search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Six dead"

    • முதல் இரண்டு தளங்களில் தங்கியிருந்தவர்கள் மூச்சு திணறி உயிரிழந்தனர்.
    • மின்சார வாகன விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ, தங்கும் விடுதிக்கு பரவியது

    செகந்திராபாத்:

    தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் நகரில் மின்சார ஸ்கூட்டர் விற்பனை நிலையம் உள்ளது. அங்குள்ள வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் பகுதியில் நேற்றிரவு தீ பிடித்தது. இந்த தீ அருகில் இருந்த 4 மாடிகள் கொண்ட தங்கும் விடுதிக்கு பரவியது. அப்போது அங்கு 40 பேர் தங்கியிருந்தனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்த விடுதியில் இருந்தவர்களை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


    கடும் புகை மூட்டம் காரணமாக அந்த விடுதியின் முதல் 2 தளங்களில் தங்கியிருந்த 7 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். பலர் விடுதியில் இருந்து கீழே குதித்தனர். இதில் காயடைந்தவர்கள் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும், மீட்பு பணி நடைபெற்று வருவதாக ஐதராபாத் வடக்கு மண்டல கூடுதல் டிஜிபி தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற தெலுங்கானா மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் டி. ஸ்ரீனிவாஸ் யாதவ் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்தினார். 

    இத்தாலியில் உள்ள நைட் கிளப்பில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. #ItalyStampede
    ரோம்:

    இத்தாலியில் அட்ரியாட்டிக் கடற்கரை நகரமான அங்கோனா அருகே உள்ள புகழ்பெற்ற ஒரு நைட் கிளப்பில் நேற்று இரவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ராப் பாடகர் சிபேரா எபஸ்தாவின் கச்சேரியைக் கண்டுகளிப்பதற்காக ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்தனர்.

    அப்போது, திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. முண்டியடித்துக்கொண்டு கூட்டத்தில் இருந்து வெளியேற சிலர் முயற்சித்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு சிலர் கீழே விழுந்தனர். அவர்களை கவனிக்காமல் மற்றவர்களும் எழுந்து அரங்கை விட்டு வெளியேறினர். இதனால் கூட்டத்தில் அடிபட்டும் மிதிபட்டும் பலர் காயமடைந்தனர்.



    நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    கச்சேரி நடைபெற்றபோது கூட்டத்தில் இருந்த யாரோ ஒரு நபர் திடீரென மிளகு ஸ்பிரேயை தெளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பயந்துபோன மக்கள் அவசர அவசரமாக வெளியேறியதால் நெரிசல் ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. #ItalyStampede
    கவுதமாலா தலைநகரை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ள பியுகோ எரிமலை வெடித்து சிதறியதில் ஆறு பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #Guatemala #Fuegovolcanoeruption

    கவுதமாலா சிட்டி:

    கவுதமாலா நாட்டின் தலைநகரனான கவுதமாலா சிட்டியில் இருந்து தென்மேற்கு பகுதியில் பியுகோ என்னும் எரிமலை உள்ளது. இந்த எரிமலை கடந்த சில நாட்களாக வெடித்து சிதறும் நிலையில் இருந்தது. இதனால் அதிலிருந்து கரும்புகை வெளியாகி வந்தன. இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்களை வெளியேறுமாறு அரசு அறிவித்தது.

    இந்நிலையில், இந்த எரிமலை நேற்றிரவு வெடித்து சிதறியது. அதிலிருந்து எரிமலை குழம்பு அனைத்து திசைகளிலும் வழிந்தன. இந்த எரிமலை வெடிப்பிற்கு பின்னர் இதுவரை 6 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

    வீடடு ஒன்றில் தீப்பிடித்ததில், ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர். மற்ற இரு சிறுவர்கள் எரிமலை வெடிப்பை பார்த்துக் கொண்டிருந்தபோது உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Guatemala #Fuegovolcanoeruption
    ×