search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "6 கட்ட தேர்தல்"

    இத்தாலியில் உள்ள நைட் கிளப்பில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. #ItalyStampede
    ரோம்:

    இத்தாலியில் அட்ரியாட்டிக் கடற்கரை நகரமான அங்கோனா அருகே உள்ள புகழ்பெற்ற ஒரு நைட் கிளப்பில் நேற்று இரவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ராப் பாடகர் சிபேரா எபஸ்தாவின் கச்சேரியைக் கண்டுகளிப்பதற்காக ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர்.

    அப்போது, திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. முண்டியடித்துக்கொண்டு கூட்டத்தில் இருந்து வெளியேற சிலர் முயற்சித்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு சிலர் கீழே விழுந்தனர். அவர்களை கவனிக்காமல் மற்றவர்களும் எழுந்து அரங்கை விட்டு வெளியேறினர். இதனால் கூட்டத்தில் அடிபட்டும் மிதிபட்டும் பலர் காயமடைந்தனர்.



    நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    கச்சேரி நடைபெற்றபோது கூட்டத்தில் இருந்த யாரோ ஒரு நபர் திடீரென மிளகு ஸ்பிரேயை தெளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பயந்துபோன மக்கள் அவசர அவசரமாக வெளியேறியதால் நெரிசல் ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. #ItalyStampede
    அண்ணாசாலையில் ரோந்து பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய 6 பேரை போலீசார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னை:

    சென்னை அண்ணா சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி அப்பகுதியில் நள்ளிரவில் திறந்திருந்த ஓட்டலை மூடுமாறு கூறியுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் அவரை தாக்கினர். இது தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து ராசுக்குட்டி, சசிகுமார், திருநாவுக்கரசு, சுனில், அப்துல் ரகுமான், கிருஷ்ண மூர்த்தி ஆகிய 6 பேரை கைது செய்தனர். #tamilnews
    6 அணிகள் பங்கேற்கும் புரோ கைப்பந்து லீக் போட்டி கொச்சி, சென்னையில் நடைபெறுகிறது. #ProVolleyball
    மும்பை:

    இந்திய கைப்பந்து சம்மேளனம் மற்றும் பேஸ்லைன் இந்தியா நிறுவனம் சார்பில் முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி அடுத்த ஆண்டு (2019) பிப்ரவரி 2-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை கொச்சி மற்றும் சென்னையில் நடக்கிறது.

    இந்த போட்டியில் ஆமதாபாத் டிபன்டர்ஸ், கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை ஸ்பார்டன்ஸ், யு மும்பா வாலி, ஐதராபாத் பிளாக் ஹாக்ஸ், கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. போட்டியில் பங்கேற்கும் அணிகள் உள்ளிட்ட விவரங்களை இந்திய கைப்பந்து சம்மேளனம் மும்பையில் நேற்று அறிவித்தது. போட்டி மற்றும் அணிகளின் லோகேவும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விழாவில் இந்திய கைப்பந்து சம்மேளன தலைவர் வாசுதேவன், பொதுச்செயலாளர் ராம்அவ்தார்சிங் ஜாக்கர், புரோ கைப்பந்து லீக் தலைமை செயல் அதிகாரி ஜோய் பட்டாச்சார்யா மற்றும் அணியின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    போட்டியில் பங்கேற்கும் 6 அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோதும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். 12 லீக் ஆட்டங்கள் கொச்சியில் உள்ள ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கத்திலும், அரைஇறுதி, இறுதிப்போட்டி உள்பட 6 ஆட்டங்கள் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கிலும் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் டெல்லியில் அடுத்த மாதம் 13, 14-ந் தேதிகளில் நடக்கிறது.

    ஒவ்வொரு அணியிலும் 2 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 12 பேர் இடம் பெறுவார்கள். இந்த போட்டியில் ‘சாம்பியன்’ பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.50 லட்சமும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.20 லட்சமும், அரைஇறுதியில் தோல்வி காணும் அணிகளுக்கு தலா ரூ.10 லட்சமும் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  #ProVolleyball

    உலக குத்துச்சண்டை போட்டியில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் சாதனைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். #MaryKom #WorldBoxing #Stalin
    சென்னை:

    உலக பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற இறுதி போட்டியில் இந்தியாவின் மேரிகோம், உக்ரைனின் ஹன்னா ஒகோட்டோவை எதிர் கொண்டார். இதில் அபாரமாக ஆடிய மேரி கோம் 5-0 என்ற கணக்கில் உக்ரைன் வீரர் ஹன்னா ஒகோட்டோவை வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

    இதேபோல், 57 கிலோ எடைப்பிரிவுக்கான் இறுதிப் போட்டியில் மோதிய இந்திய வீராங்கனை சோனியா சாஹல் வெள்ளிப் பதக்கம் வென்றார்.



    இந்நிலையில், உலக குத்துச்சண்டை போட்டியில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் சாதனைக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற மேரி கோமுக்கு வாழ்த்துக்கள். உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 6-வது முறையாக தங்கம் வென்று இந்திய பெண்களுக்கு ஓர் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளார் மேரி கோம் என பதிவிட்டுள்ளார். #MaryKom #WorldBoxing #Stalin
    உலக குத்துச்சண்டையில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் சாதனைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி, மேற்கு வங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். #MaryKom #WorldBoxing #RamnathKovind #PMModi #MamataBanerjee
    புதுடெல்லி:

    உலக பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற இறுதி போட்டியில் இந்தியாவின் மேரிகோம், உக்ரைனின் ஹன்னா ஒகோட்டோவை எதிர் கொண்டார். இதில் அபாரமாக ஆடிய மேரி கோம் 5-0 என்ற கணக்கில் உக்ரைன் வீரர் ஹன்னா ஒகோட்டோவை வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

    இந்நிலையில், உலக குத்துச்சண்டை போட்டியில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் சாதனைக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி, மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டியில் மேரி கோம் ஆறாவது முறையாக தங்கம் வென்று சாதனை புரிந்ததற்கு பாராட்டுக்கள். இந்த சாதனை மூலம் இந்திய சிறுமிகளுக்கு நீங்கள் முன்மாதிரியாக விளங்குகிறீர்கள் என பதிவிட்டுள்ளார்.



    இதேபோல், பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 6-வது முறையாக தங்கம் வென்ற மேரி கோமுக்கு வாழ்த்துக்கள். அவர் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடி தந்துள்ளார். உலக அரங்கில் அவர் ஆற்றியுள்ள சாதனைக்கு பாராட்டுக்கள் என பதிவிட்டுள்ளார்.
     
    மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் 6 வது முறையாக பட்டம் வென்ற உங்களால் நாங்கள் பெருமை அடைகிறோம் என பதிவிட்டுள்ளார். #MaryKom #WorldBoxing #RamnathKovind #PMModi #MamataBanerjee
    பெண்கள் உலக சாம்பியன்ஷிப்ஸ் குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை மேரி கோம் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று 6வது தங்கப் பதக்கத்தை வென்றார். #MaryKom #WorldBoxing
    புதுடெல்லி:

    டெல்லியில் நடைபெற்று வரும் உலக பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் பல்வேறு பிரிவுகளில் இன்று இறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
     
    அதில் 48 கிலோ எடைப்பிரிவுக்காக நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவின் மேரிகோம், உக்ரைனின் ஹன்னா ஒகோட்டோவை எதிர் கொண்டார்.

    இந்த போட்டியில் அபாரமாக ஆடிய மேரி கோம் 5-0 என்ற கணக்கில் உக்ரைன் வீரர் ஹன்னா ஒகோட்டோவை வீழ்த்தினார். இதன்மூலம் உலக குத்துச்சண்டை போட்டியில் 6-வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார்.  #MaryKom #WorldBoxing
    மத்திய பிரதேசத்தில் பள்ளி வேன் மீது பேருந்து மோதிய விபத்தில் டிரைவர், பள்ளி மாணவர்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Accident
    போபால்:

    மத்திய பிரதேச மாநிலம் சட்னா மாவட்டம் பீர்சிங்கபூர் பகுதியில் பள்ளி குழந்தைகளை ஏற்றி கொண்டு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த பேருந்தும், பள்ளி வேனும் வேகமாக மோதியது.

    இந்த விபத்தில் வேனில் பயணித்த  6 மாணவர்கள் மற்றும் வேன் ஓட்டுனர் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.



    தகவலறிந்து மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Accident
    மகாராஷ்டிர மாநிலத்தில் ராணுவத்திற்கு சொந்தமான ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். #MaharashtraExplosion #PulgaonOrdanceDepot
    வார்தா:

    மகாராஷ்டிர மாநிலம் வார்தா மாவட்டம் புல்கான் நகரில் இந்திய  ராணுவத்திற்கு சொந்தமான ஆயுதக் கிடங்கு உள்ளது. இங்கு ஏராளமான ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், வெடிபொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதன் அருகே உள்ள காலி மைதானத்தில், பயன்படுத்தப்படாத காலாவதியான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களை செயலிழக்கச் செய்யும் பணி நடைபெறுகிறது. இந்த பணியை வெடிமருந்து தொழிற்சாலை மேற்கொண்டு வருகிறது.

    இன்று காலையில் அந்த பகுதிக்கு கொண்டு வரப்பட்ட வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்களை வாகனத்தில் இருந்து இறக்கும்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. வெடிமருந்துகள் வெடித்துச் சிதறியதில், வெடிமருந்து தொழிற்சாலை ஊழியர், இரண்டு கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர். 10 பேர் பலத்த காயமடைந்தனர்.



    இதேபோல் புல்கான் ஆயுதக் கிடங்கில் கடந்த 2016ம் ஆண்டு ஏற்பட்ட வெடிவிபத்தில் 16 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. #MaharashtraExplosion #PulgaonOrdanceDepot

    கர்நாடகத்துக்கு சுற்றுலா வந்த பேருந்தும், லாரியும் நேருக்குநேர் மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக பலியாகினர். #Accident
    பெங்களூரு:

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து கர்நாடகத்துக்கு ஒரு பேருந்து சுற்றுலா வந்தது. அதில் 15க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

    ஹூப்ளி அருகே அன்னிகிரி தாலுகா பத்ராபூர் கிராமத்தின் தேசிய நெடுஞ்சாலை 63ல் பேருந்து வந்தபோது எதிரே வந்த லாரி மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 6 பேர் படுகாயம் அடைந்தனர்.



    தகவலறிந்து அங்கு சென்ற மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    சுற்றுலா சென்ற இடத்தில் பேருந்து விபத்தில் 6 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Accident 
    6 வழிசாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். Publicprotest

    ஊத்துக்கோட்டை:

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டு சாலையிலிருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை ரூ. 3200 கோடி செலவில் 136 கிலோ மீட்டர் தூரத்துக்கு 6 வழி சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இந்த சாலை கண்ணிகைப் பேர், பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், சென்னங்காரணை, பருத்திமெனிகுப்பம், காக்க வாக்கம், பேரண்டூர், பனபாக்கம், மாம்பாக்கம், போந்தவாக்கம், சீதஞ்சேரி, வெங்களத்தூர், பிச்சாட்டூர் வழியாக சித்தூர் வரை அமைய உள்ளது. சாலை அமைக்க நிலம் அளவிடும் பணிகள் தொடங்கபட்டுள்ளன.

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலவாக்கம், சென்னங்காரணை, பருத்தி மேனி குப்பம், காக்கவாக்கம், பேரண்டூர், பனபாக்கம், மாம்பாக்கம் உட்பட 10 கிராமங்கள் வழியாக சாலை அமைத்தால் ஆயிரக்கனக்கான ஏக்கர் நிலபரப்பில் விவசாய விளை நிலங்கள், நூற்றுக்கனக்கான வீடுகள் பாதிக்கபடும் சூழ்நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாற்று பாதையில் சாலை அமைக்க கோரி 10 கிராமங்களை சேர்ந்தவர்கள் கடந்த ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

    என்றாலும், அதிகாரிகள் நிலம் அளவிடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனை கண்டித்தும், மாற்று பாதையில் சாலை அமைக்க கோரியும் 10 கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் 3 லாரிகளில் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் சென்றனர். அங்கு தர்ணா போராட்த்தில் ஈடுபட்டனர். மாற்று பாதையில் சாலையை அமைக்காவிட்டால் தற்கொலை செய்த கொள்வோம் என்று கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    பின்னர் கோரிக்கை மனுவை மாவட்ட வருவாய் அலுவலர் கருப்பய்யாவிடம் வழங்கினர். தற்கொலை செய்வோம் என்று 10 கிராம பொது மக்கள் கோ‌ஷங்கள் எழுப்பியதால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. Publicprotest

    உத்தர பிரதேசத்தில் சாலையில் மூடுபனி கண்ணை மறைக்கும் அளவுக்கு படர்ந்திருந்ததால் ஏற்பட்ட வாகன விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். #UPAccident #DenseFog
    சம்பால்:

    வடமாநிலங்களில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், கடுமையான மூடுபனியும் அடர்ந்து காணப்படுகிறது. இதனால் காலை வேளைகளில் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் கூட கண்ணுக்கு தெரிவதில்லை. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்களை இயக்குகின்றனர்.



    இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் சம்பால் மாவட்டத்தில் மூடுபனி படர்ந்த சாலையில் சென்றுகொண்டிருந்த ஒரு பேருந்து மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. குன்னார் பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்தில், 6 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். #UPAccident #DenseFog
    சென்னை தி.நகரில் பட்டாசு விபத்தில் சிக்கிய 6 வயது சிறுமிக்கு அ.தி.மு.க. சார்பில் தொடங்கப்பட்ட ரத்தத்தின் ரத்தமே செயலி மூலம் சரியான நேரத்தில் ரத்தம் கிடைத்தது.
    சென்னை:

    சென்னை தி.நகரை சேர்ந்தவர் பூங்கோதை. இவரது மகள் லாவண்யா (6). தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடி வைத்து விட்டு ஓடிவரும் போது மோட்டார் சைக்கிள் மோதி தலையில் பலத்த காயம் அடைந்தாள். தலையில் இருந்து ரத்தம் வெளியேறிய நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ரத்தம் தேவைப்பட்டது. உடனடியாக அ.தி.மு.க. சார்பில் தொடங்கப்பட்ட ரத்தத்தின் ரத்தமே செயலி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதில் பதிவு செய்திருந்த ரத்ததான தன்னார்வலர்கள் மருத்துவமனைக்கு வந்து ரத்தம் வழங்கினார்கள். சரியான நேரத்தில் ரத்தம் கிடைத்ததால் சிறுமிக்கு ஏற்றப்பட்டது. இதற்காக சிறுமியின் தாய் பூங்கோதை முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் நன்றியை தெரிவித்தார்.
    ×