search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அபிஷேக் சர்மா"

    • Abhishek Sharma will be ready for India in six months Yuvraj Singh
    • ஸ்டிரைக் ரேட் இருக்கும்போது, இந்திய அணிக்கான இடத்திற்கு இடம் பிடிக்க வேண்டுமென்றால் மிகப்பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டியது அவசியம்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வரும் அபிஷேக் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 23 வயதான அபிஷேக் சர்மா யார் பந்து வீசினாலும் சிக்சர், பவுண்டரி விளாசுகிறார். டிராவிஸ் ஹெட் உடன் இணைந்து பவர்பிளேயில் எதிரணியை பயமுறுத்தி வருகிறார். இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 288 ரன்கள் விளாசியுள்ளார்.

    இவர் குறித்து இந்திய அணியின் முன்னாள் நட்டசத்திர ஆல்ரவுண்டர் யுராவஜ் சிங் கூறுகையில் இன்னும் ஆறு மாதங்களில் இந்திய அணிக்கு தயாராகிவிடுவார் எனத் தெரிவித்துள்ளார்.

    அபிஷேக் சர்மா குறித்து யுவராஜ் சிங் கூறியதாவது:-

    இந்திய அணியில் தேர்வு ஆவதற்கான நிலையில் உள்ளார். ஆனால், தற்போது அவர் உலகக்கோப்பைக்கு தயாராக இருப்பதாக நினைக்கவில்லை. உலகக்கோப்பையை பொருத்தவரையில் நாம் அனுபவமான வீரர்களை எடுக்க வேண்டும். உண்மையிலேயே சில வீரர்கள் இந்தியாவுக்காக விளையாடியுள்ளனர். உலகக் கோப்பைக்கப் பிறகு, அவர் இந்தியாவுக்காக விளையாட தயாராக வேண்டும். இதில்தான் அவர் கவனம் செலுத்த வேண்டும். வரும் ஆறு மாதங்கள் அபிஷேக் சர்மாவுக்கு முக்கியமானது.

    அவருடைய செயல்பாடு சிறப்பாக உள்ளது. அவருடைய ஸ்டிரைக் ரேட் அபாரம். ஆனால் மிகப்பெரிய ஸ்கோர் இன்னும் வரவில்லை. இதுபோன்ற ஸ்டிரைக் ரேட் இருக்கும்போது, இந்திய அணிக்கான இடத்திற்கு இடம் பிடிக்க வேண்டுமென்றால் மிகப்பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டியது அவசியம். சிறந்த ஸ்டிரைக் ரேட் இருந்தபோதிலும், நீங்கள் இந்தியாவுக்கு தகுதியானவராக சில பெரிய ஸ்கோர்கள் தேவை.

    பெரிய ஷாட்டுகள் அடிக்கும் திறன் அவரிடம் உள்ளது. இவர் பெரிய ஷாட் அடிப்பது சிறந்தது. ஆனால், ரொட்டேட் ஸ்டிரைக் செய்வதற்கு சிங்கிள் எடுப்பது குறித்து கற்றுக் கொள்ள வேண்டும். சிறப்பாக பந்து வீசும் பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு, மற்ற பந்து வீச்சாளர்களை டார்கெட் செய்வது குறித்து கற்றுக் கொள்ள வேண்டும். இந்த விசயத்தில் அவர் கவனம் செலுத்த வேண்டும்.

    டிராவிஸ் ஹெட்டிடம் இருந்து அவர் அதிக நம்பிக்கை பெற்றுக் கொண்டிருப்பார். தற்போது டிராவிஸ் உலகத்தரம் வாய்ந்த வீரர். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்துள்ளார். அவர் மிகப்பெரிய போட்டிக்கான வீரர். சிறந்த தொடக்கத்தை எப்படி மிகப்பெரிய ஸ்கோராக மாற்றுவது என்பதை கற்றுக் கொள்ள அபிஷேக் சர்மாவுக்கு மிகப்பெரிய வாய்ப்பு. இதைத்தான் அவர் டிராவிஸ் ஹெட்டிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

    • ஐபிஎல் தொடரின் 18-வது லீக் ஆட்டத்தில் சென்னை- ஐதராபாத் அணிகள் மோதின
    • தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இப்போட்டியை நேரில் கண்டு ரசித்தார்

    ஐபிஎல் தொடரின் 18-வது லீக் ஆட்டத்தில் சென்னை- ஐதராபாத் அணிகள் மோதின.

    தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி இப்போட்டியை நேரில் கண்டு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை உற்சாகப்படுத்தினார்.

    அதன்படி முதலில் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக துபே 45 ரன்கள் எடுத்தார்.

    இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 19.1 ஓவரில் 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடி 37 ரன்கள் அடித்த அபிஷேக் சர்மாவுக்கு முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆட்டநாயகன் விருது கொடுத்தார்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகம், அதிரடியாக ஆடிய வீரர்களுக்கு டிரெசிங் ரூமில் சிறப்பு பரிசுகளை வழங்கி வருகிறது. அதன்படி அபிஷேக் சர்மாவுக்கு அதிக கனமுள்ள சங்கிலி அணிவிக்கப்பட்டது.

    இதே போல் கடந்த முறை, ஹென்ரிச் கிளாசனுக்கு அதிக கனமுள்ள சங்கிலி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • அபிஷேக் சர்மா 22 பந்தில் 68 ரன்கள் விளாசினார்.
    • 3 பவுண்டரி, 7 சிக்ஸ் விளாசிய அவர், ஐதராபாத் அணிக்காக அதிவே அரைசதத்தை பதிவு செய்தார்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விளையாடிய இரண்டு போட்டிளிலும் 200 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது. கொல்கத்தாவுக்கு எதிரான இலக்கை துரத்தியபோது 209 ரன்கள் தேவை என்ற நிலையில் 204 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

    நேற்று மும்பை அணிக்கெதிராக 277 ரன்கள் குவித்து சாதனைப் படைத்தது. இரண்டு போட்டிகளிலும் 23 வயதேயான இடது கை பேட்ஸ்மேனான அபிஷேக் சர்மா அசத்தியுள்ளார். கொல்கத்தா அணிக்கெதிராக 19 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 32 ரன்கள் விளாசினார்.

    நேற்று 22 பந்தில் 3 பவுண்டரி, 7 சிக்சருடன் 68 ரன்கள் குவித்தார். மேலும் ஐதராபாத் அணிக்காக அதிவேக (18 பந்தில்) அரைசதத்தை பதிவு செய்தார்.

    இதனால் ஆட்ட நாயகன் விருதை வென்றார். இவர் டிராவிட் ஹெட் உடன் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் (22 பந்தில்) குவித்தது குறிப்பிடத்தக்கது.

    தனது அதிரடிக்கு அணி நிர்வாகம் வழங்கியுள்ள சுதந்திரம்தான் காரணம் எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    உண்மையில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக அதிவேக அரைசதம் என்று நான் உணரவில்லை. வழக்கம்போல் நான் அரைசதம் அடித்ததும் எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினேன். அவுட்டாகி வெளியே வந்த பின்னர்தான் அதிவேக அரைசதம் என உணர்ந்தேன். அதை நான் ரசித்தேன்.

    இந்த போட்டிக்கு முன்னதாக பேட்ஸ்மேன் அனைவருக்கும் மிகவும் எளிதான தகவல் பரிமாறப்பட்டதாக நான் நினைக்கிறேன். அந்த தகவல், ஒவ்வொருவரும் களத்திற்கு செல்ல வேண்டும். உங்களுடைய அற்புதத்தை (தங்களுக்குள் இருக்கும் திறமையான ஆட்டம்) வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் அது. உங்களுடைய கேப்டன் மற்றும் பயிற்சியாளரிடம் இருந்து நீங்கள் இதை பெறும்போது, அது மிகப்பெரிய நேர்மறையான தகவலாக இருக்கும். இது உண்மையிலேயே அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் ஆதரவாக இருக்கும்.

    எனக்கு மிகவும் பிடித்தவரான டிராவிட் ஹெட் உடன் இணைந்து பேட்டிங் செய்தேன். அவருடன் இணைந்து பேட்டிங் செய்ததை மிகவும் ரசித்தேன்.

    இவ்வாறு அபிஷேக் சர்மா தெரிவித்தார்.

    • திராவிஷ் ஹெட் 18 பந்தில் அரை சதம் விளாசினார்.
    • அபிஷேக் 16 பந்தில் அரை சதம் விளாசினார்.

    ஐபிஎல் தொடரின் 8-வது லீக் போட்டியில் ஐதராபாத் மற்றும் மும்பை அணிகள் இன்று மோதுகிறது. இந்த போட்டியில் ஐதராபாத்தில் உள்ள ராஜூவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால் - திராவிஷ் ஹேட் ஆகியோர் களமிறங்கினார். மயங்க் அகர்வால் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அபிஷேக் திராவிஷ் ஹேட் உடன் ஜோடி சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    இதனால் பவர்பிளேயில் சன்ரைசர்ஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய திராவிஷ் ஹெட் 18 பந்தில் அரை சதம் விளாசினார். அவர் 24 பந்தில் 62 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுபுறம் ருத்ர தாண்டவம் ஆடிய அபிஷேக் 16 பந்தில் அரை சதம் விளாசினார். அவர் 23 பந்தில் 63 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.

    இதனை தொடர்ந்து வந்த கிளாசனும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவர் 23 பந்தில் அரை சதம் விளாசினார்.

    இறுதியில் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் குவித்தது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அணியாக அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை சன்ரைசர்ஸ் அணி படைத்துள்ளது. இதற்கு முன்பு புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி 263 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை சன்ரைசர்ஸ் முறியடித்துள்ளது.

    • பவர்பிளேயில் சன்ரைசர்ஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் குவித்தது.
    • ஐபிஎல் தொடரில் அதிகவேக அரைசதம் அடித்த வீரர்களில் ஜெய்ஸ்வால் முதல் இடத்தில் உள்ளார்.

    ஐபிஎல் தொடரின் 8-வது லீக் போட்டியில் ஐதராபாத் மற்றும் மும்பை அணிகள் இன்று மோதுகிறது. இந்த போட்டியில் ஐதராபாத்தில் உள்ள ராஜூவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால் - திராவிஷ் ஹேட் ஆகியோர் களமிறங்கினார். மயங்க் அகர்வால் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அபிஷேக் திராவிஷ் ஹேட் உடன் ஜோடி சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    இதனால் பவர்பிளேயில் சன்ரைசர்ஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய திராவிஷ் ஹெட் 18 பந்தில் அரை சதம் விளாசினார். இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக வேக அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். அடுத்த சிறிது நேரத்திலேயே இவரது சாதனை இளம் வீரர் அபிஷேக் முறியடித்தார்.

    அபிஷேக் 16 பந்தில் அரை சதம் விளாசி அசத்தினார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிகவேக அரை சதம் விளாசிய 3-வது வீரரானார். முதல் இடத்தில் ஜெய்ஸ்வாலும் (13 பந்தில்) 2-வது இடத்தில் கேஎல் ராகுல் மற்றும் பேட் கம்மின்ஸ் (14) உள்ளனர். 

    • மாடல் அழகி தன்யா சிங் கடந்த திங்கட்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • தற்கொலை தொடர்பாக கடிதம் எழுதி வைக்காத நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்தவர் மாடல் அழகி தன்யா சிங். தன்யா சிங், சூரத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட அவர், அதற்கான காணரம் குறித்து கடிதம் ஏதும் எழுதி வைக்கவில்லை.

    அவரது தற்கொலைக்கான காரணம் தெரியாத நிலையில், போலீசார் தீவிரமாக துப்புதுலக்கி வருகின்றனர். இந்த நிலையில்தான் ஐபிஎல் கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மாவிடம், தன்யா கிங் தற்கொலை குறித்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

    அபிஷேக் சர்மா ஐபிஎல் கிரிக்கெட்டில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். இவரும் தன்யா சிங்கும் நணபர்களாக இருந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதன் அடிப்படையில் விசாரணை நடத்த இருப்பதாகவும், அதற்காக அவருக்கு சம்மன் அனுப்ப இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    மாடல் அழகி தன்யா சிங் அபிஷேக் சர்மாவுக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பியதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. விசாரணைக்கு பிறகுதான் இது தொடர்பாக தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். மேற்கொண்டு ஏதும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

    அதேவேளையில் அபிஷேக் சர்மா, தன்யா சிங்கின் வாட்ஸ்அப் நம்பரை பிளாக் செய்தி வைத்திருந்ததாகவும், அவருடைய மெசேஜ்-க்கு பதில் அளிக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    தன்யா சிங் கடந்த திங்கட்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது அறை நீண்டு நேரம் திறக்கப்படாத நிலையில், அவரது தந்தை சென்று பார்த்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பேஷன் டிசைனரான அவருக்கு, குறிப்பிடத்தகுந்த ரசிகர்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×