மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதி பழக்கடை உரிமையாளர் பலி

மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதி பழக்கடை உரிமையாளர் பலியானார்.பின்னால் சென்ற தனியார் பஸ் திடீரென்று எதிர்பாராமல் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதி பழக்கடை உரிமையாளர் பலி
Published on

கடலூர்:

கடலூர் சாவடி சேர்ந்த சரவணன் (வயது 50). பழக்கடை கடை நடத்தி வந்தார். இன்று காலை கடலூர் இருந்து புதுச்சேரிக்கு பழங்கள் வாங்குவதற்கு மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தார். அப்போது கடலூர் அருகே சின்ன கங்கணாங் குப்பம் என்ற பகுதி யில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் சென்ற தனியார் பஸ் திடீரென்று எதிர்பாராமல் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றனர். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com