செகந்திராபாத் நகரில் தங்கும் விடுதியில் தீ விபத்து- 7 பேர் பலி

முதல் இரண்டு தளங்களில் தங்கியிருந்தவர்கள் மூச்சு திணறி உயிரிழந்தனர்.மின்சார வாகன விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட தீ, தங்கும் விடுதிக்கு பரவியது
தீ விபத்து நடந்த பகுதி 
தீ விபத்து நடந்த பகுதி 
Published on

செகந்திராபாத்:

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் நகரில் மின்சார ஸ்கூட்டர் விற்பனை நிலையம் உள்ளது. அங்குள்ள வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் பகுதியில் நேற்றிரவு தீ பிடித்தது. இந்த தீ அருகில் இருந்த 4 மாடிகள் கொண்ட தங்கும் விடுதிக்கு பரவியது. அப்போது அங்கு 40 பேர் தங்கியிருந்தனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்த விடுதியில் இருந்தவர்களை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கடும் புகை மூட்டம் காரணமாக அந்த விடுதியின் முதல் 2 தளங்களில் தங்கியிருந்த 7 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். பலர் விடுதியில் இருந்து கீழே குதித்தனர். இதில் காயடைந்தவர்கள் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும், மீட்பு பணி நடைபெற்று வருவதாக ஐதராபாத் வடக்கு மண்டல கூடுதல் டிஜிபி தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற தெலுங்கானா மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் டி. ஸ்ரீனிவாஸ் யாதவ் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்தினார். 

X

Maalai Malar
www.maalaimalar.com