search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில்  தடுப்பு கட்டையில் சொகுசு பஸ் மோதி கவிழ்ந்தது: 5 பேர்  படுகாயம்
    X

    கள்ளக்குறிச்சி புறவழிச் சாலையில் சாலையோர தடுப்பில் மோதி சொகுசு பஸ் கவிழ்ந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

    கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் தடுப்பு கட்டையில் சொகுசு பஸ் மோதி கவிழ்ந்தது: 5 பேர் படுகாயம்

    • நீலமங்கலம் ஆற்று பாலத்தில் வந்தபோது டிரைவரின் கட்டுபாட்டை இழந்த சொகுசு பஸ் சாலையோர தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்து.
    • இந்த விபத்தால் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 போக்குவரத்து பாதிக்கபட்டது.

    கள்ளக்குறிச்சி:

    சென்னையில் இருந்து தனியார் சொகுசு பஸ் 29 பயணிகளை ஏற்ற க்கொண்டு கோயம்புத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சை தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் (வயது 26) டிரைவர் ஓட்டிவந்தார். அப்போது கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் நீலமங்கலம் ஆற்று பாலத்தில் வந்தபோது டிரைவரின் கட்டுபாட்டை இழந்த சொகுசு பஸ் சாலையோர தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்து.

    இதில்பஸ்சில் பயணம் செய்த 5 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கள்ள க்குறிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 போக்குவரத்து பாதிக்கபட்டது. இதனால் மாற்று வழியில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டது. தொ டர்ந்து புறவழிச்சாலையில் கவிழ்ந்து கிடந்த தனியார் சொகுசு பஸ்சை பொக்லின் உதவியுடன் போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×