என் மலர்

  செய்திகள்

  உலக குத்துச்சண்டையில் 6 முறை சாம்பியன் - மேரி கோம் சாதனைக்கு முக ஸ்டாலின் வாழ்த்து
  X

  உலக குத்துச்சண்டையில் 6 முறை சாம்பியன் - மேரி கோம் சாதனைக்கு முக ஸ்டாலின் வாழ்த்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உலக குத்துச்சண்டை போட்டியில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் சாதனைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். #MaryKom #WorldBoxing #Stalin
  சென்னை:

  உலக பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற இறுதி போட்டியில் இந்தியாவின் மேரிகோம், உக்ரைனின் ஹன்னா ஒகோட்டோவை எதிர் கொண்டார். இதில் அபாரமாக ஆடிய மேரி கோம் 5-0 என்ற கணக்கில் உக்ரைன் வீரர் ஹன்னா ஒகோட்டோவை வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

  இதேபோல், 57 கிலோ எடைப்பிரிவுக்கான் இறுதிப் போட்டியில் மோதிய இந்திய வீராங்கனை சோனியா சாஹல் வெள்ளிப் பதக்கம் வென்றார்.  இந்நிலையில், உலக குத்துச்சண்டை போட்டியில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம் சாதனைக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற மேரி கோமுக்கு வாழ்த்துக்கள். உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 6-வது முறையாக தங்கம் வென்று இந்திய பெண்களுக்கு ஓர் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளார் மேரி கோம் என பதிவிட்டுள்ளார். #MaryKom #WorldBoxing #Stalin
  Next Story
  ×