என் மலர்

  நீங்கள் தேடியது "jewellery flush"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 18 பவுன் நகையை மோட்டார் சைக்கிள் திருடன் வழிப்பறி செய்தான்.

  விருதுநகர்:

  சிவகாசி ஞானகிரி சாலையை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன், டிபார்ட் மெண்ட் ஸ்டோர் நடத்தி வருகிறார். இவரது மனைவி காளீஸ்வரி (வயது48).

  இவர் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். காரனேசன் பூங்கா பகுதியில் அவரது வாகனத்தின் பின்னால் இருசக்கர வாகனத்தில் ஒருவன் வந்தான்.

  அவன் கண்ணிமைக்கும் நேரத்தில் காளீஸ்வரியின் கழுத்தில் கிடந்த 18 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னலாய் மறைந்து விட்டான்.

  இதனால் அதிர்ச்சி அடைந்த காளீஸ்வரி போலீசில் புகார் செய்தார். சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டீக்கடையில் இருந்த பெண்ணிடம் பட்டப்பகலில் 7 பவுன் செயினை பறித்துச்சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

  மதுரை:

  மதுரை சிலைமான் அருகில் உள்ள புளியங்குளம் எல்.கே.டி. நகரைச் சேர்ந்த அய்யப்பன் மனைவி தனலட்சுமி (வயது54). இவர் மதுரை-ராமநாதபுரம் ரோட்டில் தனியார் மில் அருகே டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

  இந்த நிலையில 2 இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். அவர்கள் தனலட்சுமியிடம் டீ வாங்கி குடித்து விட்டு காசு கொடுத்தனர்.

  இதையடுத்து தனலட்சுமி கல்லாவில் சில்லரை எடுப்பதற்காக திரும்பினார். அப்போது மர்ம வாலிபர்கள் தனலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.

  இதுதொடர்பாக தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

  பட்டப்பகலில் பெண் ஒருவரிடம் வழிப்பறி கொள்ளையர்கள் 7 பவுன் செயினை பறித்து சென்ற சம்பவம் சிலைமான் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒட்டன்சத்திரம் அருகே விலாசம் கேட்பதுபோல் பெண்ணிடம் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

  ஒட்டன்சத்திரம்:

  ஒட்டன்சத்திரம் அருகே காவேரியம்மாபட்டியை சேர்ந்தவர் செல்லமுத்து மனைவி செல்லம்மாள் (வயது50). சின்னகரட்டு பட்டி சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

  அப்போது அவ்வழியே வந்த 2 மர்ம நபர்கள் செல்லம்மாளிடம் முகவரி கேட்டனர். அவர் வழி கூறிக்கொண்டிருக்கும் போதே திடீரென செல்லம்மாள் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். அவர் சத்தம் போட்டார்.

  இருந்த போதும் சங்கிலியை பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில் பைக்கில் தப்பி சென்றனர். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

  ஒட்டன்சத்திரத்தில் மார்க்கெட் உள்ளதால் பல்வேறு பகுதிகளில் இருந்து வேலைக்கு ஆட்கள் வருகின்றனர். மேலும் வடமாநிலத்தில் இருந்தும் கட்டிட தொழிலுக்கு பணியாளர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.

  இவர்களில் சிலர் தனியாக உள்ள வீடு மற்றும் நடந்து செல்லும் பெண்களிடம் பணம், நகைகளை கொள்ளைடித்து விட்டு வெளியூர்களுக்கு தப்பி சென்று விடுகின்றனர்.

  இதனால் குற்றவாளிகளை பிடிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நீதிபதியின் வீட்டுக்குள் புகுந்து லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர்.

  மேலும் வீடு புகுந்து கொள்ளையடிப்பது, ஆட்டோ, மோட்டார் சைக்கிள் திருட்டு என குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

  எனவே போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலம் சூரமங்கலத்தில் கோவிலுக்கு சென்று திரும்பிய பெண்ணிடம் 4 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

  சேலம்:

  சேலம் ரெட்டியூர் அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் நாகலெட்சுமி (வயது 58). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் அவர் அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்தனர்.

  இதனால் அதிர்ச்சி அடைந்த நாகலெட்சுமி திருடன்...திருடன்... என்று சத்தம் போட்டார். உடனே சுதாரித்துக் கொண்ட மர்ம நபர்கள் பறித்த செயினுடன் மோட்டார் சைக்கிளில் அதே வேகத்தில் தப்பினர்.

  இதனால் கதறி அழுது புரண்ட நாகலெட்சுமி சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

  ஏற்கனவே கடந்த 10 நாட்களுக்கு முன்பு சேலம் மாநகரில் சூரமங்கலம், அழகாபுரம், கன்னங்குறிச்சி ஆகிய 3 இடங்களில் ஒரே நாளில் 3 பெண்களிடம் செயின் பறித்த நிலையில் தற்போது நடந்த இந்த செயின் பறிப்பு சம்பவம் பெண்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சர்க்கஸ் பார்க்கச் சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்துச் சென்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

  மதுரை:

  மதுரை அழகப்பன் நகரைச் சேர்ந்த முத்துராமன் மனைவி லதா (வயது 49). இவர் அய்யர்பங்களா பகுதியில் நடைபெற்ற சர்க்கஸ் பார்ப்பதற்காக சென்றார்.

  பஸ்சில் இருந்து இறங்கி புதுநத்தம் ரோட்டில் நடந்து சென்றபோது 2 மோட்டார் சைக்கிளில் 6 பேர் வந்தனர். அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி லதா அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர்.

  இது குறித்து தல்லாகுளம் போலீசில், லதா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில், நகை பறித்ததாக கே.புதூர் குட்டை கார்த்திக், வண்டியூர் சேவுகப் பெருமாள், தெற்குவாசல் தினேஷ், ஆனையூர் பிரகாஷ், காரைக்குடி சூடாமணிபுரம் காளிமுத்து, வில்லாபுரம் மொட்டை செல்வம் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  போலீஸ்காரர் மனைவியிடம் 8 பவுன் தங்கச் சங்கிலியை வழிப்பறி செய்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

  மதுரை:

  மதுரை ஒத்தக்கடை அய்யப்பன் நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி அமுது (வயது 32). செந்தில்குமார் ஒத்தக்கடை போலீஸ் நிலையத்தில் போலீஸ் காரராக உள்ளார்.

  இந்த நிலையில் அமுது சாமி கும்பிடுவதற்காக அருகில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்றார்.

  அங்குள்ள விநாயகர் கோவில் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம மனிதன் அமுதுவின் கழுத்தில் கிடந்த 8 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.

  இது தொடர்பாக அமுது ஒத்தக்கடை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் புகழேந்தி வழக்குப்பதிவு செய்து அமுதுவிடம் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ற கொள்ளையரை வலைவீசி தேடி வருகிறார்.

  போலீஸ்காரர் மனைவியிடமே கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒரத்தநாடு அருகே நள்ளிரவில் பெண்ணிடம் 7 பவுன் நகையை கொள்ளையர்கள் பறித்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  ஒரத்தநாடு:

  தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கருக்காடிப்பட்டியை சேர்ந்தவர் புகழ்வேந்தன் (வயது 38). விவசாயி. இவரது மனைவி மேனகா (30). சமீபத்தில் வீசிய கஜா புயலில் புகழ்வேந்தனின் வீடு சேதமாகி விட்டது.

  இதைத்தொடர்ந்து புகழ்வேந்தன் குடும்பத்தினர் வடக்கூரில் உள்ள அவரது மாமனார் ரெங்கசாமி வீட்டுக்கு சென்று அங்கு தங்கி உள்ளனர்.

  இந்த நிலையில் நேற்று இரவு ரெங்கசாமி வீட்டில் புகழ்வேந்தன், அவரது மனைவி மேனகா உள்ளிட்ட அனைவரும் தூங்கினர். அப்போது நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்த 3 கொள்ளையர்கள் மேனகா அணிந்திருந்த 7 பவுன் செயினை பறித்தனர். இதில் திடுக்கிட்டு எழுந்த மேனகா திருடன் திருடன் என்று சத்தம் போட்டார். இதனால் விழித்து கொண்ட அவரது குடும்பத்தினர் திருட்டில் ஈடுபட்ட 3 கொள்ளையர்களை விரட்டி சென்றனர். ஆனால் அவர்கள் இருளில் ஓடி மறைந்து தப்பி விட்டனர்.

  இந்த துணிகர திருட்டு பற்றி மேனகா ஒரத்தநாடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆசிரியையிடம் 2 வாலிபர்கள் நகை பறித்து சென்ற சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  கும்பகோணம்:

  தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த ஆவூர் ஆலுவம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி கவிதா (வயது 31). இவர் நீடாமங்கலம் அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

  இந்த நிலையில் நேற்று இரவு கவிதா தனது தாய் பார்வதியுடன் கும்பகோணம் சென்றார். அங்கு கடைவீதியில் பொருட்கள் வாங்கி கொண்டு மொபட்டியில் தாயுடன் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.

  அப்போது பட்டீஸ்வரம் அருகே தேனாம்படுகை என்ற இடத்தில் வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கவிதாவை வழிமறித்தனர். பின்னர் திடீரென அவர்கள் 2 பேரும், கவிதா கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர்.

  இதுபற்றி கவிதா, பட்டீஸ்வரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஆசிரியையிடம் 2 வாலிபர்கள் நகை பறித்து சென்ற சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருச்சி அருகே நள்ளிரவில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 15 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
  டால்மியாபுரம்:

  திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் டால்மியாபுரம் அருகே உள்ள பழனியாண்டி நகரை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 52) தனியார் சிமெண்ட் ஆலை ஊழியர். இவரது மனைவி சாந்தி. நேற்றிரவு இருவரும் வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். 

  அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் , வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் தூங்கி கொண்டிருந்த   ஜெய்சங்கரை சரமாரியாக தாக்கி விட்டு, சாந்தி கழுத்தில் அணிந்திருந்த 15 பவுன் மதிப்புள்ள தங்க தாலி செயினை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். 

  இது குறித்து சாந்தி கல்லக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து லால்குடி இன்ஸ்பெக்டர் முத்துக்குமார்,  கல்லக்குடி சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் லால்குடி டி.எஸ்.பி. ராஜசேகரும் சென்று பார்வையிட்டார். கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் யாரென்று விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெண்ணிடம் 7 பவுன் நகை மற்றும் செல்போனை பறித்த சென்னை வாலிபர் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

  திருவள்ளூர்:

  மணவாளநகர் சப்-இன்ஸ் பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் ஒண்டிக்குப்பம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.

  அவர்கள் சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த கோட்டீஸ்வரன், வியாசர்பாடியை சேர்ந்த மணிகண்டன் என்பதும் அவர்கள் வெங்கத்தூர் அருகே பெண் ஒருவர் அணிந்திருந்த 7 சவரன் நகை மற்றும் செல்போனை பறித்து சென்றதும் தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஊத்தங்கரை அருகே தந்தை கண்முன் நர்சை தாக்கி நகை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
  ஊத்தங்கரை:

  ஊத்தங்கரை அருகே சிங்காரப்பேட்டையை அடுத்த ரெட்டியூரை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 50). விவசாயி. இவருடைய மகள் விந்தியா(23). நர்சு. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆறுமுகம் தனது மகள், தம்பி மணிவாசன் ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் ரெட்டியூரில் இருந்து சிங்காரம்பேட்டைக்கு சென்றார். அப்போது பெரிய தள்ளப்பாடி அருகே சென்ற போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதினர். இதில் தடுமாறி இவர்கள் 3 பேரும் கீழே விழுந்தனர்.

  உடனே அந்த மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் இவர்கள் 3 பேரையும் தகாத வார்த்தைகளால் திட்டியும், விந்தியாவை கத்தியால் குத்தி அவரது தந்தை கண்முன்னே அவர் அணிந்து இருந்த 2 பவுன் நகையை மிரட்டி பறித்து கொண்டனர். அது மட்டுமின்றி அந்த வாலிபர்கள் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னர் அந்த வாலிபர்கள் அதே மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

  கத்திக்குத்தில் காயம் அடைந்த விந்தியா ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னசாமி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்.

  விசாரணையில் தந்தை கண்முன் நர்சை தாக்கி நகையை பறித்தது பெரிய தள்ளப்பாடியை சேர்ந்த ஸ்ரீசாந்த்(24), வினோத் ஆகிய 2 பேர் என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்ற வேறு ஏதேனும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு இருக்கிறார்களா? எனவும் விசாரணை நடக்கிறது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கல்லூரி மாணவியிடம் பைக்கில் வந்து நகை பறித்த வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

  திருப்பரங்குன்றம்:

  திருப்பரங்குன்றத்தை அடுத்த தென்பரங்குன் றத்தைச் சேர்ந்தவர் பால்பாண்டி, ரெயில்வே ஊழியர். இவரது மகள் வித்யா (வயது21). பசுமலையில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

  நேற்று மாலை இவர் நிலையூர் பிரிவு சாலையில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென்று வித்யா அணிந்திருந்த 1½ பவுன் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.

  இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த வாலிபர்களை தேடி வருகிறார்கள்.

  இதேபோல் எஸ்.எஸ்.காலனி துரைச்சாமி நகர் ஷாலினி தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (62). கூட்டுறவு வங்கியில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

  நேற்று முன்தினம் இவர் குடும்பத்துடன் தூத்துக்குடியில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். இன்று காலை வீடு திரும்பிய அவர்கள் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

  வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 10 பவுன் நகை கொள்ளைபோய் இருப்பது தெரியவந்தது.

  இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.