ஐபிஎல் குவாலிபையர்-1: ஆர்சிபி பவுலர்கள் அபாரம்- பஞ்சாப் கிங்ஸ் 101 ரன்னில் சுருண்டது

மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிகபட்சமாக 26 ரன்கள் சேர்த்தார்.ஹேசில்வுட், சுயாஷ் ஷர்மா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
ஐபிஎல் குவாலிபையர்-1: ஆர்சிபி பவுலர்கள் அபாரம்- பஞ்சாப் கிங்ஸ் 101 ரன்னில் சுருண்டது
Published on

ஐபிஎல் தொடரின் இன்றைய குவாலிபையர்-1 சுற்றில் ஆர்சிபி- பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். தொடக்கம் முதலே பஞ்சாப் அணி தடுமாறியது. இதனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

ஆர்யா 7, பிரப்சிம்ரன் சிங் 18, இங்லிஸ் 4, ஷ்ரேயாஸ் 2, நேகல் வதேரா 8, ஷசாங் சிங் 3 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

இதனால் பஞ்சாப் அணி 60 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது. இதனால் பஞ்சாப் அணி இம்பேக்ட பிளேயராக சர்ப்ராஸ்கான் சகோதரரான முஷீர் கானை களமிறக்கியது. ஆனாலும் அவரும் டக் அவுட்டில் வெளியேறினார். இதனால் பஞ்சாப் அணி 8.5 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடியாக விளையாட முயற்சி செய்தார். என்றாலும் 26 ரன்னில் வெளியேறினார்.

அதன்பின் பஞ்சாப் அணியால் சரிவில் இருந்து மீளமுடியவில்லை. இதனால் 14.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 101 ரன்னில் சுருண்டது. ஆர்சிபி அணி தரப்பில் ஹேசில்வுட், சுயாஷ் ஷர்மா ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். யாஷ் தயாள் 2 விக்கெட் வீழ்த்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com