கார் மோதி தொழிலாளி பலி

கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதில் பலத்த அடிபட்ட சுப்ரமணியத்தை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
கார் மோதி தொழிலாளி பலி
Published on

பெருந்துறை:

பெருந்துறையை அடுத்துள்ள சிலம்பட்டி, களத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியம் (வயது 42). தொழிலாளி.

இவர் சம்பவத்தன்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் பெருந்துறை செல்வதற்காக பெத்தாம்பாளையம் ரோடு, கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலை ரோட்டை கடப்பதற்காக நின்று கொண்டிருந்தார்.

அப்பொழுது சேலத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற ஒரு கார் எதிர்பாராத விதமாக இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் பலத்த அடிபட்ட சுப்ரமணியத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சுப்ரமணியம் இறந்து விட்டதாக கூறினர்.

இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com