search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arrival"

    • கடந்த சில வாரங்களாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்தனர்.
    • இலங்கையில் இருந்து படகு மூலம் ஒரு சிறுவன் உள்ளிட்ட 3 பேர் படகு மூலம் தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு வந்தனர்.

    ராமேசுவரம்:

    இலங்கையில் இருந்து படகு மூலம் சிறுவன் உள்ளிட்ட 3 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர். அவர்களை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பாதுகாப்புடன் மண்டபம் முகாமிற்கு அழைத்து சென்றனர்.

    இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த சில வாரங்களாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்தனர்.

    அவர்களிடம் போலீசாரும், வெளியுறவு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி பின்பு அவர்களை மண்டபம் முகாமில் அமைந்துள்ள இலங்கை தமிழர்கள் மறு வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்து வருகின்றனர். அங்கு அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளில் குடும்பம் வாரியாக தனித்தனி வீடுகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில் இன்று இலங்கையில் இருந்து படகு மூலம் ஒரு சிறுவன் உள்ளிட்ட 3 பேர் படகு மூலம் தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கு வந்தனர்.

    அவர்களை குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் அரிச்சல் முனையில் அகதிகள் வந்திறங்கிய பகுதிக்கு சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்களிடம் நடத்தி விசாரணையில் மட்டக் களப்பு பகுதியை சேர்ந்த கஜேந்திரன்(45),அவரது மகன் சஜித்மேனன்(8) சிவனேசுவரன்(49) என்பது தெரியவந்தது.

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடுமையான விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளதால் போதிய வருவாயின்றி தவிப்பதாகவும் இதனால் படகு மூலம் தனுஷ்கோடிக்கு வந்ததாகவும் தெரிவித்தனர்.

    இதனைதொடர்ந்து, மண்டபத்தில் உள்ள கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர்கள் மண்டபம் முகாமிலில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு மையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். 

    • விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.
    • பயணிகளின் உடைமைகள் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரால் ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்ட பின்பே விமானத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.

    கே.கே.நகர்:

    திருச்சி விமான நிலையத்தில் ரூ.1200 கோடி செலவில் பன்னாட்டு விமான முனையம் சர்வதேசதரத்தில் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.

    இதற்காக பிரதமர் மோடி நாளை மறுநாள் காலை 10.10 மணிக்கு தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வருகிறார்.

    பின்னர் அங்கிருந்து காரில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு செல்கிறார். அங்கு மாணவ-மாணவிகளுக்கு பிரதமர் மோடி பட்டங்களை வழங்குகிறார்.

    இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். பின்னர் பிரதமர் மோடி அங்கிருந்து புறப்பட்டு மதியம் 12 மணிக்கு திருச்சி விமான நிலையத்துக்கு வருகிறார்.

    அங்கு நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு திருச்சி விமான நிலைய பன்னாட்டு முனையத்தை திறந்து வைக்கிறார். பின்னர் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார். இதை தொடர்ந்து மதியம் 1.15 மணிக்கு அவர் தனி விமானம் மூலம் லட்சத்தீவுக்கு புறப்பட்டு செல்கிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலைய, பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் அவர் வரும் பாதைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


    விழாவுக்காக விமான நிலையத்தில் பிரமாண்டமான மேடை அமைக்கப்ட்டு வருகிறது. திருச்சி விமான நிலையத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நுழைவு வாயிலில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மோப்பநாய் உதவியுடன் விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை சோதனை செய்து பின்னர் உள்ளே அனுப்புகின்றனர்.

    அதற்கு அடுத்த கட்டமாக தமிழக போலீசார் பயணிகளின் உடமைகளை சோதனை செய்கின்றனர். இவை தவிர தேசிய பாதுகாப்பு குழுவினர் புதிய முனையத்தின் பகுதிகளையும் விமான நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விமானத்தில் பயணம் செய்ய இருக்கும் பயணிகளின் உடைமைகள் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரால் ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்யப்பட்ட பின்பே விமானத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.


    அதேபோன்று விமானத்தில் பயணம் செய்ய இருக்கும் பயணிகள் அனைவரும் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்பு விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் திருச்சி விமான நிலையத்தில் புதிய முனைய நுழைவு வாயிலில் தமிழக போலீசார் மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பாதுகாப்புப் பணி யானது 3-ந் தேதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பரமக்குடிக்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பரமக்குடி

    பரமக்குடியில் 11-ந்தேதி தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. அன்று தி.மு.க. சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், இமானு வேல்சேகரன் நினை விடத்தில் அஞ்சலி செலுத்து கின்றனர்.

    அஞ்சலி செலுத்த வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான செயற்குழு ஆலோசனை கூட்டம் பரமக்குடியில் நடந்தது.

    முன்னாள் அமைச்சர் டாக்டர் சுந்தரராஜ் தலைமை தாங்கினார். ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

    பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் வரவேற்று பேசினார். இதில் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலி னுக்கு ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் மரிச்சிகட்டியில் இருந்து பரமக்குடி வரை உற்சாக வரவேற்பு அளிக்கப்படும். இதில் பொதுமக்களும், தி.மு.க. தொண்டர்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் செய்ய வேண்டும். அதே போல் இளைஞரணி மாநில மாநாட்டில் மாவட்டத்தில் இருந்து ஏராளமான இளைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் கருப்பையா, மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் இன்பா ரகு, பரமக்குடி நகர் மன்றத் தலைவர் சேது கருணாநிதி, பொதுக்குழு உறுப்பினர்கள் அருளாந்து, வக்கீல் பூமிநாதன், போகலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சத்யா குணசேகரன், ஒன்றிய செயலாளர்கள் வாசு தேவன், ஜெயக்குமார், கிருஷ்ணமூர்த்தி, சக்தி, அண்ணா மலை, மாவட்ட வக்கீல் பிரிவு அமைப்பாளர் வக்கீல் கருணாநிதி, வக்கீல் கள் கதிரவன், குணசேகரன், இளைஞரணி அமைப்பாளர் சம்பத் ராஜா, துணை அமைப்பாளர்கள் குமரகுரு, சண்.சம்பத்குமார், சத்தி யேந்திரன், பொறியாளர் அணி அமைப்பாளர் பாஸ்கர பாண்டியன், பகுத்தறிவு பாசறை பிரிவு அமைப்பாளர் செந்தில் செல்வானந்த், விவசாய அணி அமைப்பாளர் அய்ய னார், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற நிர்வாகி துரைமுருகன், கவுன்சிலர் நதியா மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது.
    • கிராமப்புற செவிலியர் பாண்டீஸ்வரி, வி.ஏ.ஓ. ஜோதிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியத் திற்கு உட்பட்ட கண்ணனூர் ஊராட்சி அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    முகாமை உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏ. அய்யப் பன், ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி தமிழரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன், இ.சி.ஜி., எக்கோ, ரத்தம், சிறுநீர் பரிசோதனை, ஊட்டச்சத்து பொருட்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் தயாரிப்பு குறித்த பயிற்சி, தொழு நோய், காசநோய், பல், கண், பொதுமருத்துவம், இருதயம், காது, மூக்கு, தொண்டை தொடர்பான பரிசோத னைகள், எலும்பு மூட்டு, எய்ட்ஸ் பரிசோ தனை, பெண்கள் குழந்தை களுக்கான பொது மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

    முகாமில் செல்லம்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் பாண்டியராஜன் தலைமையில் ராமச்சந்தி ரன், சிந்தனா, ஹசைனா, பிரியா, சாந்தினி, பிருந்தா வசந்ந்,அபிநயா, மோனிஷா, சாந்தினி, குழுவினர்கள் நோயாளிகளை பரிசோ தனை செய்தனர். முகாமில்

    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார அலுவலர் நாகஜோதி, பள்ளி தலைமை ஆசிரியை தேன்மொழி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சேதுராமன், கிராமப்புற செவிலியர் பாண்டீஸ்வரி, வி.ஏ.ஓ. ஜோதிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வறுமையின் காரணமாக அங்கு வாழ வழியின்றி தமிழகத்திற்கு வந்தோம்.
    • காலையில் படகு ஓட்டிகள் வந்து தனுஷ்கோடி கடலோர கரைப்பகுதியில் இறக்கி விட்டு சென்றதாகவும் கண்ணீருடன் தெரிவித்தனர்.

    ராமேசுவரம்:

    இலங்கையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோல், டீசல் போன்றவற்றிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

    அன்னிய செலாவணி இருப்பு குறைந்ததால் வெளிநாடுகளில் இருந்த அத்தியவாச பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் அந்த நாட்டு அரசு திணறியது.

    இதன் காரணமாக அரிசி முதல் காய்கறி வரை அனைத்து உணவுப்பொருட்களின் விலையும் விண்ணை தொட்டன. இதனால் அங்கு வாழ்வாதாரம் இழந்தும், வாழ வழியின்றியும் இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வருவது அதிகரித்துள்ளது.

    இதுவரை 257 பேர் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்கள் மண்டபம், ராமேசுவரம் உள்ளிட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை ராமேசுவரத்தை அடுத்த தனுஷ்கோடி கடலோரப் பகுதியான அரிச்சல் முனை கடற்கரை பகுதியில் இலங்கை அகதிகள் வந்திருப்பதாக அப்பகுதி மீனவர்கள் ராமேசுவரம் கடலோர காவல் படை குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவர்கள் அரிச்சல் முனை பகுதியில் இருந்த 8 பேரை மீட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இலங்கை யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த ரூபன் மனைவி மரியா (வயது 35), மகன்கள் அபிலாஷ் (16) அபினாஷ் (14),சோதனை (8), அதுபோலே யாழ்பாணம் பகுதி அனைகோட்டை குலவாடி பகுதியை சேர்ந்த கணேசமூர்த்தி மகன் விஜய் குமார் (50), இவரது மனைவி தர்சிகா (34), மகன்கள் அஸ்நாத் (15), யோவகாஷ் (11) இப்பகுதியை என தெரியவந்தது

    வறுமையின் காரணமாக அங்கு வாழ வழியின்றி தமிழகத்திற்கு வந்ததாகவும், இங்கே வந்தால் ஏதாவது பிழைப்பு தேடி குடும்பத்தை வழிநடத்தலாம் என்று முடிவு செய்து யாழ்ப்பாணம் கடலோரப் பகுதியில் இருந்து பிளாஸ்டிக் படகில் இரண்டு லட்சம் ரூபாய் பணம் கொடுத்ததாகவும், இலங்கை யாழ்ப்பாணம் கடலோரப் பகுதியில் இருந்து நேற்று மாலை புறப்பட்டதாகவும் இன்று காலையில் படகு ஓட்டிகள் வந்து தனுஷ்கோடி கடலோர கரைப்பகுதியில் இறக்கி விட்டு சென்றதாகவும் கண்ணீருடன் தெரிவித்தனர்.

    தொடர்ந்து இலங்கை அகதிகள் 8 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்ட வருகிறார்கள். கடந்த 2022 ஆண்டு முதல் இன்றைய தேதி வரை இலங்கையில் இருந்து 265 பேர் அகதிகளாக இந்தியா வந்துள்ளனர். 

    • முதல்-அமைச்சரின் வருகையை முன்னிட்டு மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றப்படும்.
    • மேற்கண்ட தகவலை மதுரை மாநகர போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    மதுரை

    மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூல கத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். இதை யொட்டி மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி நாளை விழா நடைபெறும் நத்தம் சாலை யில் ஐ.ஓ.சி. ரவுண்டானா சந்திப்பு முதல் ஆத்திகுளம் சந்திப்பு வரை வாகன போக்குவரத்து தடை செய்யப்படுகின்றது. இப்பகுதிக்கு ஐ.ஓ.சி. ரவுண்டானா, பாண்டியன் ஹோட்டல் சந்திப்பு, தாமைரைத்தொட்டி, புதூர், மூன்றுமாவடி வழியாக ஐயர்பங்களா சந்திப்பு சென்று தங்கள் பகுதிக்கு செல்லலாம். அதுபோல நத்தம் ரோட்டிலிருந்து நகர் நோக்கி வரும் வாகனங்கள் மூன்று மாவடி, புதூர் வழியாக நகரின் உட்பகுதிக்கு செல்லலாம். காலை 9 மணி முதல் கப்பலூர் சந்திப்பி லிருந்து ரிங் ரோடு வழியாக நகர் நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் கப்பலூர், தோப்பூர் வழியாக திண்டுக்கல் சாலைக்கு செல்லவேண்டும். காலை 9 மணி முதல் கப்பலூர் சந்திப்பிலிருந்து ரிங் ரோடு வழியாக நகர் நோக்கி வரும் அனைத்து பேருந்துகளும் தோப்பூர், திருநகர், திருப்பரங்குன்றம் வழியாக மாட்டுத்தாவணி மற்றும் ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களுக்கு செல்ல வேண்டும்.

    அருப்புக்கோட்டை, தூத்துக்குடி பகுதியிலிருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் வளையங்குளம், சாம நத்தம், பொட்ட பாளையம் மற்றும் கீழடி வழியாக ராமேசுவரம் சாலையினை மாட்டுத் தாவணி செல்லவேண்டும்.

    தூத்துக்குடி, அருப்புக் கோட்டை சாலையிலிருந்து வரும் அனைத்து சரக்கு கனரக வாகனங்களும் கப்பலூர் செல்லவேண்டும். சென்று திண்டுக்கல் சாலை வழியாக செல்லவேண்டும்.

    எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும் மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் வாகன கொள்ளப் படுகிறது.

    மேற்கண்ட தகவலை மதுரை மாநகர போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வருகை தருகிறார்.
    • நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்

    புதுக்கோட்டை:

    இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) புதுக்கோட்டை வருகை தருகிறார். காரைக்குடி மார்க்கத்தில் இருந்து காரில் வரும் அவருக்கு புதுக்கோட்டை மாவட்ட எல்லையான திருமயம் அருகே சவேரியார்புரத்தில் இருந்து வரவேற்பு அளிக்கப்படுகிறது. புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார். தொடர்ந்து அவரது தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், கலெக்டர் மெர்சி ரம்யா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். அனைத்துத்துறை அலுவலர்களும் பங்கேற்கின்றனர். ஆய்வுக்கூட்டத்திற்கு பின் ஆலங்குடியில் தி.மு.க. பிரமுகர் இல்ல திருமண வரவேற்பு விழா, கீரனூரில் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் வீடு ஆகியவற்றிற்கு சென்று விட்டு திருச்சி செல்கிறார்.

    ×