பதவியேற்பு நிகழ்ச்சி

மேலூரில் கல்யாண சுந்தரேஸ்வரர் காமாட்சியம்மன் கோவிலில் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. அவர்கள் அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் கோவிலில் பதவியேற்றுக் கொண்டனர்.
பதவியேற்பு நிகழ்ச்சி
Published on

மேலூர்

மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள கல்யாண சுந்த ரேஸ்வரர் காமாட்சியம்மன் (சிவன் கோவில்) அறங்காவலர் குழு தலைவராக, முல்லை பெரியாறு வைகை ஒருபோக பாசன விவசாயிகள் சங்க தலைவர் முருகன் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். மேலும் குழு உறுப்பினர்களாக காந்திஜி பூங்காவை சேர்ந்த ஸ்தபதி மகேந்திரன், மேலூர் மலம்பட்டி விஜயபாண்டியன், மற்றும் முன்னாள் சொக்கம்பட்டி கவுன்சிலர் கலையரசி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் கோவிலில் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மேலூர் நகராட்சி தலைவர் முகமது யாசின், வல்லாள பட்டி பேரூ ராட்சி தலைவர் குமரன், பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், சுபைதா அப்பாஸ், மேலும் மேலும் யூனியன் துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் நேரு பாண்டி, ராஜராஜன், உதவி ஆணையர் செல்வி, செயல் அலுவலர் வாணி மகேஸ்வரி, அர்ச்சகர் தட்சிணா மூர்த்தி, பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com