என் மலர்

  செய்திகள்

  திருச்சி அருகே தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு
  X

  திருச்சி அருகே தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருச்சி அருகே நள்ளிரவில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 15 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
  டால்மியாபுரம்:

  திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் டால்மியாபுரம் அருகே உள்ள பழனியாண்டி நகரை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 52) தனியார் சிமெண்ட் ஆலை ஊழியர். இவரது மனைவி சாந்தி. நேற்றிரவு இருவரும் வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். 

  அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் , வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் தூங்கி கொண்டிருந்த   ஜெய்சங்கரை சரமாரியாக தாக்கி விட்டு, சாந்தி கழுத்தில் அணிந்திருந்த 15 பவுன் மதிப்புள்ள தங்க தாலி செயினை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். 

  இது குறித்து சாந்தி கல்லக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து லால்குடி இன்ஸ்பெக்டர் முத்துக்குமார்,  கல்லக்குடி சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் லால்குடி டி.எஸ்.பி. ராஜசேகரும் சென்று பார்வையிட்டார். கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் யாரென்று விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  Next Story
  ×