்த ஐ.பி.எல். நிர்வாகம் இறுதி ஏலப்பட்டியலை நேற்று வெளியிட்டது. அதன்படி இறுதி ஏலப்பட்டியலில் மொத்தம் 350 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் 240 பேர் இந்தியர்கள், 110 பேர் வெளிநாட்டினர். இவர்களில் 224 இந்தியர் உள்பட 238 பேர் சர்வதேச போட்டியில் ஆடாதவர்கள். 112 வீரர்கள் சர்வதேச அனுபவம் பெற்றவர்கள்.

    இந்நிலையில் ஐபிஎல் மினி ஏலத்தில் பஞ்சாப் அணிக்காக, அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் பங்கேற்கிறார். ஆஷஸ் தொடர் வர்ணனையில் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. துபாயில் வரும் டிச. 16-ம் தேதி நடைபெறும் ஏலத்தில் ஒரு அணி சார்பில் அதிகபட்சம் 8 பேர் பங்கேற்கலாம்.

    • கர்நாடக கிரிக்கெட் சங்கமே காரணம் எனக்கூறி கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் 3 வழக்கு.
    • சின்னசாமி ஸ்டேடியத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகி இருந்தார்கள்.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சாம்பியன் கோப்பையை வென்ற ஆர்.சி.பி. அணிக்கு கடந்த 4-ந் தேதி பெங்களூரு விதானசவுதா முன்பு பாராட்டு விழாவும், சின்னசாமி ஸ்டேடியத்தில் வெற்றிக் கொண்டாட்டமும் நடைபெற்றது.

    இதில், கலந்துகொள்ள ஆர்.சி.பி. ரசிகர்கள் லட்சக்கணக்கானோர் குவிந்தனர். இதனால் சின்னசாமி ஸ்டேடியத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகி இருந்தார்கள். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவத்திற்கு ஆர்.சி.பி. அணி நிர்வாகம், கர்நாடக கிரிக்கெட் சங்கமே காரணம் எனக்கூறி கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் 3 வழக்குகளும் பதிவாகின.

    இந்த விவகாரத்தில் தங்கள் மீது எந்த தவறும் இல்லை என்று முதல்வர் சித்தராமையா கூறி வருகிறார். ஆனால் அரசின் அலட்சியமே 11 பேர் சாவுக்கு காரணம் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி வருகிறார்கள்.

    பெங்களூரு சின்னசாமி மைதானத்தை நகரின் மையப்பகுதியிலிருந்து அகற்ற பரிசீலிக்கப்பட்டு வருவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

    இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளை சின்னசாமி மைதானத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற அனுமதிக்க மாட்டோம் என கர்நாடக துணை முதலமைச்சர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர்," ஐபிஎல் போட்டிகளை சின்னசாமி மைதானத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற அனுமதிக்க மாட்டோம். சின்னசாமி மைதானத்தின் பெயரைப் பாதுகாப்போம், மாற்றாக ஒரு புதிய கிரிக்கெட் மைதானத்தையும் கட்டுவோம்" என்றார்.

    • இந்த ஆண்டு கூகுள் தேடலில் பஞ்சாப் கிங்ஸ் அணி உலகளவில் அதிக கவனத்தை ஈர்த்தது.
    • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அடுத்த இடத்தில் உள்ளது.

    புதுடெல்லி:

    உலகம் முழுவதும் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு அணிகளின் பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டது.

    இந்த ஆண்டு கூகுள் தேடலில் பஞ்சாப் கிங்ஸ் அணி உலகளவில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இதேபோல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அடுத்த இடத்தில் உள்ளது.

    ஐ.பி.எல். போட்டியில் இதுவரை கோப்பை வெல்லாத அணிகளாக உள்ள இந்த இரண்டு அணிகளை கூகுளில் அதிகம் தேடியுள்ளனர்.

    இந்த இரு அணிகளும் கோப்பைக்காக கடுமையாகப் போட்டியிட்டதால் அவற்றின் மீது அதிக ஆர்வம் எழுந்திருக்கலாம்.

    விராட் கோலி, எம்.எஸ்.தோனி போன்ற ஜாம்பவான்கள் இருந்தபோதிலும் அவர்கள் இடம்பெற்றுள்ள அணி கூகுள் தேடலில் முதலிடத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் எனது ஓய்வை அறிவிக்கிறேன்.
    • எனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு உதவிய அனைவருக்கும் நன்றி.

    சென்னை:

    இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் மோகித் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மோகித் சர்மா, இந்திய அணிக்காக 26 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 31 விக்கெட்டுகளையும், 8 டி20 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    ஐபிஎல் தொடரில் 120 போட்டிகளில் விளையாடி 134 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காகவும் மோகித் சர்மா விளையாடியுள்ளார்.

    ஓய்வு குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள மோகித் சர்மா,

    இன்று, நிறைந்த இதயத்துடன், அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் எனது ஓய்வை அறிவிக்கிறேன். அரியானாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவது முதல் இந்திய ஜெர்சியை அணிந்தது மற்றும் ஐபிஎல்-ல் விளையாடியது வரை, இந்த பயணம் எனக்குக் கிடைத்த ஒரு ஆசீர்வாதம். எனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு உதவிய அனைவருக்கும் நன்றி. என தெரிவித்துள்ளார்.

    ×