search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "elderly woman"

    • சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக இவர் மீது கார் மோதியது.
    • அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் போது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    பல்லடம்:

    பல்லடம்அருகே உள்ள கொடுவாய் சக்தி விநாயகபுரத்தை சேர்ந்த கருப்புசாமி என்பவரது மனைவி முத்தம்மாள் (வயது 65). இவர் சம்பவத்தன்று கொடுவாய் கடைவீதிக்கு வந்துள்ளார்.

    அப்போது திருப்பூரில் இருந்து தாராபுரம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக இவர் மீது கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த முத்தம்மாளை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    ஆனால் அவர் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    • ராஜம்மாள் வீட்டின் வெளியே உள்ள காலி இடத்திற்கு சென்று தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டார்.
    • சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த சிக்கரசம்பாளையம், சூரி குட்டை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கரிய கவுண்டர். இவரது மனைவி ராஜம்மாள் (65). இவர்களுக்கு தர்மன் என்ற மகன் உள்ளார். கரிய கவுண்டருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 2 வருடமாக கரிய கவுண்டர், ராஜம்மாள் இருவரும் சிக்கரசம்பாளையம் பகுதியில் செல்வராஜ் என்பவரது தோட்டத்தில் குடியிருந்து விவசாய வேலை பார்த்து வந்தனர்.

    ஒரு வருடத்திற்கு முன்பு சொத்து தகராறில் அவரது மகன் தர்மன் தாய், தந்தையிடம் கோபித்து கொண்டு சென்று விட்டார். ஒரு வருடமாக பெற்றோரிடம் பேச்சுவார்த்தை இல்லை.

    இந்நிலையில் சம்பவத்தன்று வயதான காலத்தில் உடல்நிலை சரியில்லாமல் நாம் தனியாக வாழ்வதைவிட சாவதே மேல் என்று கரிய கவுண்டர், ராஜம்மாள் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் கணவன்-மனைவி இருவரும் தூங்க சென்று விட்டனர்.

    அதிகாலை 3 மணி அளவில் எழுந்த ராஜம்மாள் வீட்டில் இருந்த மண்எண்ணை கேனை எடுத்துக் கொண்டு வீட்டின் வெளியே உள்ள காலி இடத்திற்கு சென்று தனக்குத்தானே தீ வைத்துக்கொண்டார்.

    இதை தோட்டத்தில் வேலை செய்யும் பழனிச்சாமி என்பவர் பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார்.

    பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ராஜம்மாள் மீது எரிந்த தீயை அணைத்து அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே ராஜம்மாள் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மூதாட்டி தனது வயதை பற்றி கவலைப்படாமல் வளைந்து, நெளிந்து ஆடும் காட்சிகள் பயனர்களை ஆச்சரியபட வைக்கிறது.
    • இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் வீடியோவை இதுவரை 9 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

    சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வரும் வீடியோ ஒன்றில் வயதான மூதாட்டி ஒருவர் அசத்தலாக நடனமாடுகிறார். அவர் தனது வயதை பற்றி கவலைப்படாமல் வளைந்து, நெளிந்து ஆடும் காட்சிகள் பயனர்களை ஆச்சரியபட வைக்கிறது.

    இவ்வளவு வயதில் பலரால் சரியாக நடக்கக்கூட முடியாது. ஆனால் இந்த பாட்டி 'மோனிகா ஓ மை டார்லிங்' பாடலுக்கு அசத்தல் நடனமாடுவதை அவருடன் இருந்தவர்கள் கைதட்டி உற்சாகப்படுத்துவதை வீடியோவில் பார்க்க முடிகிறது.

    இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் இந்த வீடியோவை இதுவரை 9 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். மேலும் பாட்டியின் நடனத்தை பாராட்டி வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.

    • அக்கம்- பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
    • டாக்டர் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

    பல்லடம் :

    பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்தவர் லட்சுமி(வயது 72). இவர் அவரது மகள் கலாமணியுடன் வசித்து வந்தார். இதற்கிடையே சம்பவத்தன்று வேலைக்குச் சென்ற கலாமணி வேலை முடிந்து வீடு திரும்பிய போது, அவரது தாயார் லட்சுமி வாயில் நுரை தள்ளியபடி வீட்டிற்குள் கிடந்துள்ளார். இதனால் அலறி துடித்த அவர், அக்கம்- பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து கலாமணி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • பெருந்துறை, பவானி ரோடு பகுதியில் ராமாத்தாள் ரோட்டோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • அடையாளம் தெரியாத ஒரு வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    பெருந்துறை:

    பெருந்துறை, ஈரோடு ரோடு வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி ராமாத்தாள் (வயது 74). இவர் தனது பேத்தியின் வீட்டில் குடியிருந்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு 9 மணி அளவில் பெருந்துறை, பவானி ரோடு பகுதியில் ரோட்டோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத ஒரு வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட அவரை உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த ராமாத்தாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறிந்த பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    மூதாட்டியிடம் தங்க சங்கிலி திருடிய வழக்கில் 4 பெண்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஜெயங்கொண்டம் கோர்ட்டு நீதிபதி தீர்ப்பளித்தார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள ஆண்டிமடம் விளந்தை சாவடி தெருவை சேர்ந்தவர் ஜெயலட்சுமி(வயது 70). இவர் கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி காலை 9 மணியளவில் ஜெயங்கொண்டத்தில் உள்ள தனது மகள் வீட்டில் பேரக்குழந்தைகளை பார்ப்பதற்காக ஆண்டிமடம் நான்கு ரோட்டில் டவுன் பஸ் ஒன்றில் ஏறிவந்தார். சிறிது தூரம் வந்தபின் டிக்கெட் எடுப்பதற்காக பையை திறக்க குனிந்தபோது அவரது கழுத்தில் கிடந்த 3½ பவுன் தங்க சங்கிலி திருட்டு போயிருந்தது தெரியவந்தது. 

    உடனடியாக கண்டக்டரிடம் கூறினார். கண்டக்டர் இடையில் நிறுத்தாமல் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் உள்ள போக்குவரத்து போலீசாரிடம் தெரிவித்தார். அப்போது பஸ்சில் ஜெயலட்சுமியிடம் சந்தேகத்திற்கிடமாக இடித்து சென்ற 4 பெண்களை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். உடனடியாக ஒரு ஆட்டோவில் அந்த 4 பெண்களையும் ஏற்றி ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரணையில், அவர்கள் ஏர்வாடியை சேர்ந்த ரவி மனைவி சுப்பு(37), ராஜா மனைவிகள் ராணி(25), ரம்யா(36), சுரேஷ் மனைவி இசக்கியம்மாள்(26) ஆகியோர் என்பதும், மேலும் அவர்கள் ஜெயலட்சுமியிடம் நகையை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் தினேஷ்குமார், அறிவழகன் ஆகியோர் அவர்கள் 4 பேரையும் கைது செய்து ஜெயங்கொண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 

    இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மதிவாணன் நகையை திருடிய 4 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
    ஒட்டன்சத்திரம் அருகே வீடுபுகுந்து மூதாட்டியிடம் நகை பறித்த கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தயம் பொருளூரை சேர்ந்தவர் திருவாண்டசாமி. இவரது மனைவி பழனியம்மாள் (வயது70). வீட்டில் சமைத்துக்கொண்டு இருந்தார். அப்போது ஒருவர் முகவரி கேட்பதுபோல் பழனியம்மாளிடம் வழி கேட்டார். திடீரென கையில் இருந்த மிளகாய்பொடியை பழனியம்மாள் முகத்தில் தூவினார். கண் எரிச்சலால் பழனியம்மாள் அலறிதுடித்தார். 

    இதனைபயன்படுத்தி அந்தநபர் அவர் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடமுயன்றார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்றுகூடி திருடனை பிடித்து கள்ளிமந்தயம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அந்த நபர் குப்பாயிவலசை சேர்ந்த காளிமுத்து(52) என தெரியவந்தது.

    போலீசார் அவரை கைது செய்து வேறு ஏதேனும் கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளரா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவனியாபுரத்தில் கோவிலுக்கு சென்ற மூதாட்டியிடம் 9 பவுன் நகையை டிப்-டாப் ஆசாமிகள் பறித்து சென்றனர்.

    அவனியாபுரம்:

    அவனியாபுரம் பராசக்தி நகரைச் சேர்ந்தவர் அண்ணாமலை. ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. இவரது மனைவி கமலா (65). இவர் இன்று காலை கோவிலுக்கு நடந்து சென்றார். அப்போது 2 வாலிபர்கள் டிப்-டாப் உடை அணிந்து வந்தனர்.

    அவர்கள் கமலாவிடம் நாங்கள் போலீஸ் என்றும், தி.மு.க. தலைவர் கருணா நிதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் பதட்டம் நிலவுவதாகவும் தெரிவித்தனர்.

    மேலும் கழுத்தில் நகை அணிந்து செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்தனர். இதனை நம்பிய கமலா தனது கழுத்தில் கிடந்த நகை, வளையல்கள் என 9 பவுன் நகைகளை கழற்றி அந்த வாலிபர்களிடம் கொடுத்துள்ளார்.

    நீங்கள் முன்னால் செல்லுங்கள் நாங்கள் உங்களுக்கு பாதுகாப்பாக நகையுடன் பின்னால் வருகிறோம் என்று 2 வாலிபர்களும் கூறி உள்ளனர். இதை நம்பி கமலா சென்றார். சிறிது தூரம் சென்றதும் திரும்பி பார்த்தபோது வாலிபர்கள் மாயமாகி இருந்தனர்.

    இதுகுறித்து அவனியாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் நகைகளை அபேஸ் செய்த டிப்-டாப் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

    அபகரிக்கப்பட்ட தனது நிலத்தை மீட்டுத் தரக்கோரி 13 கிலோ மனுக்களை தலையில் சுமந்தபடி மூதாட்டி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில்நேற்று குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான ஆண்களும், பெண்களும் கையில் மனுக்களுடன் வந்திருந்தனர்.

    அப்போது விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தாலுகா கூத்துக்குடி புதுக்காலனியை சேர்ந்த மூதாட்டி குண்டுப்பிள்ளை(வயது 62) என்பவர், தனது மகன் குமாரவேலுவுடன் 13 கிலோ எடை கொண்ட கோரிக்கை மனுக்களை தலையில் சுமந்தபடி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

    பின்னர் அவர்கள் மனு நகல்களின் மூட்டையையும், புதிதாக கொடுக்க இருந்த மனுவையும் கலெக்டர் தண்டபாணியிடம் கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அவரிடம் விசாரித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுகா, ஐவதுகுடி கிராமத்தில் எனக்கு சொந்தமான 2 ஏக்கர் 40 சென்ட் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்து விட்டனர். இதை மீட்டு தரக்கோரி 11 ஆண்டுகளாக மனு கொடுத்து வருகிறேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகள், அமைச்சர்கள் என இதுவரை நான் கொடுத்த மனுக்களின் மொத்த எடை 13 கிலோ ஆகும்.

    இதோ அந்த மனுக்களின் நகல்கள். நல்லது நடக்க வேண்டும் என்றால் தீக்குளிக்கத்தான் செய்யணும். 11 ஆண்டுகளுக்கு முன்பு நான் குண்டாக இருந்தேன். மனுகொடுக்க அலைந்து மெலிந்து விட்டேன் என்றார்.

    உடனே கலெக்டர் தண்டபாணி, தீக்குளித்து விடாதீர்கள், மனு மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என்றார். பின்னர் அந்த மூதாட்டி மகனுடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. #Tamilnews
    ×