என் மலர்
நீங்கள் தேடியது "bus collision"
- பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி தொழிலாளி பலியானார்.
- பண்ருட்டி வழியாக சென்னை செல்லும் அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த வேகாக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 48). கூலித் தொழிலாளியான இவர் மோட்டார் சைக்கிள் பண்ருட்டிக்கு வந்தார். பண்ருட்டியில் வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்பினார். சென்னை -கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை கொஞ்சிக்குப்பம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது கும்பகோணத்தில் இருந்து பண்ருட்டி வழியாக சென்னை செல்லும் அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த சந்தோஷ்குமார் பண்ருட்டி அரசு மருத்துவமனையி்ல் சேர்க்கபட்டு, பின் மேல்சிகிச்சைசக்கு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரங்குப்பயன் காவிலிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார்.
- அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
பு.புளியம்பட்டி:
புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள ஓலப்பாளைம் கிராமத்தை சேர்ந்தவர் ரங்குப்பயன் என்கிற ரங்கசாமி (வயது 50). கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்நிலையில் ரங்குப்பயன் சம்பவத்தன்று இரவு காவிலிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவல் அறிந்து அங்கு வந்த புஞ்சைபுளியம்பட்டி போலீசார் ரங்குப்பயன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதி பழக்கடை உரிமையாளர் பலியானார்.
- பின்னால் சென்ற தனியார் பஸ் திடீரென்று எதிர்பாராமல் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
கடலூர்:
கடலூர் சாவடி சேர்ந்த சரவணன் (வயது 50). பழக்கடை கடை நடத்தி வந்தார். இன்று காலை கடலூர் இருந்து புதுச்சேரிக்கு பழங்கள் வாங்குவதற்கு மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தார். அப்போது கடலூர் அருகே சின்ன கங்கணாங் குப்பம் என்ற பகுதி யில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் சென்ற தனியார் பஸ் திடீரென்று எதிர்பாராமல் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றனர். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
- திருவெண்ணைநல்லூர் அருகே தனியார் பள்ளி பஸ் மோதி முதியவர் பலியானார்.
- இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே மழவராயனூர் ஆற்றுத் தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 70). இவர் இன்று காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக தனது வீட்டில் இருந்து சின்ன செவலை- மழவராயனூர் சாலையின் குறுக்கே கடக்க முற்பட்டார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பள்ளி பஸ் எதிர்பாராத விதமாக இவர் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரங்கசாமி இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மங்கலம்பேட்டை அருகே பஸ் மோதி முதியவர் பலியானார்.
- அங்குள்ள துணை மின் நிலையம் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள கோ.பூவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பராயன். இவரது மகன் சத்திய நாராயணன் (வயது 50). கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. நேற்று இரவு, கோ.பூவனூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து சத்திய நாராயணன் தனது வீட்டிற்கு செல்வதற்காக அங்குள்ள துணை மின் நிலையம் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, சென்னை யில் இருந்து விருத்தாச்ச லம் நோக்கி வந்த அரசுப் பஸ், சத்திய நாராயணன் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்துப்போனார்.
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மருங்கூர் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் (50) என்பவர் அந்த பஸ்சை ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த மங்கலம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சத்தியநாராயணனின் உடலை மீட்டு, பிரேத பரி சோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரையில் மோட்டார் சைக்கிள்- பஸ் மோதியதில் வாலிபர் படுகாயம் அடைந்தனர்.
- இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பஸ்சின் முன்பகுதி சேதமானது.
மதுரை
மதுரை எல்லீஸ் நகரில் செயல்படும் ஒரு தனியார் நிறுவனத்தில் மதுரையைச் சேர்ந்த வேல்முருகன் (வயது 24) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார் .அவர் இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்டு சென்றார்.
அவர் மோட்டார் சைக்கிளில் பெரியார் பஸ் நிலையம் வழியாக எல்லீஸ் நகர் மேம்பாலத்தில் சென்றபோது எதிரே வந்த அரசு பஸ் நேருக்கு நேர் மோதியது.இதில் படுகாயம் அடைந்த வேல்முருகனை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பஸ்சின் முன்பகுதி சேதமானது.
- ராஜபாளையம் அருகே ஆம்னி பஸ் மோதி சூப்பர் மார்க்கெட் ஊழியர் பலியானார்.
- ரைவர் ராமர் என்பவரிடம் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த சுந்தரராஜபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 37). இவர் ராஜபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு 8.30 மணி அளவில் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் தென்காசி ரோட்டில் சென்றார்.
அப்போது தென்காசியில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த ஆம்னி பஸ் ஆனந்தராஜ் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்து விட்டார். பலியான ஆனந்தராஜிக்கு திருமணமாகி மேரி ஷகிலா என்ற மனைவி உள்ளார்.
இந்த விபத்து குறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மன்னவன் வழக்குப்பதிவு செய்து மோதிய ஆம்னி பஸ்சை ஓட்டி வந்த தென்காசியை சேர்ந்த டிரைவர் ராமர் என்பவரிடம் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.
- காயமடைந்த அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
- சிகிச்சை பலனின்றி இஸ்மாயில் இறந்தார்.
தாராபுரம் :
தாராபுரம் வட தாரை காமராஜபுரம் பகுதியில் டீக்கடை நடத்தி வந்தவர் இஸ்மாயில்(வயது61). இவர் நேற்று மாலை பஸ் நிலையம் வந்து விட்டு திருப்பி தனது டீ கடைக்கு செல்வதற்காக தாராபுரம் பூளவாடி பிரிவு அருகே சென்றார்.
அப்போது தனியார் கல்லூரி பேருந்து இஸ்மாயில் மீது மோதியது .இதில் காயமடைந்த அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இஸ்மாயில் இறந்தார். இது குறித்து தாராபுரம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் மகளிர் கல்லூரி பஸ் கார் மீது பயங்கரமாக மோதியது.
- இதில் சென்னை என்ஜினீயர் பலி- மனைவி படுகாயம்.
வாழப்பாடி:
சென்னை தியாகராயர் நகரை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 50). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவரும், இவரது மனைவி சுபஸ்ரீயும் கோயம்புத்தூருக்கு சென்று விட்டு, இன்று அதிகாலை சென்னை நோக்கி சேலம் வழியாக காரில் சென்று கொண்டிருந்தனர்.
சேலம் -சென்னை தேசிய நெடுஞ்சாலை வாழப்பாடி புறவழிச்சாலையில் உள்ள புதுப்பாளையம் ஆத்துமேடு மேம்பாலத்தில் சென்றபோது, ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் மகளிர் கல்லூரி பஸ் கார் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் சாப்ட்வேர் என்ஜினீயர் ராஜேஷ்குமார் படுகாயம் அடைந்து காருக்குள்ளேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவரது மனைவி சுபஸ்ரீ பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி க்கொண்டிருந்தார்.
உடல் மீட்பு
விபத்து காலையில் நடந்ததை அடுத்து சம்பவ இடத்தில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கூடினர். பின்னர் போலீசார் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து படுகாயம் அடைந்த சுபஸ்ரீயை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு போலீசார், காரில் உள்ள இடிபாடுகளை அகற்றி ராஜேஷ்குமார் உடலை மீட்டனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்த விபத்தால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சேலம்- சென்னை தேசிய
நெடுஞ்சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீசார், விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்ப டுத்தி, போக்குவரத்தை சீரமைத்தனர்.
விபத்துக்குள்ளான பஸ் சேலம் அம்மாப்பேட்டையில் செயல்படும் ஒரு தனியார் மகளிர் கல்லூரிக்கு சொந்தமானதாகும். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெண்கள், சிறுவர்கள் உள்பட 17 பேர் படுகாயம்
- ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
ஆரணி, ஜூலை.18-
திருவண்ணா மலை மாவட்டம் ஆரணி அருகே அப்ப தாங்கல் கூட்ரோடு அருகில் ஆரணியி லிருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பஸ்கள் சென்னை யிலிருந்து போளுர் நோக்கி வந்த அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துகு ள்ளானது.
இதில் பயணம் செய்த பயணிகள் சிவசங்கரி, அம்பிகா, லட்சுமி, விஜயா, உள்ளிட்ட 5 பெண்களும் முரளிதரன், பாரதிராஜா, ராஜா, கோபி கிருஷ்ணன் உள்ளிட்ட 7 ஆண்களுக்கும் மற்றும் 3சிறுவர்கள் மற்றும் அரசு பஸ் டிரைவர்கள் ராஜேந்திரன், பாஸ்கர் கண்டக்டர்கள் ஆனந்தன், ரஞ்சித் உள்ளிட்ட 17 பேர் படுகாயமடைந்தனர்.
போலீசார் மீட்டு 108 ஆம்பூலன்ஸ் மூலம் ஆரணி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து 17பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
