வாகனம் மோதி வாலிபர் பலி

அடையாளம் தெரியாத வாகனம் கபிலன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. நண்பர் சத்யா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
வாகனம் மோதி வாலிபர் பலி
Published on

ஈரோடு,

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்தவர் கபிலன் (30). இவர் இன்று அதிகாலை சேலத்தில் இருந்து கோவை செல்வதற்காக அவரது நண்பர் சத்யா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர்.

அவர்கள் பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் கபிலன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட கபிலன் மற்றும் அவரது நண்பர் சத்யா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் கபிலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பெருந்துறை போலீசார், விபத்தில் படுகாயம் அடைந்த சத்யாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான கபிலனின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com