கார்-டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி

கார் மற்றும் டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி கொண்டது.இதில் ஹரி கேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
கார்-டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி வாலிபர் பலி
Published on

நம்பியூர்:

ஈரோடு மாவட்டம் ஊராட்சி கோட்டை கே. என். பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் தனியார் நூற்பாலையில் மேலாளராக பணி புரிந்து வருகிறார்.

இவரது மகன் ஹரி கேஸ்வரன் (22). விமான பணிக்கான நேர்முக தேர்வுக்கு செல்வதற்காக பவானியில் இருந்து காரில் கோவைக்கு சென்றார். காரை அவரே ஓட்டி சென்றார்.

தொடர்ந்து அவர் நம்பியூர் அருகே உள்ள பூச்ச நாயக்கன்பாளையம் பிரிவு அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக எதிரில் ஒரு டிப்பர் லாரி வந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக கார் மற்றும் டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி கொண்டது. இதில் கார் நொறுங்கி இருபாடுகளில் சிக்கி ஹரி கேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதை கண்ட பொது மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீ சார் சம்பவ இடத்துக்கு வந்து இடிபாடுகளுக்குள் சிக்கிய ஹரிகேஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com