search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Teenager killed in"

    • வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் போன்ற விவரம் தெரிய வில்லை.

    ஈரோடு:

    ஈரோடு கே.கே.நகர் அருகே உள்ள தண்ட வாளத்தில் வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து ஈரோடு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே அந்த வாலிபர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இறந்த வாலிபருக்கு 30 வயது இருக்கும். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் போன்ற விவரம் தெரிய வில்லை.

    சம்பவ இடத்தில் ரெயில் வருவதை கவனிக்காமல் தண்ட வாளத்தை கடந்த போது அடிபட்டு இறந்தது தெரியவந்தது.

    இறந்த நபர் வெள்ளை நிற முழுக்கை சட்டையும், கருப்பு நிற ஜீன்ஸ் பேன்டும் அணிந்திருந்தார்.

    இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அடையாளம் தெரியாத வந்த வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • இதில் சம்பத் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அடுத்து நால்ரோடு டானா புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் (42). இவர் பால் சொசைட்டி நடத்தி வருகிறார்.

    இவர் பால் எடுத்து வருவதற்காக நால் ரோட்டில் இருந்து செல்லப்பம்பாளையத்திற்கு கோவை ரோட்டில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது அந்த வழியாக அடையாளம் தெரியாத வந்த வாகனம் அவர் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் சம்பத் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்சு மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இவருக்கு சுகுணா என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.

    இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அடையாளம் தெரியாத வாகனம் கபிலன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • நண்பர் சத்யா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    ஈரோடு,

    சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்தவர் கபிலன் (30). இவர் இன்று அதிகாலை சேலத்தில் இருந்து கோவை செல்வதற்காக அவரது நண்பர் சத்யா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர்.

    அவர்கள் பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் கபிலன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட கபிலன் மற்றும் அவரது நண்பர் சத்யா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் கபிலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பெருந்துறை போலீசார், விபத்தில் படுகாயம் அடைந்த சத்யாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான கபிலனின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கார் மற்றும் டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி கொண்டது.
    • இதில் ஹரி கேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் ஊராட்சி கோட்டை கே. என். பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் தனியார் நூற்பாலையில் மேலாளராக பணி புரிந்து வருகிறார்.

    இவரது மகன் ஹரி கேஸ்வரன் (22). விமான பணிக்கான நேர்முக தேர்வுக்கு செல்வதற்காக பவானியில் இருந்து காரில் கோவைக்கு சென்றார். காரை அவரே ஓட்டி சென்றார்.

    தொடர்ந்து அவர் நம்பியூர் அருகே உள்ள பூச்ச நாயக்கன்பாளையம் பிரிவு அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக எதிரில் ஒரு டிப்பர் லாரி வந்தது.

    அப்போது எதிர்பாராத விதமாக கார் மற்றும் டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி கொண்டது. இதில் கார் நொறுங்கி இருபாடுகளில் சிக்கி ஹரி கேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதை கண்ட பொது மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீ சார் சம்பவ இடத்துக்கு வந்து இடிபாடுகளுக்குள் சிக்கிய ஹரிகேஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • விபத்தில் சசிகுமார் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • விபத்தில் படுகாயமடைந்த பரத்தை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு செங்கோட ம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

    இதேபோல் ஈரோடு சுத்தானந்தா நகரை சேர்ந்த பரத் (27) என்பவர் வேலை முடித்து கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.

    வெட்டுக்காட்டு வலசு பிரிவு அருகே வந்தபோது பரத் முன்னாள் சென்ற வாகனத்தை முந்தி செல்வதற்காக மோட்டார் சைக்கிளை ஏறி வந்த போது எதிர்பாராத விதமாக எதிர் திசையில் வந்து கொண்டிருந்த சசிகுமார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் சசிகுமார் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பரத்திற்கு மூக்கில் அடிபட்டு ரத்த காயம் ஏற்பட்டது.

    இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சசிகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் படுகாயமடைந்த பரத்தை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

    இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.

    • அடையாளம் தெரியாத வாகனம் மோதி ரமேஷ் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தார்.
    • இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி ஒன்றியம் நஞ்சை ஊத்துக்குளி ஊராட்சிக்குட்பட்ட காந்திஜி வீதியை சேர்ந்தவர் ரமேஷ் (35). டிரைவராக பணியாற்றி வருகிறார்.

    நள்ளிரவில் நஞ்சை ஊத்துக்குளி அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான மீன் பண்ணை அருகில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ரமேஷ் சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தார்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரமேஷ் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×