IPL 2026 | டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு பாதிப்பு: நட்சத்திர பந்துவீச்சாளர் விலகல்?

நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் முதல் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளன.
IPL 2026 | டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு பாதிப்பு: நட்சத்திர பந்துவீச்சாளர் விலகல்?
Published on

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்கத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக, நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் முதல் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளன.

2027 ஒருநாள் உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களின் பணிச்சுமையை தீவிரமாக கண்காணித்து வருகிறது. அடுத்த 12 மாதங்களில் ஆஸ்திரேலியா சுமார் 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டியிருப்பதால், ஸ்டார்க் போன்ற 'மல்டி-ஃபார்மேட்' வீரர்களுக்கு போதிய ஓய்வு வழங்க சிஏ (CA) முடிவு செய்துள்ளது.

கடந்த ஏலத்தில் டெல்லி அணியால் ரூ.11.75 தொகைக்கு தக்கவைக்கப்பட்ட ஸ்டார்க், அணியின் பவர்பிளே மற்றும் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்டாகக் கருதப்படுகிறார். அவர் இல்லாதது டெல்லிக்கு சவாலாக அமையும்.

ஸ்டார்க் இல்லாத நிலையில், லுங்கி நெகிடி, டி. நடராஜன் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சை முன்னின்று நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டார்க் மட்டுமல்லாது, சன்ரைசர்ஸ் ஐதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் ஆர்சிபி வீரர் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோரும் தொடக்க ஆட்டங்களைத் தவறவிட வாய்ப்புள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com