சாலை விபத்தில் தொழிலாளி பலி

தள்ளு வண்டி மீது பழனிசாமியின் மோட்டார் சைக்கிள் மோதியது. சிகிச்சை பலனின்றி பழனிசாமி இறந்தார்.
சாலை விபத்தில் தொழிலாளி பலி
Published on

பெருந்துறை:

பெருந்துறை அடுத்த சின்னமடத்துப்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 64). இவர் பெருந்துறை சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியக வேலை செய்து வந்தார்.

சம்பவத்தன்று வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். மடத்துப்பாளையம் பிரிவு அருகே சென்றபோது அங்கு ரோட்டை கடக்க முயன்ற தள்ளு வண்டி மீது எதிர்பாராத விதமாக பழனிசாமியின் மோட்டார் சைக்கிள் மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து பழனிசாமி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பழனிசாமி இறந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com