மோட்டார் சைக்கிள்- பஸ் மோதியதில் வாலிபர் படுகாயம்

மதுரையில் மோட்டார் சைக்கிள்- பஸ் மோதியதில் வாலிபர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பஸ்சின் முன்பகுதி சேதமானது.
மோட்டார் சைக்கிள்- பஸ் மோதியதில் வாலிபர் படுகாயம்
Published on

மதுரை

மதுரை எல்லீஸ் நகரில் செயல்படும் ஒரு தனியார் நிறுவனத்தில் மதுரையைச் சேர்ந்த வேல்முருகன் (வயது 24) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார் .அவர் இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்டு சென்றார்.

அவர் மோட்டார் சைக்கிளில் பெரியார் பஸ் நிலையம் வழியாக எல்லீஸ் நகர் மேம்பாலத்தில் சென்றபோது எதிரே வந்த அரசு பஸ் நேருக்கு நேர் மோதியது.இதில் படுகாயம் அடைந்த வேல்முருகனை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பஸ்சின் முன்பகுதி சேதமானது.

X

Maalai Malar
www.maalaimalar.com