என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PBKS"

    • எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 20 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை வெளியேற்றியது.
    • இறுதிப்போட்டியில் ஆர்.சி.பி. அணியுடன் மோதப்போகும் அணி எது என்பது இன்று தெரியும்.

    ஐ,பி.எல். போட்டியில் பிளே ஆப் சுற்று கடந்த 29-ம் தேதி தொடங்கியது. குவாலிபையர்1 ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    நேற்று முன்தினம் நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 20 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சை வெளியேற்றியது.

    இந்நிலையில், இறுதிப்போட்டியில் ஆர்.சி.பி. அணியுடன் மோதப்போகும் அணி எது என்பது இன்று தெரியும்.

    அகமதாபாத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் குவாலிபையர் 2 ஆட்டத்தில் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ்-ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெறும் அணி, 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். பெங்களூரு அணியுடன் இறுதிப்போட்டிக்கு மோதப் போவது பஞ்சாப்பா, மும்பையா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், அகமதாபாத், நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி, பந்து வீச்சு தேர்வு செய்தது.

    இதனால், முதலாவதாக மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.

    இரு அணிகளும் வெற்றி பெற போராடும் என்பதால் குவாலிபையர் 2 ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையப் போவது நிச்சயம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிகபட்சமாக 26 ரன்கள் சேர்த்தார்.
    • ஹேசில்வுட், சுயாஷ் ஷர்மா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய குவாலிபையர்-1 சுற்றில் ஆர்சிபி- பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். தொடக்கம் முதலே பஞ்சாப் அணி தடுமாறியது. இதனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

    ஆர்யா 7, பிரப்சிம்ரன் சிங் 18, இங்லிஸ் 4, ஷ்ரேயாஸ் 2, நேகல் வதேரா 8, ஷசாங் சிங் 3 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

    இதனால் பஞ்சாப் அணி 60 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது. இதனால் பஞ்சாப் அணி இம்பேக்ட பிளேயராக சர்ப்ராஸ்கான் சகோதரரான முஷீர் கானை களமிறக்கியது. ஆனாலும் அவரும் டக் அவுட்டில் வெளியேறினார். இதனால் பஞ்சாப் அணி 8.5 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடியாக விளையாட முயற்சி செய்தார். என்றாலும் 26 ரன்னில் வெளியேறினார்.

    அதன்பின் பஞ்சாப் அணியால் சரிவில் இருந்து மீளமுடியவில்லை. இதனால் 14.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 101 ரன்னில் சுருண்டது. ஆர்சிபி அணி தரப்பில் ஹேசில்வுட், சுயாஷ் ஷர்மா ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். யாஷ் தயாள் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    • வெற்றிபெறும் அணி முதல் 2 இடங்களுக்குள் முன்னேறும்.
    • பஞ்சாப் 17 புள்ளிகளிலும், மும்பை இந்தியன்ஸ் 16 புள்ளிகளிலும் உள்ளன.

    ஐபிஎல் 2025 சீசனில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் இரு அணிகளுக்கும் கடைசி லீக் போட்டியாகும். இதில் வெற்றி பெறும் அணி புள்ளிகள் பட்டியலில் முதல 2 இடங்களுக்குள் செல்லும்.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    மும்பை இந்தியன்ஸ் அணி:-

    ரோகித் சர்மா, ரியான் ரிக்கெல்டன், வில் ஜேக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, நமன் திர், சான்ட்னெர், தீபக் சாஹர், பும்ரா, போல்ட்.

    பஞ்சாப் கிங்ஸ் அணி:-

    பிரியான்ஷ் ஆர்யா, ஷ்ரேயாஸ் அய்யர், ஜோஷ் இங்கிலிஷ், வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஹர்ப்ரீத் பிரார், மார்கோ யான்சன், கைல் ஜாமின்சன், அர்ஷ்தீப் சிங், விஜயகுமார் வைஷாக்.

    • ஷ்ரேயாஸ் அய்யர் அரைசதம் அடித்தார்.
    • மார்கஸ் ஸ்டோய்னிஸ் 16 பந்தில் 44 ரன்கள் விளாசினார்.

    ஐபிஎல் 2025 சீசனின் 65ஆவது போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பிரியான்ஷ் ஆர்யா 9 பந்தில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிரப்சிம்ரன் சிங் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த ஜோஷ் இங்கிலிஸ் 12 பந்தில் 32 ரன்கள் விளாசினார். கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 34 பந்தில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மார்கஸ் ஸ்டோய்னிஸ் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி 16 பந்தில் 44 ரன்கள் அடிக்க பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்க 206 ரன்கள் குவித்துள்ளது.

    • மழை பெய்த போதிலும் ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
    • போட்டி 8.30 மணிக்கு தொடங்குகிறது. ஓவர்கள் குறைக்கப்படவில்லை.

    ஐபிஎல் சீசனின் 58ஆவது ஆட்டம் இன்று தரம்சாலாவில் நடக்கிறது. இதில் பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் இரவு 7 மணிக்கு சுண்டப்படுவதாக இருந்தது. 7 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டு, 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்கும்.

    ஆனால் மழை பெய்ததால் டாஸ் சுண்டப்படவில்லை. அதனைத்தொடர்ந்து போட்டி 7.30 மணிக்கு தொடங்கப்படவில்லை. பின்னர் மழை நின்றதும் போட்டியை நடத்துவதற்கான பணியை மைதான ஊழியர்கள் மேற்கொண்டனர்.

    மைதானம் தயாரானதால் 8.15 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டிங் தேர்வு செய்தார்.

    • புள்ளிகள் பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் 3ஆவது இடத்தில் உள்ளது.
    • டெல்லி கேப்பிட்டல்ஸ் 5ஆவது இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் சீசனின் 58ஆவது ஆட்டம் இன்று தரம்சாலாவில் நடக்கிறது. இதில் பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் இரவு 7 மணிக்கு சுண்டப்படுவதாக இருந்தது. 7 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டு, 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்கும்.

    ஆனால் மழை பெய்து வருவதால் டாஸ் சுண்டப்படவில்லை. அதனைத் தொடர்ந்து போட்டி 7.30 மணிக்கு தொடங்கப்படவில்லை. தொடர்ந்து மழை பெய்து வருவதால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    • பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக தரம்சாலா உள்ளிட்ட விமான நிலையங்கள் மூடல்.
    • ஞாயிற்றுக்கிழமை தரம்சாலாவில் நடைபெற இருந்த போட்டி வேறு இடத்திற்கு மாற்ற முடிவு.

    ஐபிஎல் 2025 சீசன் லீக் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இதில் பஞ்சாப் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் வருகிற 11ஆம் தேதி தரம்சாலா மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த இருந்தன.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு 9 இடங்களில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது. இதற்கு பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக தரம்சாலா உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

    இதனால் வீரர்கள் தரம்சாலாவிற்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற பிசிசிஐ யோசனை செய்து வருகிறது. இந்த நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திற்கு மாற்ற பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பிசிசிஐ-யிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்ததும், போட்டியை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் என குஜராத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

    • பிரியான்ஷ் ஆர்யா 36 பந்தில் 69 ரன்கள் விளாசினார்.
    • பிரப்சிம்ரன் சிங் 49 பந்தில் 83 ரன்கள் விளாசினார்.

    ஐபிஎல் தொடரின் 44ஆவது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி அந்த அணியின் பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரில் இருந்து இருவரும் வாணவேடிக்கை நிகழ்த்தினர். பந்தை பவுண்டரிக்கும், சிக்சருக்கும் பறக்கவிட்டனர்.

    முதல் ஓவரில் 10 ரன்களும், 3ஆவது ஓவரில் 12 ரன்களும், 4ஆவது ஓவரில் 18 ரன்களும், 5ஆவது ஓவரில் 11 ரன்களும், விளாசினர். இதனால் பவர்பிளேயில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்று 56 ரன்கள் சேர்த்தது.

    10ஆவது ஓவரின் 4ஆவது பந்தை சிக்சருக்கும், 5ஆவது பந்தை பவுண்டரிக்கும் விரட்டி ஆர்யா 27 பந்தில் அரைசதம் அடித்தார். சுனில் நரைன் வீசிய அடுத்த ஓவரில் பஞ்சாப் 3 சிக்சர் விளாசியது. 12 ஆவது ஓவரை ரசல் வீசினார். இந்த ஓவரில் ஆர்யா ஆட்டமிழந்தார். அவர் 35 பந்தில் 8 பவுண்டரி, 4 சிக்சருடன் 69 ரன்கள் விளாசினார். அப்போது பஞ்சாப் 11.5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் குவித்திருந்தது.

    அடுத்த ஓவரில் பவுண்டரி அடித்து 38 பந்தில் பிரப்சிம்ரன் சிங் அரைசதம் அடித்தார். வருண் சக்ரவர்த்தி வீசிய 14ஆவது ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாசினார். சிறப்பாக விளையாடிய அவர் 49 பந்தில் தலா 6 பவுண்டரி, சிக்சருடன் 83 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அப்போது பஞ்சாப் 14.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் குவித்திருந்தது.

    4ஆவது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யருடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். மேக்ஸ்வெல் 7 ரன்கள் எடுத்த நிலையில் வருண் சக்ரவர்த்தி பந்தில் ஆட்டமிழந்தார்.

    4ஆவது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யருடன் மார்கோ யான்சன் ஜோடி சேர்ந்தார். பஞ்சாப் அணிக்கு 17 ஆவது ஓவரில் 7 ரன் மட்டுமே கிடைத்தது. 174 ரன்கள் எடுத்திருந்தது. 18ஆவது ஓவரை ரசல் வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ் உடன் 10 ரன்கள் கிடைத்தன. 184 ரன்கள் எடுத்திருந்தது.

    19ஆவது ஓவரை வைபவ் வீசினார். இந்த ஓவரில் 9 ரன்கள் கிடைக்க பஞ்சாப் 193 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஓவரை ரசல் வீசினார். இந்த ஓவரில் 8 ரன்கள் அடிக்க பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்துள்ளது. ஷ்ரேயாஸ் அய்யர் 16 பந்தில் 25 ரன்களுடனும், இங்கிலீஷ் 6 பந்தில் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    • பஞ்சாப் கிங்ஸ் புள்ளிகள் பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது.
    • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7ஆவது இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் தொடரின் 44ஆவது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    பஞ்சாப் கிங்ஸ் அணி:-

    பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஷ்ரேயாஸ் அய்யர், ஜோஷ் இங்கிலிஷ், நெஹல் வதேரா, ஷஷாங்க் சிங், மேக்ஸ்வெல், ஓமர்சாய், மார்கோ யான்சன், ஆர்ஷ்தீப் சிங், சாஹல்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:-

    குர்பாஸ், சுனில் நரைன், ரகானே, வெங்கடேஷ் அய்யர், ரிங்கு சிங், ரசல், ரோவன் பொவேல், சேத்தன் சகாரியா, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, வைபவ் ஆரோரா

    • புள்ளிகள் பட்டியலில் ஆர்சிபி 3ஆவது இடத்தில் உள்ளது.
    • பஞ்சாப் கிங்ஸ் 4ஆவது இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் 2025 சீசனின் 34ஆவது போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சரியாக 7 மணிக்கு சுண்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மழை பெய்ததால் டாஸ் சுண்டுவதில் காலதாமதம் ஏற்பட்டது.

    சுமார் 8.40 மணியளவில் நின்றது. பின்னர் போட்டி தொடங்குவதற்கான பணிகளை மைதான ஊழியர்கள் மேற்கொண்டனர். பின்னர் மைதானத்தை பார்வையிட்ட நடுவர்கள், 9.30 மணிக்கு டாஸ் சுண்டப்பபடும், 9.45 மணிக்கு போட்டி தொடங்கும். 14 ஓவர் போட்டியாக நடத்தப்படும் என அறிவித்தனர்.

    அதன்படி 9.30 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டது. பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்துவ வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:-

    பிலிப் சால்ட், விராட் கோலி, ரஜத் படிதார், லிவிங்ஸ்டன், ஜித்தேஷ் சர்மா, டிம் டேவிட், குருணால் பாண்ட்யா, புவனேஸ்வர் குமார், ஹேசில்வுட், சுயாஷ் சர்மா, யாஷ் தயால்.

    பஞ்சாப் கிங்ஸ்:-

    பிரியான்ஷ் ஆர்யா, நெகல் வதேரா, ஷ்ரேயாஸ் அய்யர், ஷஷாங்க் சிங், ஜோஷ் இங்லிஸ், ஸ்டோய்னிஸ், மார்கோ யான்சன், ஹர்ப்ரீத் பிரார், பார்ட்லெட், அர்ஷ்தீப் சிங், சாஹல்.

    • புள்ளிகள் பட்டியலில் ஆர்சிபி 3ஆவது இடத்தில் உள்ளது.
    • பஞ்சாப் கிங்ஸ் 4ஆவது இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் 2025 சீசனின் 34ஆவது போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சரியாக 7 மணிக்கு சுண்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மழை பெய்து வருவதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    • ஷ்ரேயாஸ் அய்யர் 36 பந்தில் 82 ரன்கள் விளாசினார்.
    • பவர் பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் குவித்தது.

    ஐபிஎல் 2025 தொடரின் 27ஆவது போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.

    அதன்படி அந்த அணியின் பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட வேண்டும் என்ற எண்ணத்தில் வந்தனர். அவர்களின் எண்ணம் போன்று பந்து பேட்டில் நன்றாக பட்டது.

    ஷமி வீசிய முதல் ஓவரின் கடைசி 3 பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார் பிரப்சிம்ரன் சிங். இதனால் முதல் ஓவரில் பஞ்சாப் அணிக்க 14 ரன்கள் கிடைத்தது. அடுத்த ஓவரை கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரில் பிரியான்ஷ் ஆர்யா ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். பிரப்சிம்ரன் சிங் ஒரு பவுண்டரி அடிகக் 16 ரன்கள் கிடைத்தது. 3ஆவது ஓவரை ஷமி வீசினார். இந்த ஓவரில் ஆர்யா இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்தார். பிரப்சிம்ரன் ஒரு சிக்ஸ் அடித்தார். இதனால் இந்த ஓவரில் 23 ரன்கள் கிடைத்தது. அத்துடன் பஞ்சாப் கிங்ஸ் 53 ரன்கள் சேர்த்தது.

    4ஆவது ஓவர ஹர்ஷல் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்த ஆர்யா கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 13 ரன்கள் கிடைத்தது. பஞ்சாப் கிங்ஸ் 4 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 66 ரன்கள் எடுத்தது.

    5ஆவது ஓவரை கம்மின்ஸ் வீசினார். பிரப்சிம்ரன் சிங் உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 8 ரன்கள் கிடைத்தது. 6ஆவது ஓவரை ஹர்ஷல் படேல் வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 15 ரன்கள் கிடைத்தன. இதனால் பவர்பிளேயில் பஞ்சாப் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் குவித்தது.

    7ஆவது ஓவரை எஷான் மலிங்கா வீசினார். இந்த ஓவரின் 5ஆவது பந்தில் பிரப்சிம்ரன் சிங் ஆட்டமிழந்தார். இவர் 23 பந்தில் 42 ரன்கள் விளாசினார்.

    அதன்பின் ஷ்ரேயாஸ் அய்யர் உடன் வதேரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் அதிரடியாக விளையாடியது. 8.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. 12.2 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது. ஷ்ரேயாஸ் அய்யர் 22 பந்தில் அரைசதம் அடித்தார்.

    13.3 ஓவரில் 164 ரன்கள் எடுத்திருக்கும்போது வதேரா ஆட்டமிழந்தார். அவர் 22 பந்தில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷஷாங் சிங் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். 17ஆவது ஓவரை எஷான் மலிங்கா வீசினார். இந்த ஓவரில் ஷ்ரேயாஸ் அய்யர் 4 பவுண்டரிகள் விரட்டினார். அத்துடன் 17 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 205 ரன்கள் குவித்தது.

    18ஆவது ஓவரை ஹர்ஷல் படேல் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் மேக்ஸ்வெல் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 3ஆவது பந்தில் ஷ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழந்தார். அவர் 36 பந்தில் தலா 6 பவுண்டரி, சிக்சருடன் 82 ரன்கள் குவித்தார். இந்த ஓவரில் பஞ்சாப் அணிக்கு 5 ரன்கள்தான் கிடைத்தது. 18 ஓவர் முடிவில் பஞ்சாப் 210 ரன்கள் எடுத்திருந்தது.

    19ஆவது ஓவரை கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரில் 8 ரன்கள் மட்டுமே கிடைத்தது. கடைசி ஓவரை ஷமி வீசினார். இந்த ஓவரின் கடைசி 4 பந்துகளையும் சிக்சருக்கு விரட்டினார் மார்கஸ் ஸ்டோய்னிஸ். இதனால் பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்துள்ளது. கடைசி ஓவரில் 27 ரன்கள் கிடைத்தன.

    ஸ்டோய்னிஸ் 11 பந்தில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ×