IPL 2026 | முதல் 7 போட்டிகளில் பெர்குசன் இல்லை: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பின்னடைவு

நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லூக்கி பெர்குசன் ஐபிஎல் தொடரின் முதல் பாதி ஆட்டங்களில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெர்குசன்
பெர்குசன்
Published on

ஐ.பி.எ.ல் 2026 சீசன் கிரிக்கெட் திருவிழா வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. 10 அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் காயம் காரணமாக சில வீரர்கள் வெளியேறி வருகின்றனர். சிலர் சொந்த காரணங்கள் தொடர்பாக சில போட்டிகளில் விளையாடுவதை தவிர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லூக்கி பெர்குசன், தொடரின் முதல் பாதி போட்டிகளில் (முதல் 7 போட்டிகள்) விளையாடமாட்டார் எனத் தெரியவந்துள்ளது.

அவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது. தனது மனைவி மற்றும் குழந்தையுடன் நேரத்தை செலவிட வேண்டும் என்பதால் இந்த முடிவை பெர்குசன் எடுத்துள்ளார். பெர்குசனின் இந்த முடிவு, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தொடரின் தொடக்கத்தில் பின்னடைவை ஏற்படுத்தும்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்திருந்து ஸ்டார்க் சில போட்டிகளில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ஆஸ்திரேலிய வீரர் நாதன் எல்லிஸ் தொடர் முழுவதிலும் இருந்து காயம் காரணமாக வெளியேறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com