பஸ் மோதி தொழிலாளி பலி

ரங்குப்பயன் காவிலிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார்.அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
பஸ் மோதி தொழிலாளி பலி
Published on

பு.புளியம்பட்டி:

புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள ஓலப்பாளைம் கிராமத்தை சேர்ந்தவர் ரங்குப்பயன் என்கிற ரங்கசாமி (வயது 50). கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில் ரங்குப்பயன் சம்பவத்தன்று இரவு காவிலிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தகவல் அறிந்து அங்கு வந்த புஞ்சைபுளியம்பட்டி போலீசார் ரங்குப்பயன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com