மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் பலி

விபத்தில் சசிகுமார் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.விபத்தில் படுகாயமடைந்த பரத்தை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர்.
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் பலி
Published on

ஈரோடு:

ஈரோடு செங்கோட ம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

இதேபோல் ஈரோடு சுத்தானந்தா நகரை சேர்ந்த பரத் (27) என்பவர் வேலை முடித்து கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.

வெட்டுக்காட்டு வலசு பிரிவு அருகே வந்தபோது பரத் முன்னாள் சென்ற வாகனத்தை முந்தி செல்வதற்காக மோட்டார் சைக்கிளை ஏறி வந்த போது எதிர்பாராத விதமாக எதிர் திசையில் வந்து கொண்டிருந்த சசிகுமார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் சசிகுமார் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பரத்திற்கு மூக்கில் அடிபட்டு ரத்த காயம் ஏற்பட்டது.

இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சசிகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த பரத்தை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com