மங்கலம்பேட்டை அருகே பஸ் மோதி முதியவர் பலி

மங்கலம்பேட்டை அருகே பஸ் மோதி முதியவர் பலியானார்.அங்குள்ள துணை மின் நிலையம் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தார்.
மங்கலம்பேட்டை அருகே பஸ் மோதி முதியவர் பலி
Published on

கடலூர்: 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள கோ.பூவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பராயன். இவரது மகன் சத்திய நாராயணன் (வயது 50). கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. நேற்று இரவு, கோ.பூவனூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து சத்திய நாராயணன் தனது வீட்டிற்கு செல்வதற்காக அங்குள்ள துணை மின் நிலையம் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, சென்னை யில் இருந்து விருத்தாச்ச லம் நோக்கி வந்த அரசுப் பஸ், சத்திய நாராயணன் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்துப்போனார்.

ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மருங்கூர் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் (50) என்பவர் அந்த பஸ்சை ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த மங்கலம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சத்தியநாராயணனின் உடலை மீட்டு, பிரேத பரி சோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com