சாகிர் உசேன் கல்லூரியில் இயற்கை மன்றம் தொடக்க விழா

இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் இயற்கை மன்றம் தொடக்க விழா நடந்தது. கல்லூரி துணை முதல்வர் ஜஹாங்கீர் வரவேற்று பேசினார்.
சாகிர் உசேன் கல்லூரியில் இயற்கை மன்றம் தொடக்க விழா
Published on

மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் உலக இயற்கை பாதுகாப்பு நாளை முன்னிட்டு இயற்கை மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரி துணை முதல்வர் ஜஹாங்கீர் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ்கான் தலைமை தாங்கி பேசினார். சிறப்பு விருந்தினராக சிவகங்கை மாவட்ட வன சரக அதிகாரி சுபாஷ் கலந்துகொண்டு இயற்கை வனத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை பற்றி பேசினார். இறுதியாக இயற்கை கிளப் ஒருங்கிணைப்பாளர் ரோஷன் ஆரா பேகம் நன்றி கூறினார். இயற்கையை பாதுகாக்க வேண்டும் என கல்லூரி மாணவ, மாணவிகள் உறுதி மொழி எடுத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com