சாலை விபத்தில் தொழிலாளி பலி

அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பழனிசாமி மீது மோதி விட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பழனிசாமி உயிரிழந்தார்.
சாலை விபத்தில் தொழிலாளி பலி
Published on

பெருந்துறை:

திருப்பூர் மாவட்டம் பல்லகவுண்டன்பாளையம் ஓடக்காட்டைச் சேர்ந்த கருப்பன் மகன் பழனிசாமி (வயது 50). இவர் மரம் வெட்டும் கூலி தொழிலாளி.

இவர் கடந்த 27-ம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் பெருந்துறைக்கு வந்து விட்டு ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர் பெருந்துறை, குன்னத்தூர் ரோட்டில் சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக பழனிசாமி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் பலத்த காயமடைந்த பழனிசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பழனிசாமி உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com