search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    எங்கள் அணியின் கேப்டன் கம்மின்ஸ்: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அறிவிப்பு

    • 2023 சீசனில் தென்ஆப்பிரிக்காவின் எய்டன் மார்கிராம் கேப்டனாக செயல்பட்டார்.
    • கம்மின்ஸை சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாடும் அணிகளில் ஒன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத். கடந்த 2023 சீசனில் அந்த அணியின் கேப்டனாக தென்ஆப்பிரிக்காவின் எய்டன் மார்கிராம் செயல்பட்டார். இவரது தலைமையில் அந்த அணி சிறப்பாக செயல்படவில்லை.

    இந்த நிலையில் 2024 சீசனுக்கான அணியின் கேப்டன் பெயரை அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளரும், அந்த அணியின் கேப்டனுமான பேட் கம்மின்ஸ் கேப்டனாக செயல்படுவார் என சன்ரைசர்ஸ் ஐதராபாத் தெரிவித்துள்ளது.

    பேட் கம்மின்ஸை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20.5 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்தது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன 2-வது வீரர் இவராவார்.

    பேட் கம்மின்ஸ் இதற்கு முன்னதாக கொல்கத்தா நைட் ரைடரஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்குகாக விளையாடியுள்ளார்.

    இவரது தலைமையில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகியவற்றை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஐபிஎல் 2024 சீசன் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் தனது முதல் போட்டியில் மார்ச் 23-ந்தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. மார்ச் 17-ந்தேதி மும்பை இந்தியன்ஸ் அணியையும், மார்ச் 31-ந்தேதி குஜராத் டைட்டன்ஸ் அணியையும் எதிர்கொள்ள இருக்கிறது.

    Next Story
    ×