search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Inauguration ceremony"

    • விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.
    • பயணிகளின் உடைமைகள் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரால் ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்ட பின்பே விமானத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.

    கே.கே.நகர்:

    திருச்சி விமான நிலையத்தில் ரூ.1200 கோடி செலவில் பன்னாட்டு விமான முனையம் சர்வதேசதரத்தில் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.

    இதற்காக பிரதமர் மோடி நாளை மறுநாள் காலை 10.10 மணிக்கு தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வருகிறார்.

    பின்னர் அங்கிருந்து காரில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு செல்கிறார். அங்கு மாணவ-மாணவிகளுக்கு பிரதமர் மோடி பட்டங்களை வழங்குகிறார்.

    இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். பின்னர் பிரதமர் மோடி அங்கிருந்து புறப்பட்டு மதியம் 12 மணிக்கு திருச்சி விமான நிலையத்துக்கு வருகிறார்.

    அங்கு நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு திருச்சி விமான நிலைய பன்னாட்டு முனையத்தை திறந்து வைக்கிறார். பின்னர் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார். இதை தொடர்ந்து மதியம் 1.15 மணிக்கு அவர் தனி விமானம் மூலம் லட்சத்தீவுக்கு புறப்பட்டு செல்கிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலைய, பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் அவர் வரும் பாதைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


    விழாவுக்காக விமான நிலையத்தில் பிரமாண்டமான மேடை அமைக்கப்ட்டு வருகிறது. திருச்சி விமான நிலையத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நுழைவு வாயிலில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மோப்பநாய் உதவியுடன் விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை சோதனை செய்து பின்னர் உள்ளே அனுப்புகின்றனர்.

    அதற்கு அடுத்த கட்டமாக தமிழக போலீசார் பயணிகளின் உடமைகளை சோதனை செய்கின்றனர். இவை தவிர தேசிய பாதுகாப்பு குழுவினர் புதிய முனையத்தின் பகுதிகளையும் விமான நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விமானத்தில் பயணம் செய்ய இருக்கும் பயணிகளின் உடைமைகள் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரால் ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்ட பின்பே விமானத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.


    அதேபோன்று விமானத்தில் பயணம் செய்ய இருக்கும் பயணிகள் அனைவரும் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்பு விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் திருச்சி விமான நிலையத்தில் புதிய முனைய நுழைவு வாயிலில் தமிழக போலீசார் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பாதுகாப்புப் பணி யானது 3-ந் தேதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கடந்த 10-ந்தேதி அல்லது 15-ந்தேதி பஸ் நிலையத்தை திறந்துவிடலாம் என்று அதிகாரிகள் திட்டமிட்டு இருந்தனர்.
    • திறப்பு விழாவையொட்டி அழைப்பிதழ் தயாரிக்கும் பணிகள், கல்வெட்டு அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    வண்டலூர்:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.400 கோடி செலவில் புதிய புறநகர் பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த பஸ் நிலையத்தின் கட்டுமான பணிகள் சில மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டன.

    அதன் பிறகு இணைப்பு சாலை, மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில் அனைத்து பணிகளும் முடிந்து பஸ் நிலையம் திறப்பு விழாவுக்கு தயாராக இருக்கிறது. கடந்த 10-ந்தேதி அல்லது 15-ந்தேதி பஸ் நிலையத்தை திறந்துவிடலாம் என்று அதிகாரிகள் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் 'மிக்ஜம்' புயலால் பெய்த பலத்தமழை காரணமாக திறப்பு விழா நடத்தப்படவில்லை.

    இந்நிலையில் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பொங்கல் பண்டிகைக்கு முன்பு கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறக்கப்பட உள்ளது.

    கிளாம்பாக்கம் பஸ் நிலைய பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. பஸ் நிலையம் திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது. முதல்- அமைச்சரின் தேதிக்காக காத்திருக்கிறோம். முதல்-அமைச்சர் தேதி கொடுத்ததும் பஸ் நிலையத்தை திறப்பதற்கான பணிகளை தொடங்கி விடுவோம். பொங்கல் பண்டிகைக்கு முன்பு கிளாம்பாக்கம் பஸ் நிலைய திறக்கப்படும்.

    திறப்பு விழாவையொட்டி அழைப்பிதழ் தயாரிக்கும் பணிகள், கல்வெட்டு அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. 'கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்' என்று பெயரிடப்பட்டு அதன் அடிப்படையிலேயே அழைப்பிதழ்கள் தயாரிக்கப்பட உள்ளன.

    கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் கட்டுமான பிரிவு கட்டியுள்ளது. அதற்கு முறையான பணி நிறைவு சான்றிதழ் இன்னும் வழங்கப்படவில்லை.

    மேலும் மாற்றுத் திறனாளிகளுகான வசதிகள் முறையாக இல்லை என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை முடித்து பணி நிறைவு சான்றிதழ் பெறும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிவகங்கை அருகே மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடம் திறப்பு விழா நடந்தது.
    • ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் ரேசன்கடை மற்றும் நாடக மேடை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினர்.

    சிவகங்ைக

    சிவகங்கை மாவட்டம் மறவமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ. 70லட்சம் மதிப்பிலான மகளிர் சுய உதவிக் குழு கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

    மேலும் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் ரேசன்கடை மற்றும் நாடக மேடை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினர்.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், பொறியாளர் உமாராணி, துணை தலைவர் செந்தில், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சரவணன், அம்மா பேரவை துணை செயலாளர் மாரி, மாவட்ட பாசறை துணை செயலாளர் பிரபு, பாசறை இணை செயலாளர் மோசஸ், சதிஷ்பாலு, ஊராட்சி செயலாளர் ஜான்சிராணி, மறவமங்கலம் ஊர் மக்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது.
    • மாவட்ட செயலாளர் கலந்து கொண்டார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் அ.தி.மு.க. வின் 52 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கட்சி யினர், கொடிகள் ஏற்றி இனிப்புகள் வழங்கி விமரி சையாக கொண்டாடினர்.

    குன்றக்குடியில் பேருந்து நிலையம் அருகில் மற்றும் சுப்பிரமணிய சுவாமி கோவில் எதிரே உள்ள அ.தி.மு.க. கொடிக்கம்பத்தில் சிவகங்கை மாவட்டச் செய லாளரும், சிவகங்கை சட்ட மன்ற உறுப்பினருமான பி.ஆர்.செந்தில்நாதன் கட்சி கொடி ஏற்றி வைத்து, இனிப்புகள் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் ஏ.வி.நாகராஜன், பாசறை மாவட்ட செயலாளர் பிரபு, மாவட்ட எம்.ஜி.ஆர். இளை ஞர் அணி செயலாளர் பார்த்திபன், பேரவை இணைச் செயலாளர் முருகேசன் உள்ளிட்ட அ.தி.மு.க. மாவட்ட, ஒன்றிய, நிர்வாகி கள் ஏராளமானோர் கலந்து கொண்டாடினர்.

    • மேலூரில் கல்யாண சுந்தரேஸ்வரர் காமாட்சியம்மன் கோவிலில் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது.
    • அவர்கள் அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் கோவிலில் பதவியேற்றுக் கொண்டனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள கல்யாண சுந்த ரேஸ்வரர் காமாட்சியம்மன் (சிவன் கோவில்) அறங்காவலர் குழு தலைவராக, முல்லை பெரியாறு வைகை ஒருபோக பாசன விவசாயிகள் சங்க தலைவர் முருகன் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். மேலும் குழு உறுப்பினர்களாக காந்திஜி பூங்காவை சேர்ந்த ஸ்தபதி மகேந்திரன், மேலூர் மலம்பட்டி விஜயபாண்டியன், மற்றும் முன்னாள் சொக்கம்பட்டி கவுன்சிலர் கலையரசி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் கோவிலில் பதவியேற்றுக் கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியில் மேலூர் நகராட்சி தலைவர் முகமது யாசின், வல்லாள பட்டி பேரூ ராட்சி தலைவர் குமரன், பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், சுபைதா அப்பாஸ், மேலும் மேலும் யூனியன் துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் நேரு பாண்டி, ராஜராஜன், உதவி ஆணையர் செல்வி, செயல் அலுவலர் வாணி மகேஸ்வரி, அர்ச்சகர் தட்சிணா மூர்த்தி, பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

    • ரூ.28 லட்சம் செலவில் உடன்குடி யூனியன் தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
    • இதனை சென்னையில் இருந்து காணொலி மூலம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    உடன்குடி:

    உடன்குடி யூனியன் செட்டியாபத்து ஊராட்சி சிவலூரில் தமிழக அரசின் குழந்தைகள் நேயபள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூ.28 லட்சம் செலவில் உடன்குடி யூனியன் தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

    இதன் தொடக்க விழாவில் சென்னையில் இருந்து காணொலி மூலம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சிவலூர் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு உடன்குடி வட்டார கல்வி அலுவலர் ஜெயவதி ரெத்தினாவதி தலைமை தாங்கினார். செட்டியாபத்து ஊராட்சி தலைவர் க.பாலமுருகன் குத்து விளக்கு ஏற்றினார். சிவலூர் ஊர் தலைவர் முருகன், சுந்தர் விஜயன், ரவி, ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் பவுலா ராதிகா வரவேற்றார். இதில் செட்டியாபத்து ஊராட்சிசெயலர் கணேசன் உட்பட ஊர் மக்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினர். ஆசிரியை ராதை நன்றி கூறினார்.

    • ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.30.31 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா நடந்தது.
    • புதிய வகுப்பறை திறப்பு விழாவை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் நாவல் மரம் நடப்பட்டது.

    பெருமாநல்லூர், செப்.27-

    திருப்பூர் மாவட்டம் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருமாநல்லூர் ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட தட்டான்குட்டை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.30.31 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழா நடந்தது. இதில் ஊராட்சி ஒன்றிய தலைவர் சொர்ணாம்பாள் பழனிசாமி கலந்து கொண்டு புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ராதாமணி சிவகாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜோதிநாத் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா, ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி மன்ற செயலாளர் தனபால் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள், பள்ளி குழந்தைகள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    புதிய வகுப்பறை திறப்பு விழாவை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் நாவல் மரம் நடப்பட்டது.

    • த.மு.மு.க.வின் 29-ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது.
    • சின்னக் கடை பகுதி அக்பர் அலி என்பவருக்கு இருதய சிகிச்சைக்காக ரூ. 10 ஆயிரம் மருத்துவ உதவியாக வழங் கப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் த.மு.மு.க.வின் 29-வது ஆண்டை முன்னிட்டு மாநில துணை பொது செயலாளர் சலி முல்லாஹ்கான் தலைமை யில் குமரய்யா கோவில் அருகில் த.மு.மு.க. கொடி யை ஏற்றி வைத்து தொண் டர்களுக்கும், பொது மக்களுக்கும் இனிப்பு வழங் கினர். அப்போது சின்னக் கடை பகுதி அக்பர் அலி என்பவருக்கு இருதய சிகிச்சைக்காக ரூ. 10 ஆயிரம் மருத்துவ உதவியாக வழங் கப்பட்டது.

    தொடர்ந்து வாலாந்தர வையில் இயங்கி வரும் செஸ்ட் ஏஞ்சலின் மன வளர்ச்சி குன்றிய 120 மாண வர்கள், முதியவர்களுக்கு மதிய உணவு தயார் செய்து வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் த.மு.மு.க. மாவட்டத் தலைவர் பிரி மியர் இப்ராஹிம், மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மாவட்ட பொருளாளர் சபிக் ரஹ்மான், ம.ம.க. மாவட்டச் செயலாளர் ஆஷிக்சுல்தான், 15-வது வார்டு நகர் மன்ற உறுப்பி னர் காதர் பிச்சை, மேற்கு மாவட்ட தலைவர் ஷேக் அப்துல்லா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் இயற்கை மன்றம் தொடக்க விழா நடந்தது.
    • கல்லூரி துணை முதல்வர் ஜஹாங்கீர் வரவேற்று பேசினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் உலக இயற்கை பாதுகாப்பு நாளை முன்னிட்டு இயற்கை மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரி துணை முதல்வர் ஜஹாங்கீர் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ்கான் தலைமை தாங்கி பேசினார். சிறப்பு விருந்தினராக சிவகங்கை மாவட்ட வன சரக அதிகாரி சுபாஷ் கலந்துகொண்டு இயற்கை வனத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை பற்றி பேசினார். இறுதியாக இயற்கை கிளப் ஒருங்கிணைப்பாளர் ரோஷன் ஆரா பேகம் நன்றி கூறினார். இயற்கையை பாதுகாக்க வேண்டும் என கல்லூரி மாணவ, மாணவிகள் உறுதி மொழி எடுத்தனர்.

    • ஆண்கள் ஆக்கி போட்டிக்கான கோப்பை அறிமுக விழா நடை பெற்றது.
    • புஞ்சை புளியம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலை ப்பள்ளியில் 7-வது ஆசிய கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டிக்கான கோப்பை அறிமுக விழா நடை பெற்றது.

    விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தலைமை தாங்கி கலந்து கொண்டார்.

    அப்போது கலெக்டர் பேசியதாவது:

    தமிழக முதல்-அமைச்சர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு த்துறைக்கு பல்வேறு திட்ட ங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

    இந்தியா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் இணைந்து நடத்தும் ஆசியக் கோப்பை க்கான ஆண்கள் ஆக்கி போட்டிகள் வருகின்ற 3-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை சென்னையில் நடை பெற உள்ளது.

    இந்த போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, ஜப்பான், சீனா, மலேசியா நாடுகளை சேர்ந்த ஆக்கி அணிகள் கலந்து கொள்கிறது.

    இந்த போட்டிகளில் வெற்றி பெறும் அணிக்கு வழங்க ப்படும் பரிசுக்கோப்பை தமிழ்நாடு முழுவதும் எடுத்து சென்று பொது மக்கள் பார்வைக்கு அறி முகம் செய்யப்பட்டு வரு கிறது.

    மேலும் இந்த நிகழ்ச்சியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு த்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்.

    மாவட்டங்கள் தோறும் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டு வரு கிறது. அதன்படி புஞ்சை புளியம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலை ப்பள்ளியில் கோப்பை அறிமுக விழா நடந்தது.

    மேலும் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் ஆடவர் ஆக்கி போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் இந்தியா அணியில் அரியலூர் மாவட்டத்தை சார்ந்த கார்த்தி கலந்து கொள்கிறார்.

    இந்த ஆசிய கோப்பை போட்டியில் கலந்து கொள்ளும் விைளயாட்டு வீரர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்துள்ளது.

    மேலும் மாணவர்கள் படிப்பதுடன் விளையா ட்டிலும் கவனம் செலுத்தி னால் உடலும் ஆரோக்கியம் பெற்று போட்டிகளில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் மாவட்டத்தி ற்கும், மாநிலத்திற்கும் மற்றும் இந்தியாவிற்கும் பெருமை தேடி தர வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    முன்னதாக கலெக்டர் தலைமையில் 7-வது ஆசிய கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி கோப்பையினை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் புன்செய்புளி யம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் தொடங்கி நகரின் முக்கிய சாலைகளின் வழி யாக புஞ்சை புளியம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

    இந்த ஆய்வின்போது, மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு அய்மன்ஜமால், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சதீஷ்குமார், சத்தியமங்கலம் வருவாய் தாசில்தார் சங்கர்கணேஷ், புன்செய்புளியம்பட்டி நகராட்சி தலைவர் ஜனார்த னன், துணைத்தலைவர் சிதம்பரம், ஆணையாளர் (பொறுப்பு) செல்வம், ரோட்டரி சங்க நிர்வாகிகள் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் 35-வது ஆண்டு தொடக்க விழா நடந்தது.
    • முடிவில் மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர் நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் 35-ம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம் மாவட்ட செயலாளர் தேனி.சை.அக்கிம் தலைமையில் ராமநாதபுரம் நகரச் செயலா ளர் பாலாகுமார் முன்னிலை யில் கொண்டாடப்பட்டது.

    ராமநாதபுரம் நகர் பகுதியில் கொடிக்கம்பங்களில் புதிய கொடிகள் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. பின்னர் மண்டபம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் கவுன்சிலர் மருது பாண்டியனை சந்தித்து இனிப்பு வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட பாட்டாளி தொழிற்சங்க தலைவர் லட்சுமணன், ஊடக பிரிவு மாவட்ட செயலாளர் பனைக்குளம் நூருல் அமீன், கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி, ஒன்றிய தலைவர் காளிமுத்து, மண்டபம் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தூம்கான், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் ஷெரிப், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் இப்ராஹிம், மாணவர் சங்க செயலாளர் சந்தோஷ், ராமநாதபுரம் ஒன்றிய துணை செயலாளர் கனகு மற்றும் பலர் கலந்து கொண் டனர். முடிவில் மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர் நன்றி கூறினார்.

    • சாரண- சாரணியர் இயக்க தொடக்க விழா நடந்தது.
    • தாளையடிகோட்டை பள்ளி தலைமை ஆசிரியர் சித்திகா வரவேற்றார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் சாரண, சாரணியர் இயக்க தொடக்க விழா தாளையடி கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்தது. நயினார்கோவில் வட்டாரக் கல்வி அலுவலர் பாஸ்கரன் தலைமை தாங்கி னார். மற்றொரு வட்டாரக் கல்வி அலுவலர் வாசுகி முன்னிலை வகித்தார். தாளையடிகோட்டை பள்ளி தலைமை ஆசிரியர் சித்திகா வரவேற்றார்.

    ராமநாதபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ் சாரண சாரணிய இயக்கத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    சாரண இயக்கம் மூலம் பள்ளி மாணவர்களிடம் ஆளுமைத் திறன், தலைமைப் பண்புகள் போன்ற திறன் வளரும் என்றார்.

    மதுரை மாவட்ட சாரணர் பயிற்சி ஆணையர் ராஜசே கர், ராமநாதபுரம் மாவட்ட சாரண இயக்க ஒருகிணைப் பாளர் செல்வராஜ் ஆகி யோர் சிறப்பு அழைப்பாளர் களாகக் கலந்து கொண்டு சாரண இயக்கத்தின் நோக் கம், குறிக்கோள், வரலாறு, அதன் செயல்பாடுகள், சாதனைகள் பற்றிக் கூறி னர்.

    உதயகுடி பள்ளி பட்ட தாரி ஆசிரியர் மரிய சவுரி ஜான்சிராணி நன்றி கூறி னார். இதில் பொட்டகவயல் அரசு மேல்நிலைப்பள்ளி சாரண கேப்டன் மகாராணி, நயினார்கோவில் வட்டார நடுநிலைப் பள்ளிகளின் சாரணர் இயக்க ஆசிரியர் கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    ×