search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "circus"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கிராம மக்கள் அனைவரும் சிறுமிக்கு சந்தன நலங்கு மற்றும் குங்குமம் வைத்து, பன்னீர் தெளித்து வாழ்த்தினர்.
    • சீர்வரிசை பொருட்களை பெற்றுக்கொண்ட ரத்தினம் குடும்பத்தினர் கிராம மக்களுக்கு நன்றி தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    செய்யாறு:

    செங்கல்பட்டு மாவட்டம், உத்திரமேரூர் அருகே உள்ள மதுராந்தகம் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம். இவர் 'ராசாத்தி சர்க்கஸ்' என்ற பெயரில் கிராமம், கிராமமாக சென்று கடந்த 40 ஆண்டுகளாக சர்க்கஸ் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்.

    இவருடன் மனைவி சுலோச்சனா, மகன், 2 மகள்கள் மற்றும் உறவினர்கள் என 10 பேர் சர்க்கஸ் தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

    ரத்தினம் குழுவினர் கடந்த 23-ந் தேதி திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அருகே உள்ள மோரணம் கிராமத்தில் சர்க்கஸ் நிகழ்ச்சியை நடத்த வந்தனர்.

    பின்னர், அங்குள்ள பஜனை கோவில் தெருவில் டெண்ட் அமைத்து கடந்த 4 நாட்களாக மாலை நேரத்தில் சர்க்கஸ் சாகசங்கள் செய்து வந்தனர்.

    இந்நிலையில், ரத்தினத்தின் இளைய மகள் ராசாத்தி (வயது 15) என்பவர் நேற்று முன்தினம் பூப்பெய்தினார்.

    இந்த தகவலறிந்த அப்பகுதி மக்கள் பூப்பெய்திய சிறுமி ராசாத்திக்கு கிராம மக்கள் சார்பில் மஞ்சள் நீராட்டு நடத்துவது என முடிவு செய்தனர்.

    சிறுமிக்கு புதிய சேலை, மாலை, கண்ணாடி, வளையல்கள், பொட்டு வகைகள், மை, பவுடர், பழங்கள், அரிசி, மளிகை பொருட்கள் என 50 வகையான சீர்வரிசை பொருட்களை வாங்கினர்.

    தொடர்ந்து, நேற்று மாலை கிராமத்தை சேர்ந்த பெரியவர்கள், பெண்கள், இளைஞர்கள் மேளவாத்தியங்களுடன் ஊர்வலமாக சென்று, சர்க்கஸ் கூடாரத்தில் அமர்ந்திருந்த சிறுமி ராசாத்திக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.

    மேலும், சிறுமியை மஞ்சள் நீராட்டி நாற்காலியில் அமர வைத்து அவரது மாமா ராம்ராஜை மாலை அணிவித்து வாழ்த்த செய்தனர். தொடர்ந்து, கிராம மக்கள் அனைவரும் சிறுமிக்கு சந்தன நலங்கு மற்றும் குங்குமம் வைத்து, பன்னீர் தெளித்து வாழ்த்தினர்.

    இதைகண்ட சிறுமி ராசாத்தி, தந்தை ரத்தினம், தாயார் சுலோச்சனா மற்றும் உறவினர்கள் நெகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

    அவர்கள் எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.

    சீர்வரிசை பொருட்களை பெற்றுக்கொண்ட ரத்தினம் குடும்பத்தினர் கிராம மக்களுக்கு நன்றி தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    இந்த சம்வம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • மதுரை அய்யர்பங்களாவில் சாகச நிகழ்ச்சிகளுடன் மக்களை மகிழ்விக்கும் கிரேட் இந்தியன் சர்க்கஸ் நிகழ்ச்சி நடக்கிறது.
    • குடும்பத்துடன் வர மேலாளர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

    மதுரை

    கிரேட் இந்தியன் சர்க்கஸ் நிறுவன மேலாளர்கள் வி.தேவராஜ், ஏ.எம்.எஸ். நாசர் கூறியதாவது:-

    ஆசியாவிலேயே மிகப் பெரியதும், உலகப்புகழ் பெற்றதுமான கிரேட் இந்தி யன் சர்க்கஸ் நிறுவனம் சுமார் 45 ஆண்டுகள் பாரம் பரியம் மிக்கதாகும். 100-க் கும் மேற்பட்ட இந்திய, மலே சிய, ரஷ்ய நாட்டு அனுபவ மிக்க சாகச வீரர்களின் மயிர் கூச்செரியும் நிகழ்ச்சிக ளுக்கு பொதுமக்க ளிடம் எப்போதுமே தொடர்ந்து ஆதரவு இருந்து வருகிறது.

    கடந்த 5 ஆண்டு இடை வெளிக்கு பிறகு மதுரையில் மீண்டும் மக்களை மகிழ் விக்க வந்துள்ளது கிரேட் இந்தியன் சர்க்கஸ். அதன் படி செப்டம்பர் 15-ந்தேதி முதல் மதுரை அய்யர் பங் களா கிருஷ்ணன் கோவில் மைதானத்தில் கிரேட் இந்தி யன் சர்க்கஸ் நிறுவனத்தா ரின் சர்க்கஸ் நிகழ்ச்சி தொடங்கி நடந்து வருகிறது.

    தினசரி பகல் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணி என மூன்று காட்சிக ளாக நடத்தப்படுகிறது. பகை, பள்ளி விடு முறை காலங்களை முன் னிட்டு இந்த சர்க்கஸ் நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளன. பீமல் பார் விளை யாட்டுகள், கலைஞர்கள் பங்கேற்கும் சர்க்கஸ் பரேடு, நேபாள கலைஞரின் ஜிக் விங் விளையாட்டு, கோமா ளிகளின் நகைச்சுவை விளையாட்டுகள்,

    அரேபிய நாட்டு ஒட்டகங் களின் சாகசங்கள், கேரள அழகிகளின் சைக்கிள் சாக சங்கள், ஆஸ்திரேலியா நாட்டு கலைஞரிடம் பயிற்சி பெற்ற கலைஞரின் அக்ரோ பட் எனப்படும் மயிர் கூச் செரியும் சாகச நிகழ்ச்சி, குதிரை சாகசங்கள், மரண கூண்டிற்குள் 3 பேர் செய்து காட்டும் அதிபயங்கர நிகழ்ச்சிகள், பொமேரியன் நாய்கள் செய்து காட்டும் வித்தைகள்,

    மணிப்பூர் மாநில கலை ஞர்கள் பங்கேற்கும் கத்தி மேல் சாகசங்கள், பிரமிப் பூட்டும் ரோப் பேலன்ஸ், மிகச்சிறிய சைக்கிள் சாகசங் கள், கொல்கத்தா அழகிக ளின் துப்பாக்கி சூட்டிங், மகாராஷ்டிரா அழகிகளின் குரூப் டெண்டல் பேலன்சிங், 8 அழகிகள் பங்கேற்கும் சாகசங்கள், பிரமிப்பூட்டும் அதிபயங்கர பயர் டான்ஸ், மணிப்பூர் கலைஞர்களின் சேர் பேலன்ஸ் என எண் ணற்ற சாசக நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க குடும்பத்தின ருடன் வருகை தாருங்கள்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • கிரேட் இந்தியன் சர்க்கஸ் கலைஞர்கள் சாகச நிகழ்ச்சி இன்று நடக்கிறது.
    • கடந்த 5 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் மதுரையில் மக்களை மகிழ்விக்க வந்துள்ளது.

    மதுரை

    பொழுது போக்கு அம் சங்களில் சர்க்கஸ் சாகச நிகழ்ச்சிகளுக்கு என்றுமே தனிப்ெபருமை உண்டு. அந்த வகையில் ஆசியாவி லேயே மிக்பெரியதும், உல கப்புகழ் பெற்றதுமான கிரேட் இந்தியன் சர்க்கஸ் நிறுவனம் சுமார் 45 ஆண்டு கள் பாரம்பரியம் மிக்கதா கும். நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய, மலேசிய மற்றும் ரஷ்ய நாட்டு அனுபவமிக்க சாகச வீரர்களின் மயிர்ச் கூச்செரியும் நிகழ்ச்சிகளுக்கு பொதுமக்களிடம் எப்போ துமே அதிக ஆதரவு உண்டு.

    கடந்த 5 ஆண்டு இடை வெளிக்கு பிறகு மீண்டும் மதுரையில் மக்களை மகிழ் விக்க வந்துள்ளது கிரேட் இந்தியன் சர்க்கஸ். அதன் படி செப்டம்பர் 15-ந்தேதி முதல் மதுரை அய்யர்பங் களா கிருஷ்ணன் கோவில் மைதானத்தில் கிரேட் இந்தி யன் சர்க்கஸ் நிறுவனத்தா ரின் சர்க்கஸ் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது.

    தினசரி மூன்று காட்சி யாக சர்க்கஸ் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. பகல் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணிக்கு காட்சிகள் நடை பெறும். பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை காலங் களை முன்னிட்டு இந்த சர்க்கஸ் நிகழ்ச்சிக்கு ஏற்பா டுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 100-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மற்றும் ஊழி யர்கள் பணிபுரியும் இந்த நிறுவனத்தில் புதிய நிகழ்ச்சி–களும் அரங்கேற உள்ளன.

    பீமல் பார் விளையாட்டு கள், கலைஞர்கள் பங்கேற் கும் சர்க்கஸ் பைரைடு (அணிவகுப்பு), நேபாள் கலைஞரின் ஜிக்விங் விளை யாட்டு, கோமாளிகளின் நகைச்சுவை விளையாட்டு கள், அரேபிய நாட்டு ஒட்ட கங்களின் சாகசங்கள், கேரள அழகிகளின் சைக் கிள் சாகசங்கள், ஆஸ்திரே லியா நாட்டு கலைஞரிடம் பயிற்சி பெற்ற கலைஞரின் அக்ரோபட் எனப்படும் மயிர்க்கூச்செரியும் சாகச நிகழ்ச்சி,

    குதிரை சாகசங்கள், மரண கூண்டிற்குள் 3 பேர் செய்து காட்டும் அதிபயங்கர நிகழ்ச்சிகள், பொமேரியன் நாய்கள் செய்து காட்டும் வித்தைகள், மணிப்பூர் மாநில கலைஞர்கள் பங் கேற்கும் கத்தி மேல் சாகசங்கள், பிரமிப்பூட்டும் ரோப் பேலன்ஸ், மிகச்சிறிய சைக்கிள் சாகசங்கள், கொல் கத்தா அழகிகளின் துப்பாக்கி சூட்டிங், மகாராஷ்டிரா அழகிகளின் குரூப் டெண்டல் பேலன்சிங், 8 அழகிகள் பங்கேற்கும் சாக சங்கள், பிரமிப்பூட்டும், அதிபயங்கர பயர் டான்ஸ், மணிப்பூர் கலைஞர்களின் சேர் பேலன்ஸ்,ேபான்ற எண்ணற்றி சாசக நிகழ்ச்சி களை கண்டுகளிக்க குடும் பத்தினருடன் வருமாறு கிரேட் இந்தியன் சர்க்கஸ் நிறுவன மேலாளர்கள் வி.தேவராஜ், ஏ.எம்.எஸ்.நாசர் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • 30 அடி உயரத்தில் இரண்டு துணிகளை கொண்டு பெண்களின் சாகச நிகழ்ச்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது.
    • மதியம் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணி காட்சிகளாக ௩ காட்சிகள் நடைபெறுகிறது.

    பெருமாநல்லூர்:

    திருப்பூர் பி.என்.ரோடு பூலுவபட்டியில் அப்போலோ சர்க்கஸ் நேற்று (திங்கட்கிழமை) மாலை முதல் தொடங்கப்பட்டது. இதில் மாநகராட்சி மேயர் என். தினேஷ்குமார் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் திருப்பூர் வடக்கு சட்ட மன்ற தொகுதி கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ., துணை மேயர் எம்.கே.எம்.பாலசுப்பிரமணியன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    சர்க்கஸ் முதல் நாளிலே மக்கள் அதிக அளவில் கலந்து கொண்டு பார்த்து ரசித்தனர். இந்தியாவிலேயே மிகவும் பழமையானது அப்போலோ சர்க்கஸ். பல்வேறு நாடுகளில் நிகழ்ச்சி நடத்தி உலக புகழ் பெற்றது. அந்தரத்தில் ஸ்கை டைவ் நிகழ்ச்சி, கலைஞர்களின் அணிவகுப்பு, 30 அடி உயரத்தில் இரண்டு துணிகளை கொண்டு பெண்களின் சாகச நிகழ்ச்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது. இடையிடையே கோமாளிகளின் நகைச்சுவை சிரிக்க வைக்கிறது.

    இந்த சர்க்கஸ் நிகழ்ச்சி குறித்து சர்க்கஸ் மேலாளர் பிரதீப் குமார் கூறியதாவது:- திருப்பூர் பி.என்.ரோடு பூலுபட்டியில் அப்போலோ சர்க்கஸ் தொடங்கப்பட்டுள்ளது . பல மாநிலங்களை சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீரர்கள் சாகச நிகழ்ச்சிகளை நிகழ்த்த உள்ளனர்.

    அந்தரத்தில் பார் விளையாட்டு, மரணம் கூண்டில் 3 பேர் பைக் சவாரி, கத்தி மேல் படுத்து சாகசம், நாவல் பல்டி , சீன கலைஞர்களிடம் பயிற்சி பெற்ற 12-க்கும் மேற்பட்ட மணிப்பூர் கலைஞர்களின் சேர் அக்ரோபேட், ஸ்டிக் ஜக்விங், ரோப் பேலன்ஸ், ஸ்பிரிங் நட் சாகசம் உள்பட 25 வகையான சாகச நிகழ்ச்சிகள் தினமும் நடைபெற உள்ளது.

    குழந்தைகளை மகிழ்விக்க கோமாளிகளின் தொகுப்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது. தினமும் 3 காட்சிகளாக நடைபெறுகிறது. மதியம் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணி காட்சிகளாக நடைபெறுகிறது. டிக்கெட் கட்டணமாக முதல் வகுப்பு 200, இரண்டாம் வகுப்பு 150, மூன்றாம் வகுப்பு 100 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் விவரங்களுக்கு 96776 62229, 9790493242 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுரையில் கிரேட் பாம்பே சர்க்கஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
    • அமெரிக்கா நாட்டு கிளிகளின் சாகசங்கள் போன்ற சிறப்பு அம்சங்கள் இந்த சர்க்கசில் இடம் பெறுகின்றன.

    மதுரை

    ''ஏழாம் அறிவு'' திரைப்பட புகழ் '' தி கிரேட் பாம்பே சர்க்கஸ்'' 30 ஆண்டுகளுக்கு பின்னர் மதுரை புதூர் சி.எஸ்.ஐ. மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து பாம்பே சர்க்கஸ் நிறுவன தலைவர் சஞ்சீவ் பாலகோபால் கூறுகையில், அந்தரத்தில் பறக்கும் ப்ளேடிரிபிள் எனப்படும் விளையாட்டு, ஸ்கேட்டிங் பந்துகளை காலால் உதைத்து சாகசம் செய்தல், ஸ்கைவாக், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா நாட்டு கிளிகளின் சாகசங்கள் போன்ற சிறப்பு அம்சங்கள் இந்த சர்க்கசில் இடம் பெறுகின்றன.

    மேலும், 8 பந்துகளை கைகளால் லாவகமாக பிடிக்கும் ஜக்லின் விளையாட்டு, லூஸ்வேர் எனப்படும் கப் அன் சாசர் விளையாட்டு, ஜோக்கர்களின் நகைச்சுவை விளையாட்டுகள் இந்த சர்க்கசில் சிறப்பு அம்சமாக இருக்கும்.

    வெளிநாடு, வெளி மாநிலங்களை சேர்ந்த 50-க்கும் ேமற்பட்ட வீரர், வீராங்கனைகள் பல்வேறு சாகச விளையாட்டுகளை நிகழ்த்துகின்றனர். கிளி, புறா, நாய்கள் பல்வகையான வித்தைகளை காட்டி பார்வையாளர்களை கவரும் வகையில் உள்ளது.

    தி கிரேட் பாம்பே சர்க்கஸ் தினமும் பகல் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7மணி என 3 காட்சிகளாக நடத்தப்பட உள்ளது. ரூ.100, ரூ.150, ரூ.200, ரூ.300 ஆகிய கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சர்க்கஸ் பார்க்கச் சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்துச் சென்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை அழகப்பன் நகரைச் சேர்ந்த முத்துராமன் மனைவி லதா (வயது 49). இவர் அய்யர்பங்களா பகுதியில் நடைபெற்ற சர்க்கஸ் பார்ப்பதற்காக சென்றார்.

    பஸ்சில் இருந்து இறங்கி புதுநத்தம் ரோட்டில் நடந்து சென்றபோது 2 மோட்டார் சைக்கிளில் 6 பேர் வந்தனர். அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி லதா அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர்.

    இது குறித்து தல்லாகுளம் போலீசில், லதா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில், நகை பறித்ததாக கே.புதூர் குட்டை கார்த்திக், வண்டியூர் சேவுகப் பெருமாள், தெற்குவாசல் தினேஷ், ஆனையூர் பிரகாஷ், காரைக்குடி சூடாமணிபுரம் காளிமுத்து, வில்லாபுரம் மொட்டை செல்வம் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

    ×