search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sakhir Hussain College"

    • இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் இயற்கை மன்றம் தொடக்க விழா நடந்தது.
    • கல்லூரி துணை முதல்வர் ஜஹாங்கீர் வரவேற்று பேசினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் உலக இயற்கை பாதுகாப்பு நாளை முன்னிட்டு இயற்கை மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரி துணை முதல்வர் ஜஹாங்கீர் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ்கான் தலைமை தாங்கி பேசினார். சிறப்பு விருந்தினராக சிவகங்கை மாவட்ட வன சரக அதிகாரி சுபாஷ் கலந்துகொண்டு இயற்கை வனத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை பற்றி பேசினார். இறுதியாக இயற்கை கிளப் ஒருங்கிணைப்பாளர் ரோஷன் ஆரா பேகம் நன்றி கூறினார். இயற்கையை பாதுகாக்க வேண்டும் என கல்லூரி மாணவ, மாணவிகள் உறுதி மொழி எடுத்தனர்.

    • இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து போட்டி நடந்தது.
    • போட்டிகளை கால்பந்து ரசிகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

    மானாமதுரை

    75-வது சுதந்திர தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டம், இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் தென்னிந்திய அளவிலான கால்பந்து போட்டி 3 நாட்கள் நடந்தது. கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த 20 அணிகள் பங்கேற்றன.

    மழை காரணமாக கல்லூரி மைதானத்தை பயன்படுத்த இயலாத நிலையில் அனைத்து போட்டிகளும், இளையான்குடி ஸ்டார் முஸ்லீம் கால்பந்தாட்ட மைதானத்தில் நடத்தப்பட்டது. சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி போட்டியை பார்வையிட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    நிறைவு விழாவில் கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் (பொறுப்பு), பொருளாளர் அப்துல் அஹது தலைமை தாங்கினர். முதல்வர் அப்பாஸ் மந்திரி வரவேற்றார். ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லா கான் தலைமையுரையாற்றினார்.

    சிவகங்கை மாவட்டம், கண்டரமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கால்பந்தாட்ட வீரர் ராமன் விஜயன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகோப்பை, சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசுகளை வழங்கினார்.

    இறுதி போட்டியில் கேரள மாநிலத்தின் கிருஷ்ணா கல்லூரி அணி முதலிடம் பெற்று 7 அடி உயர பரிசு கோப்பையையும், ரூ. 25 ஆயிரம் ரொக்கப்பரிசையும் வென்றது. கோவை ரத்தினம் கல்லூரி அணி 2-ம் இடத்தை பெற்று 6 அடி உயர பரிசு கோப்பையையும், ரூ.15 ஆயிரம் ரொக்கப்பரிசையும் வென்றது.

    கேரள மாநிலம் திருச்சூர் எம்.டி.கல்லூரி அணி 5 அடி உயர பரிசுகோப்பையுடன், ரூ. 10 ஆயிரம் ரொக்கப்பரிசு பெற்று 3-ம் இடம் பெற்றனர். 4-ம் இடத்தை இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி அணி கைப்பற்றி 4 அடி உயர பரிசு கோப்பையையும், ரூ. 5ஆயிரம் ரொக்கப்பரிசையும் பெற்றது.

    சிறந்த வீரருக்கான பரிசை கோவை ரத்தினம் கல்லூரி அணி வீரர் முஹம்மது ஷானானும், சிறந்த கோல்கீப்பர் பரிசை சாகிர் உசேன் கல்லூரி அணி வீரர் ஆல்வினும் பெற்றனர். கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக், சிராஜுதீன், அப்துல் சலீம், சுயநிதி பாடப்பிரிவு இயக்குநர் ஷபினுல்லாஹ் கான், சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி முதல்வர் முஹம்மது முஸ்தபா, ஸ்டார் முஸ்லீம் கால்பந்தாட்ட குழு தலைவர் முஹம்மது அலி, செயலாளர் அப்துல் ரஜாக் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    விளையாட்டு போட்டிகளை கல்லூரி உடற்கல்வி இயக்குநர் காளிதாசன், உடற்கல்வி ஆசிரியர்கள் காஜா நஜிமுதீன், வெற்றி, ஜென்சி, கோகுல் ஆகியோருடன் இணைந்து இளையான்குடி, ஸ்டார் முஸ்லீம் கால்பந்தாட்ட குழுவினர் செய்திருந்தனர். போட்டிகளை கால்பந்து ரசிகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

    ×