search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா
    X

    குன்றக்குடியில் அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழாவில் பி.ஆர்.செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு இனிப்பு வழங்கிய காட்சி.

    அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா

    • அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது.
    • மாவட்ட செயலாளர் கலந்து கொண்டார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் அ.தி.மு.க. வின் 52 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கட்சி யினர், கொடிகள் ஏற்றி இனிப்புகள் வழங்கி விமரி சையாக கொண்டாடினர்.

    குன்றக்குடியில் பேருந்து நிலையம் அருகில் மற்றும் சுப்பிரமணிய சுவாமி கோவில் எதிரே உள்ள அ.தி.மு.க. கொடிக்கம்பத்தில் சிவகங்கை மாவட்டச் செய லாளரும், சிவகங்கை சட்ட மன்ற உறுப்பினருமான பி.ஆர்.செந்தில்நாதன் கட்சி கொடி ஏற்றி வைத்து, இனிப்புகள் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் ஏ.வி.நாகராஜன், பாசறை மாவட்ட செயலாளர் பிரபு, மாவட்ட எம்.ஜி.ஆர். இளை ஞர் அணி செயலாளர் பார்த்திபன், பேரவை இணைச் செயலாளர் முருகேசன் உள்ளிட்ட அ.தி.மு.க. மாவட்ட, ஒன்றிய, நிர்வாகி கள் ஏராளமானோர் கலந்து கொண்டாடினர்.

    Next Story
    ×