அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலி

பெருந்துறை, பவானி ரோடு பகுதியில் ராமாத்தாள் ரோட்டோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அடையாளம் தெரியாத ஒரு வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலி
Published on

பெருந்துறை:

பெருந்துறை, ஈரோடு ரோடு வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி ராமாத்தாள் (வயது 74). இவர் தனது பேத்தியின் வீட்டில் குடியிருந்து வருகிறார்.

சம்பவத்தன்று இரவு 9 மணி அளவில் பெருந்துறை, பவானி ரோடு பகுதியில் ரோட்டோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத ஒரு வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட அவரை உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த ராமாத்தாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறிந்த பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com