search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Worker killed in"

    • தள்ளு வண்டி மீது பழனிசாமியின் மோட்டார் சைக்கிள் மோதியது.
    • சிகிச்சை பலனின்றி பழனிசாமி இறந்தார்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த சின்னமடத்துப்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 64). இவர் பெருந்துறை சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியக வேலை செய்து வந்தார்.

    சம்பவத்தன்று வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். மடத்துப்பாளையம் பிரிவு அருகே சென்றபோது அங்கு ரோட்டை கடக்க முயன்ற தள்ளு வண்டி மீது எதிர்பாராத விதமாக பழனிசாமியின் மோட்டார் சைக்கிள் மோதியது.

    இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து பழனிசாமி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பழனிசாமி இறந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பழனிசாமி மீது மோதி விட்டது.
    • இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பழனிசாமி உயிரிழந்தார்.

    பெருந்துறை:

    திருப்பூர் மாவட்டம் பல்லகவுண்டன்பாளையம் ஓடக்காட்டைச் சேர்ந்த கருப்பன் மகன் பழனிசாமி (வயது 50). இவர் மரம் வெட்டும் கூலி தொழிலாளி.

    இவர் கடந்த 27-ம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் பெருந்துறைக்கு வந்து விட்டு ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவர் பெருந்துறை, குன்னத்தூர் ரோட்டில் சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக பழனிசாமி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் பலத்த காயமடைந்த பழனிசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பழனிசாமி உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


    • கந்தசாமி மொபட்டில் ரோட்டை கடந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது
    • அப்போது ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே கந்தசாமி பரிதாபமாக இறந்தார்

    கோபி

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள புதுக்கரை புதூர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (50). கூலி தொழிலாளி. இவர் நேற்று இரவு தனது மகனை அழைத்து வருவதற்காக மொபட்டில் புதுக்கரை புதூரில் இருந்து பொலவக்காளி பாளையம் பகுதியில் சென்றார்.

    அப்போது ரோட்டை கடந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் படுகாயம் அடைந்த கந்தசாமியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

    அப்போது ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே கந்தசாமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • இதில் பலத்த அடிபட்ட சுப்ரமணியத்தை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள சிலம்பட்டி, களத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியம் (வயது 42). தொழிலாளி.

    இவர் சம்பவத்தன்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் பெருந்துறை செல்வதற்காக பெத்தாம்பாளையம் ரோடு, கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலை ரோட்டை கடப்பதற்காக நின்று கொண்டிருந்தார்.

    அப்பொழுது சேலத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற ஒரு கார் எதிர்பாராத விதமாக இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பலத்த அடிபட்ட சுப்ரமணியத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சுப்ரமணியம் இறந்து விட்டதாக கூறினர்.

    இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ரங்குப்பயன் காவிலிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார்.
    • அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    பு.புளியம்பட்டி:

    புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள ஓலப்பாளைம் கிராமத்தை சேர்ந்தவர் ரங்குப்பயன் என்கிற ரங்கசாமி (வயது 50). கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்நிலையில் ரங்குப்பயன் சம்பவத்தன்று இரவு காவிலிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    தகவல் அறிந்து அங்கு வந்த புஞ்சைபுளியம்பட்டி போலீசார் ரங்குப்பயன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

    ×