search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Unidentified vehicle"

    • அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராத விதமாக முருகேசன் மீது மோதியது.
    • மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாவட்டம் எழு மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் முரு கேசன் (வயது 52). இவரது மனைவி மல்லிகா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று முருகேசன் தனது இரு சக்கர வாகனத் தில் ஈரோடு-முத்தூர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

    அவர் மண்கரடு அருகே சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரி யாத வாகனம் எதிர்பாராத விதமாக முருகேசன் மீது மோதியது.

    இதில் முருகேசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அவரை அங்கிருந்தவர்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சை க்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோ தித்த மருத்துவர்கள் முருகேசன் வரும் வழியிலேயே இருந்து விட்டதாக கூறினர். இதையடுத்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

    • கந்தசாமி மொபட்டில் ரோட்டை கடந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது
    • அப்போது ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே கந்தசாமி பரிதாபமாக இறந்தார்

    கோபி

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள புதுக்கரை புதூர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (50). கூலி தொழிலாளி. இவர் நேற்று இரவு தனது மகனை அழைத்து வருவதற்காக மொபட்டில் புதுக்கரை புதூரில் இருந்து பொலவக்காளி பாளையம் பகுதியில் சென்றார்.

    அப்போது ரோட்டை கடந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் படுகாயம் அடைந்த கந்தசாமியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

    அப்போது ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே கந்தசாமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அடையாளம் தெரியாத வந்த வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • இதில் சம்பத் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அடுத்து நால்ரோடு டானா புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் (42). இவர் பால் சொசைட்டி நடத்தி வருகிறார்.

    இவர் பால் எடுத்து வருவதற்காக நால் ரோட்டில் இருந்து செல்லப்பம்பாளையத்திற்கு கோவை ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது அந்த வழியாக அடையாளம் தெரியாத வந்த வாகனம் அவர் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் சம்பத் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்சு மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இவருக்கு சுகுணா என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.

    இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வெங்கடேசன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
    • விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா பெரிய குறுக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது22 ). இவர் சொந்த வேலை காரணமாக விழுப்புரம் சென்று விட்டு கெடிலம் எஸ்.எஸ்.வி பள்ளி வளாகம் வளைவில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி வெங்கடேசன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தகவல றிந்த திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தனி பிரிவு காவலர் மனோகர் மற்றும் போலீசார் விரைந்து சென்று வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அனுப்பி வைக்கப்பட்டு விபத்து ஏற்படுத்த வாகனத்தை தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வருகிறார்கள். 

    • பெருந்துறை, பவானி ரோடு பகுதியில் ராமாத்தாள் ரோட்டோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • அடையாளம் தெரியாத ஒரு வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    பெருந்துறை:

    பெருந்துறை, ஈரோடு ரோடு வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி ராமாத்தாள் (வயது 74). இவர் தனது பேத்தியின் வீட்டில் குடியிருந்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு 9 மணி அளவில் பெருந்துறை, பவானி ரோடு பகுதியில் ரோட்டோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத ஒரு வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட அவரை உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த ராமாத்தாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறிந்த பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • சம்பவத்தன்று மாலை ஜெயலட்சுமி சோலார் புதூர் புது பஸ் நிலையம் அருகில் சாலையை கடக்க முயன்றார்.
    • அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே ஜெயலட்சுமி உயிரிழந்தார்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே சோலார் புதூர் அடுத்த இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 40). கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு கண்ணன், காளிதாஸ் என 2 மகன்கள் உள்ளனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மாலை ஜெயலட்சுமி சோலார் புதூர் புது பஸ் நிலையம் அருகில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஜெயலட்சுமி உயிரிழந்தார்.

    இது குறித்து தகவலறிந்த ஜெயலட்சுமியின் உறவினர்கள் மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஜெயலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

    மேலும் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • துக்க நிகழ்வுக்கு சென்று திரும்பிய போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வெம்பாக்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த மாமண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 21). இவரது நண்பர் கணேசன். இவர்கள் இருவரும் பக்கத்து ஊரில் இறப்பு நிகழ்ச்சிக்கு சென்று இருந்தனர்.

    பின்னர் வீட்டுக்கு செல்வதற்காக பைக்கில் மாமண்டூரை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது காஞ்சிபுரம் வந்தவாசி சாலை அருகே வரும்போது அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் திருநாவுக்கரசு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கணேஷ் படுகாயம் அடைந்தார்.

    இதுகுறித்து விரைந்து வந்த தூசி போலீசார் வழக்கு பதிவு செய்து திருநாவுக்கரசு உடலை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அடையாளம் தெரியாத வாகனம் மோதி ரமேஷ் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தார்.
    • இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி ஒன்றியம் நஞ்சை ஊத்துக்குளி ஊராட்சிக்குட்பட்ட காந்திஜி வீதியை சேர்ந்தவர் ரமேஷ் (35). டிரைவராக பணியாற்றி வருகிறார்.

    நள்ளிரவில் நஞ்சை ஊத்துக்குளி அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான மீன் பண்ணை அருகில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ரமேஷ் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரமேஷ் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது.
    • விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்தும், இறந்த முதியவர் யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை விளங்கம் பாடி அருகே விழுப்புரம் நோக்கி முதியவர் ஒருவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். துகுறித்து தகவல் அறிந்த மயிலம் போலீசார் முதியவரின் உடலை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்தும், இறந்த முதியவர் யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×