திருவெண்ணைநல்லூர் அருகே தனியார் பள்ளி பஸ் மோதி முதியவர் சாவு

திருவெண்ணைநல்லூர் அருகே தனியார் பள்ளி பஸ் மோதி முதியவர் பலியானார்.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவெண்ணைநல்லூர் அருகே தனியார் பள்ளி பஸ் மோதி முதியவர் சாவு
Published on

விழுப்புரம்:

திருவெண்ணைநல்லூர் அருகே மழவராயனூர் ஆற்றுத் தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது 70). இவர் இன்று காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக தனது வீட்டில் இருந்து சின்ன செவலை- மழவராயனூர் சாலையின் குறுக்கே கடக்க முற்பட்டார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பள்ளி பஸ் எதிர்பாராத விதமாக இவர் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே ரங்கசாமி இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com